பக்கம்:வாழ்க்கை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வாழ்க்கை

மட்டுமே என்று அவனுக்குத் தோன்றுகிறது. மற்ற மக்களின் வாழ்க்கை தன் வாழ்விலிருந்து முற்றும் வேறுபட்டதாக அவனுக்குத் தோன்றுகிறது. அவர்களுடைய வாழ்க்கை வெறுந் தோற்றம் என்று அவன் கருதுகிறான். அவன் விரும்பும் போது தான் மற்றவர் வாழ்க்கையைப் பற்றி எண்ணிப் பார்க்கிறான். ஆனால், தன்னைப் பற்றித்தான் அவனுக்கு நன்றாகத் தெரியும். தான் வாழ்ந்து வருவதை அவன் ஒரு கணமேனும் அறியாமல் இருக்க முடியாது. எனவே, அவனுடைய சொந்த வாழ்க்கையே உண்மையானதாகக் காட்சியளிக்கிறது. அவனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையும் அவனுக்காகவே ஏற்பட்டதென்று தோன்றுகிறது. அவன் மற்றவர்களுக்கு நன்மையோ தீமையோ செய்கிறான் என்றால், அவைகளும் அவனுடைய சொந்த நன்மைக்காகத்தான். பிறருக்கு நன்மை செய்தால் அது தன் நலனைப் பெருக்கும் என்ற காரணத்தாலேயே அவன் அதனைச் செய்கிறான். மற்றவர்கள் துயரப்படுவதைப் பார்த்தால் அவன் நன்மை குலைவதால், அவன் அவர்களுக்குத் தீங்கு நினைப்பதில்லை. அவனுக்கு முக்கியமாக வேண்டியதெல்லாம் தன் நலன் ஒன்று தான்.

தன் நலன் ஒன்றிலேயே நாட்டமுள்ள மனிதன் அந்த நலனும் மற்றவர்களையே பொறுத்திருப்பதைக் காண்கிறான். அவனைப்போலவே மற்ற மனிதர்களும் விலங்கினங்களும் தம் வாழ்க்கையைப் பற்றி எண்ணுவதையும் அவன் அறிகிறான். ஒவ்வோர் உயிருக்கும் தன் வாழ்வே பெரிது, தன் நலனே முக்கியம் என்ற உணர்ச்சி இருக்கிறது. அப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/9&oldid=1123783" இலிருந்து மீள்விக்கப்பட்டது