பக்கம்:வாழ்க்கை.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்க்கை
87
 

பிடித்துக் கொண்டிருப்பான். பசியுள்ள மனிதன், உண்பது அவசியம் என்று நிரூபித்துக்கொண்டிராமல், அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றும், அதை நிரூபிக்கவோ மறுக்கவோ முடியாது என்றும் கருதி, நேராக உண்ணச் செல்வான்.

ஏனெனில், படியாதவன் என்று கருதப்படும் சாதாரண மனிதன் தன் வாழ்க்கை முழுவதிலும் மெய்வருந்திப் பாடுபடுகிறான் ; தன் அறிவைப் புகைத்துக்கொள்ளாமல், பரிசுத்தமாகவும் உறுதியாகவும் வைத்துக் கொள்கிறான்.

இதற்கு மாறாகப் படித்த மனிதன், தன் வாழ் நாள் முழுதும் அற்பமான பயனற்ற விஷயங்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண் டிருப்பதோடு, மனிதன் இயற்கையாக அறிந்துகொள்ள வேண்டிய விஷயங் களுக்கு அப்பாலும் சிந்தித்துத் தன் அறிவைத் துர்விநியோகப்படுத்திவிடுகிறான். அவன் அறிவு சுதந்திரமா யிருக்கவில்லை. இதனால் தான் அது இயற்கையாகத் தேவையில்லாத விஷயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது ; தனி உரிமைகளைப் பற்றியும், அவைகளின் வளர்ச்சியைப் பற்றியும், அவைகளைத் திருப்தி செய்யவேண்டிய முறைகளைப் பற்றியுமே எண்ணமிட்டுக் கொண்டிருக்கிறது.

நாகரிக மனிதன் தன் தனி நன்மைகளை எண்ணாமல் இருக்க முடியாது. அவன் அந்த நிலைக்கு வந்திருக்கிறான். அவன் அறிவைக்கொண்டு தன் தேவைகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்கப் பார்க்கத் தேவைகள் அளவு கடந்து பெருகியிருக்கின்றன. உண்மையான வாழ்க்கையின் தேவைகள் எவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/94&oldid=1122173" இருந்து மீள்விக்கப்பட்டது