பக்கம்:வாழ்க்கை.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
75
 

முரண்டு செய்யாமல் வண்டியை இழுக்கவேண்டும். பாரம் அதிகமா யில்லாம லிருப்பதைக் கவனித்து, இழுப்பது துயர மென்ற எண்ணத்தைக் கைவிட்டு, அதை ஓர் இன்பமாகக் கொள்ள வேண்டும்; அல்லது இடக்குச் செய்து அடங்காமல் துள்ள வேண்டும். உடனே சொந்தக்காரன் அதை அவிழ்த்து ஒரு சுவர்ப் பக்கம் கொண்டு போய்க் கட்டி, (மாடு கமலை யிழுப்பது போல்) அது மிதி - ரோதையை [1] மிதித்து உருட்டும் படி செய்வான். வண்டியை இழுத்தால் பல இடங்களுக்குச் செல்லலாம்; ரோதை மிதிப்பதில் இருந்த இடத்திலேயேயிருந்து வேலை செய்ய வேண்டும். எப்படியும் சொந்தக்காரனின் உத்தரவு-சட்டம் - நிறை வேறிவிடும். முதலாவது வழியில் குதிரை சந்தோஷமாக வேலை செய்யும். இரண்டாவது வழியில் அது இஷ்டமில்லாமல் வேதனையுடன் வேலை செய்யும். மனிதன் வாழ்க்கையில் பிரவேசிப்பதையும், அந்த வாழ்க்கையையும் இந்தக் குதிரை லாயத்திற்கு வெளியே கொண்டுவரப்படுவதற்கு ஒப்பிடலாம்.

மிருக இயல்பே வாழ்க்கை என்று கருதும் ஒவ்வொருவரும், ‘இந்த உடல் வாழ்வு எனக்கு எதற்கு ? என் வாழ்க்கைக்காக இதைத் தியாகம் செய்யவேண்டியிருக்கிறதே?’ என்று கேட்கக்கூடும். மனிதனின் உண்மையான வாழ்க்கைக்குத் தடையாக விளங்கும் உடலைப் பற்றிய பிரக்ஞை - உணர்ச்சி-எதற்காக இருக்கிறது ?


  1. மிதி - ரோதையில் கால்கள் வைப்பதற்குப் படிகள் அமைந்திருக்கும். அந்தப் படிகளை மிதிப்பதால் ரோதை உருளும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/82&oldid=1122150" இருந்து மீள்விக்கப்பட்டது