பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிக அறிவியலை விஞ்ஞானத்தின் விளக்கங்கள் பெறுக! “அறிவு” என்றாலே ஒன்றை அணுகும் முறையையே குறிக்கும். அறிவியலும் அருளியலும் தம்முள் முரண்பட்டனவும் அல்ல, எதிரெதிர் செல்வனவும் அல்ல.

ஒன்றிலிருந்து பிறிதொன்று காரண காரியத் தொடர்ச்சியுடன் இயங்குந்தன்மையது. இந்த உலகம் எப்படி இயங்குகிறது? என்று சுற்றுப்புறச் சூழ்நிலையை ஆராய்ந்து அறிவது அறிவியல். நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்? என்று அகநிலைகளை ஆராய்ந்தறிவது அருளியல்.

இன்பம் எது? துன்பம் எது? என்று ஆராய்வது அருளியல். நன்மை எது? தீமை எது? என்று ஆராய்ந்தறிவது அறிவியல். அகமும் புறமும் சேர்ந்ததே வாழ்க்கை. உடலும் ஆன்மாவும் சேர்ந்ததே வாழ்க்கை!

“ஆன்மிகம்” என்றொரு வழக்கு சமயத்திற்கு உண்டு. ஆன்மிகம், ஆன்மாவின் வாழ்க்கை என்று பொருள் படும். உலகியத்தின் பல்வேறு துறைகளுக்கும் தனித்தனியே இன்று அறிவியல் வளர்ந்து வந்துள்ளது. வளர்ந்து கொண்டே இருக்கிறது, அதுபோலவே ஆன்மாவைப் பற்றிய அறிவும் வளர வேண்டும். ஆன்மாவைப் பற்றிய அறிவியல் 19ம் நூற்றாண்டுக்குப் பிறகு வளராமல் தேக்கம் கண்டுவிட்டது. ஆன்மாவைப் பற்றி அறிவியலை கடவுளுடன் சம்பந்தப்படுத்தி "மதம்” என்ற அமைப்புக்குள் சிறைப்படுத்திய பிறகு ஆன்மாவைப் பற்றிய அறிவியல் வளர்ச்சி நின்றுவிட்டது. கடைசியாக

வ—1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/11&oldid=1412668" இலிருந்து மீள்விக்கப்பட்டது