பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டாம் சினம்!

105


திருவள்ளுவர் வெகுளாமை என்று பத்துக் குறள்களை ஒதுகிறார். வெகுளி, மனிதனின் நகையைக் கொல்லும்; வகையைக் கெடுக்கும்; இனத்தை சுட்டெரிக்கும்; தோழமையைக் கெடுத்துப் பிரிக்கும் என்றெல்லாம் வெகுளியினால் வரும் கேட்டினை விவரிக்கின்றார். திருவள்ளுவர் வெகுளியை மறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றார்.

ஆம்! வெகுளியை மறந்து விடவேண்டும். தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லும் வெகுளி என்றும் கூறுகின்றார். வெகுளியை மறந்து விடுக! வெகுளியை யார் மாட்டும் மறந்து விடுக! யார் மாட்டும் வெகுளி வேண்டாம்.

வெகுளியை மறந்தால் எண்ணியவைகளையெல்லாம் அடையலாம்! கால தாமதமில்லாமல் உடனடியாக உன் விருப்பத்தை அடையலாம்! எப்போதும் அடையலாம். உள்ளத்தில் உள்ளியதை அடையலாம். ஆதலால் வேண்டாம் வெகுளி; விடுமின் வெகுளி!

         மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
         பிறத்தல் அதனான் வரும். (803)

         உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
         உள்ளான் வெகுளி யெனின். (309)

வா—7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/107&oldid=1133237" இலிருந்து மீள்விக்கப்பட்டது