பக்கம்:வாழ்க்கை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

83


மனிதனுடைய தனி வாழ்க்கையில் துன்பத்திற்கு மூன்றாவது காரணமா யிருப்பது மரணத்தைப் பற்றிய அச்சம். மனிதன் தன் மிருக இயல்பின் நன்மைக்காகப் பாடுபடுதலில் இன்பமில்லை என்பதையும், மற்றவர்களுடைய இன்பத்திலேயே தனக்கும் இன்பம் இருக்கிறது என்பதையும் காணும் பொழுது மரண பயம் தானாகவே ஒழிகிறது.

உடல் மரிக்கும் பொழுது வாழ்க்கையின் இன்பத்தை இழக்க வேண்டுமே என்ற பயத்திலிருந்து தான் மரண பயம் ஏற்படுகிறது. ஆனால், மனிதன் மற்றவர்களுடைய நன்மையிலேயே தன் இன்பம் இருக்கிறது என்று கருதினால்- தன்னை விட மற்றவர்களை நேசித்தால்-மரணம் என்பது இன்பத்தின் முடிவன்று என்பதையும் உணர்ந்து கொள்வான். தனக்காக மட்டும் வாழ்பவனுக்கே மரணத்தில் பயம் இருக்கும். ஒரு மனிதனின் மரணத்தால் மற்றவர்களின் நன்மையும் அழிந்துவிட மாட்டாது. பல சமயங்களில், அவன் தன் உயிரைத் தியாகம் தெய்வதால், மற்றவர்களுக்கு நன்மையே உண்டாகிறது.

உண்மையான இன்பம்

‘இதுவா வாழ்க்கை! இது துறவு, தற்கொலை!’ என்று சாதாரண மனித அறிவு கூறும்.

ஒவ்வொரு மனிதனுடைய இன்பமும் அளவில்லாமல் பெருக வேண்டுமானால், ஒவ்வொருவரும் எல்லோருடைய நன்மைக்காகவும் உழைக்க வேண்டும். எல்லோரும் ஒவ்வொருவருடைய நன்மைக்காகவும் உழைக்க வேண்டும். இந்த விதியின்படியே இன்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/90&oldid=1123829" இலிருந்து மீள்விக்கப்பட்டது