107 பிறர் நலம் வேண்டித் தவம் புரிவோர். பிறர் நலம் பேணும் உயர்நிலை, நன்னிலை, அடைவது திண்ணம். மானுடத்தின் நீண்ட வரலாற்றிலே, தனக்கென முயலாவது பிறர்க்கென முயலுநர் சிலராவது தோன்றிய தால், இன்றும் உலகம் உயிரோடு இருக்கிறது. முழுமனிதத் தன்மையை நோக்கி, பையப் பைய நகர்கிறது; ஒய்ந்து ஒய்ந்து தொடர்கிறது. மானுடத்தை வாழ்விக்கும் பொறுப்பு சிலருடையதா? இல்லை. எல்லோர் உடையதுமாகும். அந்நிலையை ஒரே தாண்டில் எட்டிப்பிடிக்க இயலாது. வையம் வாழ்க’ என்று எண்ணுவோர் சிலர் பலராகும் நிலையை விரைவில் எட்டவேண்டும். எனவே, பாரதியார் கூறுவதுபோல், நமக்கு, கடமையாவன, தன்னைக் கட்டுதல் பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்' என்பதை உணர்ந்து, உணர்த்தி, மனிதத் தன்மையைச் செழிப்புறச் செய்வோம். செய்கதவம் செய்கதவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்-வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு.' என்று பாரதியார் நினைவுபடுத்துகிரு.ர். இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தல் நல்லது மூட நம்பிக்கையென்று ஒதுக்காதிருந்தால் நல்லது. இதை நினைவிற்கொண்டு, 'அன்பு செய்வோம்! ஆருயிர்க்கெல்லாம் அன்புசெய்வோம்"
பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/106
Appearance