பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காத்துக்கொள்ளும் வழி

107

புணர்ச்சியைக் கூட்டும் ! வேலைகள் அதிகம் செய்யலாம். ஏமாற்றங்களும் ஏற்படா, உடலுக்கும் பாதுகாப்பு, பணிக்கும் பாதுகாப்பு ! அதைவிட நம்மைச் சார்ந்தவர்களிடத்தில் மனக்கசப்பு ஏற்படாததால் அவர்களிடமிருந்தும் பாதுகாப்பு !

சில நிமிடக் கோபம் பல நாசங்களைச் செய்கின்றன. பொறுத்தாற்றும் பண்பு, எண்ணற்ற நலன்களைச் செய்கின்றன. பல ஆண்டுகள் வாழலாம். நலத்துடன் வாழலாம்! வாழ்வாங்கு வாழலாம் !

இனிமேலாவது கோபப்படாமல் வாழக் கற்றுக்கொள்வோம். ஆனால் கோபத்தை அடிக்குதல் எளிதன்று? கடுமையான பயிற்சி தேவை. கோபம் வரும் பொழுதெல்லாம் கவனித்தல் வேண்டும். எதைக் கவனிக்க வேண்டும்? கோபத்தின் காரணங்கள் மாறக் காத்திருக்க வேண்டும்.

கோபத்தினை மடைமாற்றம் செய்யப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது அண்ணல் காந்தியடிகள் காட்டிய வழி ! ஏன் காலதாமதம்? கோபத்தை விட்டுவிட வேண்டியதுதான் பிளேட்டோவைப்போல் கோபம் வரும் பொழுது பேசாமல் மெளனமாக இருக்கக் கற்றுக்கொள்வோம்! கோபத்தை வென்று விடலாம்.

        "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
         தன்னையே கொல்லும் சினம்"(குறள்-805)

தன்னைக் காத்துக் கொள்ளும் விருப்பம் உண்டா? தன்னையே கொல்லும் சினத்திலிருந்து காத்துக் கொள்க. அப்படிச் சினத்திலிருந்து தன்னைத் தானே காத்துக்கொள்ளத் தவறினால் அந்தச் சினமே கொன்று விடும் என்பது திருக்குறள் கருத்து ! மரணம் அல்லது சாவு வேண்டாம் என்றால் சினத்தைத் தவிர்த்திடுக !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/109&oldid=1133548" இலிருந்து மீள்விக்கப்பட்டது