பக்கம்:வாழ்க்கை.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88
வாழ்க்கை
 

என்பதை அறிய முடியாமல் முந்தியவை அவன் கண்களை மறைக்கின்றன.

உண்பதற்கு உணவு, பருகுவதற்குப் பானங்கள், சுவாசிப்பதற்குக் காற்று, தசை நார்களுக்கும் நரம்புகளுக்கும் வேண்டிய தேகப் பயிற்சி, வேலை, ஓய்வு, விளையாட்டு, விஞ்ஞானம், கலை, மதம் என்று அவன் தேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குழந்தைப் பருவத்திலும், வாலிபத்திலும், நடுவயதிலும், வயோதிகத்திலும் எத்தனை எத்தனையோ தேவைகள் ஏற்படுகின்றன. இவைகளை யெல்லாம் விவரித்துக் கூற ஒரு வாழ்க்கையே போதாது. தேவைகளைப் பற்றி எண்ணமிடாம லிருந்தால்தான் அவைகளால் துயரம் ஏற்படாது. ஒரு தேவையைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தால், அது மிகப் பெரிதாகி, மற்றத் தேவை களை நசுக்கிவிட்டுத் தானும் நசுங்கிவிடும். இதனால் வேதனையே அதிகமாகும்.

மிருக இயல்பை அடக்கிவைத்தல்

சுயநலமான தன் தேவைகளையே ஒருவன் வற்புறுத்திக் கொண்டிருந்தால், மிருக வாழ்க்கையின் இயல்பே அவனை ஆட்கொண்டுவிடும். உண்மையான மனித வாழ்க்கை அவன் கண்ணுக்குப் புலப்படாது. நம் காலத்தில் நாம் வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? நாகரிகமான தேவைகளைப் பெற்றிருப்பவனே கண்யமான மனிதன் என்றும், மனித சமூகம் தன் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இன்பம் என்றும் நம் ஆசிரியர்களே போதிக்கிறார்கள். இந்தப் பாடத்தைக் கற்றவர்கள் பகுத்தறிவு உணர்ச்சியின் போதனைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/95&oldid=1122174" இருந்து மீள்விக்கப்பட்டது