பக்கம்:வாழ்க்கை.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
74
வாழ்க்கை
 

தறிவு உணர்ச்சிக்குப் பணிந்து இந்தத் தியாகத்தைச் செய்யாவிட்டால், ஒவ்வொரு மனிதனும் மரணத் தறுவாயில் இவ்வாறு செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். அப்போது மனிதன் தன் துன்பச் சுமைகளைத் தாங்க முடியாமல் ஒரே விஷயத்தை வேண்டித் தவிக்கிறான்; தன் உடல் வாழ்வு நசித்துப் போகும் வேதனையான உணர்ச்சியிலிருந்து தான் விடுதலையடைய வேண்டும் என்றும், இந்த நிலைமையிலிருந்து வேறு நிலைக்கு மாறி வாழ வேண்டும் என்றும் விரும்புகிறான்.

குதிரை ஒன்றை அதன் சொந்தக்காரன் லாயத்தை விட்டு வெளியே கொண்டு வரும்போது, அது தான் அடைபட்டிருந்த நிலையிலிருந்து நல்ல வெளிச்சத்தைப் பார்த்ததும், தனக்கு ஒருவாறு விடுதலை வந்துவிட்டது என்று களிப்படைகிறது. அந்த நேரத்தில் சொந்தக்காரன் அதை வண்டியோடு பிணைக்கிறான்: அதன் வாயிலுள்ள கடிவாளம் இழுக்கப்படுகிறது. அது நடந்து முன்னேற வேண்டும், தான் போவதோடு, பின்னாலுள்ள வண்டியையும் இழுத்துச் செல்ல வேண்டும். லாயத்திற்கு வெளியே வருகையில், தன் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் திரியக் கூடிய சுதந்திரம் வந்துவிட்டதாக அது எண்ணி யிருந்தால், இப்போது தன் கட்டுக்களை அறுத்துக் கொண்டு ஓடுவதற்காக அது துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்யும்; சில சமயங்களில் இதனால் உயிர் துறப்பதுமுண்டு. அப்படிச் சாகாமலிருந்தால், பிறகு அதற்கு இரண்டு வழிகள் தாம் உண்டு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/81&oldid=1122146" இருந்து மீள்விக்கப்பட்டது