பக்கம்:வாழ்க்கை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வாழ்க்கை


(மிருகங்கள் இவ்வாறு உணர்வதில்லை; அந்த நிலையில்தான் அவனும் இருப்பான்.) மற்ற ஜீவன்களும் அவனும் ஒரே லட்சியத்தை நோக்கிப் போவதை அறிந்திருந்தும், சுயநல ஆசை தென்று பகுத்தறிவு உணர்ச்சி எடுத்துக் காட்டிய பின்பும், அவனுடைய வாழ்க்கை தனிப்பட்ட சுயநன்மையை மட்டும் நாடுவதாயிருக்க முடியாது. சில சமயங்களில் மனிதன் உடலின் நலனே தன் நலன் என்று கருதக் கூடும். அதற்குக் காரணம் அவனுடைய மிருக இயல்பின் செயல்களைத் தன் பகுத்தறிவு உணர்ச்சியின் இலட்சியமாகக் கருதி மயங்குதலேயாகும். கனவில் கண்டவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு விழிப்புள்ள நிலையில் ஒருவன் அவைகளைப் பின்பற்றி நடப்பது போன்றது இது.

இத்துடன் போலிப் போதனையும் இதையே வற்புறுத்தும்போது, அவன் மனம் குழப்பமடைகிறது.

ஆனால், பகுத்தறிவு உணர்ச்சி உடல் வாழ்வின் நன்மை அவனுடைய நலனன்று என்றும், அது அவன் வாழ்க்கையாக இருக்க முடியாது என்றும், இடைவிடாமல் எடுத்துக் காட்டிக்கொண்டே யிருக்கிறது. காலக் கிரமத்தில் அவன் உண்மையான நன்மையையும், வாழ்க்கையையும் அறிந்துகொண்டு, அவை தன் மிருக இயல்புக்கு வெளியேயுள்ளவை என்றும் புரிந்து கொள்கிறான்.

ஒரு மனிதன் தன் தனி நன்மையைத் தியாகம் செய்தல் வீரமான செயலென்றும், மதிப்புக்குரிய காரியமென்றும் ஜனங்கள் சாதாரணமாக எண்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/77&oldid=1123815" இலிருந்து மீள்விக்கப்பட்டது