106 தலைமையாதிக்க வெறியிலிருந்து, உயிரினம் பிழைத்து வாழுமானல், நாற்பதாம் நூற்ருண்டிலும் ஆவினம் இன்றைக்கு வாழும் வகையிலே வாழும். மக்கள் இனம் தோன்றிய காலத்திற்கும், இன்றைக் கும் எத்துனே மாறுபாடு? உணர்வில், உடையில், உறை யுளில், காணும் மாறுபாட்டை மட்டும் குறிக்கவில்லை. உணர்வில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, செப்பத்தை, சீர்மையை, ஒரு முறைக்குப் பலமுறை எண்ணிப் பாருங்கள். ஆதிமனிதன், தேவைப்பட்டால், மற்றேர் மனிதனைக் கொன்று தின்று பிழைத்தான். அந்நிலையிலிருந்து மாறி 'காக்கை குருவி எங்கள் சாதி-நீள் கடலும் மலேயும் எங்கள் கூட்டம்' என்று பாரதி தோள் தட்டிப் பாடுமளவிற்கு மானுட உணர்வு சிறந்துள்ளது. "பகைவனுக்கருள் வாய் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய்! தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேேைமா-நன்னெஞ்சே? என்று பாடுமளவு வளர்ந்துவிட்டான். பாரதி ஊட்டும் இந் நல்லுணர்வு, ஆதிகால உணர் வல்ல; உயர்ந்த உணர்வு. இதற்காக, எல்லோரும் பாடுபடவில்லை என்பது உண்மை. ஆயினும், தலைமுறைக்குத்தலைமுறை சிலராவது முயன் முர்கள்; தவம் கிடந்தார்கள். தவத்தின் முதற்படி, தன்னடக்கம்; கடைசிப் படியும் தன்னடக்கம். தன்னடக்கம் கைவரப்பெற்றவர்கள், தம் தம் வீடு பேற்றிற்காக மட்டும் முயலவில்லை. பிறர் துயர் தீர்க்க வும் தவங்கிடந்தார்கள்: வழியைக் கண்டார்கள்.
பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/105
Appearance