பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வாழ்க்கை நலம்


நெற்றியில் வியர்வைத் துளிகள் காணும் அளவுக்குக் கடுமையாக உழைத்தால் உண்ணும் உணவு சுவையாக இருக்கும். அங்ஙனம் உழைத்து உண்பதே நலம் பொருந்திய வாழ்க்கை.

"A in the sweet of the fere shalt than cat Bread” என்ற அனுபவ வார்த்தை அறிக. உழைப்பில் சிந்தும் வியர்வையே உண்ணும் ரொட்டிக்கு விலை. உழைத்து உண்பதே ஒழுக்கம்; நீதி சார்ந்த வாழ்வியல். சுவையுடைய உணவு வேண்டாம்! உணவுக்குச் சுவையிருப்பினும் வாழ்க்கைக்குப் பயன்படாது. தண்ணீர்போல அமைந்த கூழாயினும் உழைப்பால் வந்ததாயின் அந்தக் கூழே இனியது. ஆதலால் சிலவாம் இனாம் வேண்டாம்.

"Nothing is free" என்ற வாழ்க்கையை நியதியாக்குவோம். உழைப்பு—படைப்பாற்றல் தன்மை வாய்ந்தது. உழைப்பு, உழைப்பு!—நேர்மையான உழைப்பு ஒன்று தான் மனித சமுதாயத்திற்குச் சிறப்பான மருந்து.

           தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
           உண்ணலின் ஊங்கினியது இல்.(குறள் 1065)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/120&oldid=1133253" இலிருந்து மீள்விக்கப்பட்டது