பக்கம்:வாழ்க்கை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வாழ்க்கை


இதுபோன்ற கேள்வியை ஒரு மிருகமும் கேட்பதாக வைத்துக் கொள்வோம்: ‘என் வாழ்க்கையை நான் கவனித்துக்கொண்டு போவதற்கு இடையூறாக என் உடலில் சடப்பொருள் ஏன் இருக்கிறது ? பூத பௌதிக, ரசாயனம் போன்ற அதனுடைய பல விதிகளோடு நான் பொருதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே!’ என்று அது சொல்லும்.

மிருகம் சடத்தின் விதிகளோடு பொருதுவதும், சடத்தைத் தனக்கு அடங்கியிருக்கும்படி செய்வதும் எதற்காக என்பது நமக்குத் தெளிவாய்த் தெரியும். சட்டமும் சட்டத்தின் விதிகளும் அதற்கு இடையூறாக அமையவில்லை; அதன் நோக்கங்கள் நிறைவேற ஏற்ற கருவியாகவே இருக்கின்றன. உதாரணமாகச் சடமாகிய உணவுப் பொருளை அதன் விதிகளுக்கு ஏற்றபடி ஜீரணித்துக் கொண்டால் தான் மிருகம் வாழமுடியும். மனிதன் விஷயத்திலும் இப்படித்தான். அவன் அடக்கியாள வேண்டிய மிருக இயல்பு இடையூறன்று, உதவியாக வந்துள்ன கருவி; அதன் மூலம், அதை உபயோகித்து, அவன் நன்மையடைய வேண்டும். அதை வைத்துக் கொண்டே அவன் வேலை செய்யவேண்டும். மிருக இயல்பு ஒரு மண்வெட்டி; அதை வைத்துக்கொண்டு மனிதன் தோண்ட வேண்டும். வேலை செய்வதால் அது மழுங்கியும், கூர்மையாகியும் வரவேண்டும் என்பதே விதி. மண்வெட்டி உபயோகத்திற்கே யன்றி, மூலையில் சேர்த்து வைப்பதற்காக அன்று.

‘தன் வாழ்க்கையைக் காக்க விரும்புவோன், அதை இழக்கிறான். எவன் வாழ்க்கையை இழக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/83&oldid=1123823" இலிருந்து மீள்விக்கப்பட்டது