பக்கம்:வாழ்க்கை.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
79
 

மனிதர்களிடையிலும், விலங்குகள் தாவரங்களிடையிலும், இந்த முளை விடுதல் எங்கு, எப்பொழுது, எதற்காக, எந்த முறையில் ஏற்படும் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. மனிதனிடத்தில் இந்தப் புது வாழ்வு முளைவிடுவதைப் பற்றிக் கிறிஸ்து நாதர் குறிப்பிடுகையில், அது யாருக்கும் தெரியாது, தெரிந்து கொள்ளவும் முடியாது என்று கூறியிருக்கிறார்.

இந் நிலையில் மனிதன் தன்னிடத்தில் உயிர் முளை விடுதலை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும் ? உயிர் மனிதர்களின் ஒளி,- உயிர் என்பது உயிரே-அதாவது சகல பொருள்களின் தோற்றத்திற்கும் காரணமானது. இது முளைவிடுவதை மனிதன் எப்படி அறிய முடியும்? உண்மையான வாழ்க்கையைப் பெறாமல், காலத்திலும் இடத்திலும் தோன்றும் உடலே முளைவிடுவதாயும், அழிவதாயும் மனிதன் எண்ணுகிறான். ஆனால் உண்மையான வாழ்க்கை இருக்கிறது; மனிதனுடைய பார்வையில் அது முளைவிடுவதுமில்லை, அழிவதுமில்லை.

பகுத்தறிவு உணர்ச்சி வேண்டுவது

உலக அமைப்பில் மனிதனுக்குத் தனியான நலன் இருக்க முடியாதென்று அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சி கூறுகிறது. வாழ்க்கை என்பது தன் நன்மையைப் பெறுவதிலுள்ள ஆசை. ஆனால் இந்த நன்மையைப் பெற முடியாது என்பதை அவன் காண்கிறான்; தனக்கு மட்டுமே நன்மை வேண்டும் என்ற ஆசையே அவன் உயிர் வாழ்வதற்கும் காரணமா யிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/86&oldid=1122156" இருந்து மீள்விக்கப்பட்டது