பக்கம்:வாழ்க்கை.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
85
 

மலும் துன்பமாயும் விளங்கிய தன் முந்திய வாழ்க்கை, அறிவுக்குப் பொருத்தமாயும் இன்பமாயும் மாறுவதை மனிதன் காண்பான். மற்ற மனிதர்களும் ஜீவன்களும் தன்னைப் போலவே பிறர் நலத்திற்காக வாழ ஆரம்பித்தால், உலகம் முழுவதும் இன்ப மயமாக மாறும் என்பதை அவன் அறிந்து கொள்ள முடியும். அர்த்தமற்ற கொடுமை நிறைந்ததாக முன்னால் காணப்பட்ட உலகமே இப்படி மாறிக் காட்சி தரும். உலக வாழ்க்கை பற்றி ஆராய்ச்சிக்குப் பொருத்தன உண்மைப் பொருள் விளங்கும். உலக வாழ்க்கையின் இலட்சியம் ஒளியை நோக்கி முன்னேறுதல் என்பதும், சகல மக்களும், சகல உயிர்களும் ஐக்கியப்படுதல் என்பதும் தெளிவாகும்.

ஒவ்வொருவனும் தன்னை இழந்து மற்றவர்களுக்காக வாழும்போது, சமுதாயம் பகைமையும், சண்டையும் நீங்கி, சாந்தியும் இன்பமும் பெறுகின்றது. கொலையே தொழிலாய்க் கொண்டிருந்த போர் வீரர்கள் அதில் பெருமையில்லை என்று உணர்வார்கள். மக்களை அடிமைகளாக விலக்கு வாங்கித் துன்புறுத்தியவர்கள் அடிமைத்தனத்தை அகற்றுவார்கள். மிருகங்களைக் கொன்று வந்தவர்கள் அவைகளைக் கொல்லாமல் வளர்த்துவந்து அவைகளின் மாமிசத்திற்குப் பதிலாக அவைகளின் பாலைக் கறந்து பருகுவார்கள்.

சரித்திரமும் இந்த நிலைமைக்குச் சான்று கூறும் முற்காலத்தில் புகழ் பெற்ற பெரியோர்கள், நாம் இன்புறுவதை விட்டு, உலகம் இன்புறுவதிலே நாட்டங் கொண்டவர்கள். இன்றைக்கு ஒரு மனிதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/92&oldid=1122171" இருந்து மீள்விக்கப்பட்டது