அதிகார வரம்பு
321
அதிகார வரம்பு
- 4. தனி நீதிமன்றங்கள்.
- 5. சிறப்பு அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள்.
வரையறுக்கப்பட்ட அதிகாரமுள்ள நீதிமன்றங்கள்: உரிமையியல் வழக்குகளில் வழக்கைப் பற்றிய சொத்து மதிப்பு உரூ. 15,000/-உம் அதற்குக் குறைவாகவும் உள்ள சொத்துகளைப் பற்றிய வழக்குகள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன்பு தாக்கல் செய்யப்படவேண்டும்.
குற்றவியல் வழக்குகளில் ஓர் ஆண்டு தண்டனை பெறத்தக்க குற்றங்கள், இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நீதிபதியால் விசாரிக்கப்படவேண்டும். குற்றவியல் வழக்குகளில் மூன்று ஆண்டுகள் தண்டனை பெறத்தக்க குற்றங்கள் முதல் வகுப்புக் குற்றவியல் நீதிபதியால் விசாரிக்கப்படவேண்டும்.
வரையறுக்கப்படாத அதிகாரமுள்ள நீதிமன்றங்கள்: உரிமையியல் வழக்குகளில் உரூ. 15,000/–க்கு மேல் சொத்து மதிப்புள்ள வழக்குகள் உரிமையியல் சார்பு நீதிமன்றம் முன்பு தாக்கல் செய்யப்படவேண்டும். குற்றவியல் வழக்குகளில் மாவட்டக் குற்றவியல் நீதிபதி, மரணதண்டனைவரை விதிக்கப்படத்தக்க குற்றவியல் வழக்குகளை ஏற்று நடத்த அதிகாரம் உண்டு.
மேல் முறையீட்டு நீதிமன்றங்கள்: உரிமையியல் வழக்குகளில் மாவட்ட உரிமையியல் மன்றத்தின் தீர்ப்பின் பேரில், மாவட்ட உரிமையியல் சார்பு நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யலாம்.
உரிமையியல் சார்பு நீதிமன்றங்களின் தீர்ப்பின் பேரில் உரூ. 50,000/– சொத்து மதிப்புள்ள வழக்குகளைப் பொறுத்து, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு உண்டு.
மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களின் மேல் முறையீட்டுத் தீர்ப்பின் பேரில், சட்ட நுணுக்கங்கள் இருப்பின் அவற்றைப் பொறுத்து உயர் நீதிமன்றத்திற்கு இரண்டாவது மேல் முறையீடு செய்ய வாய்ப்புண்டு.
உரிமையியல் சார்பு நீதிமன்றங்களின் தீர்ப்பின் பேரில் உரூ. 50,000/–க்கு மேல் மதிப்புள்ள வழக்குகளைப் பொறுத்து உயர்நீதிமன்றத்திற்கு முதல் மேல்முறையீடு உண்டு, மாவட்டக் குற்றவியல் நீதிபதியின் குற்றவியல் வழக்குகள் தீர்ப்பின் பேரிலும் உயர் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு உண்டு.
உரிமையியல் வழக்கு மேல் முறையீடுகளில் உரு. 20,000/–க்குக் கீழ் மதிப்புள்ளவை ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியால் விசாரிக்கப்படும், அந்தத் தீர்ப்பின் பேரில் இரு நீதிபதிகள் கொண்ட குழுவிற்கு மேல் முறையீடு செய்யலாம்.
உரிமையியல் வழக்குகளில் உரூ. 20,000/–க்கு மேல் சொத்து மதிப்புள்ள வழக்குகள் இரு நீதிபதிகள் கொண்ட குழுவால் விசாரணை செய்யப்படும்.
உயர்நீதிமன்றத்தின் உரிமையியல் தீர்ப்புகளின் பேரிலும் குற்றவியல் தீர்ப்புகளின் பேரிலும் உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய சட்ட நுணுக்கங்கள் உண்டு என்று உயர்நீதிமன்றமோ உச்ச நீதிமன்றமோ கருதினால் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உண்டு.
தனி நீதிமன்றங்கள்: ஒரு சில வழக்குகளைத் தீர்வு செய்யத் தனித்தனி நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. தொழில் வழக்குகளைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட ‘தொழில் வழக்கு மன்றம்’ போன்றவை தனி நீதிமன்றங்களாகும். பல சிறப்புச் சட்டங்களின் கீழ்த் தொடரப்பட்ட வழக்குகளைத் தீர்வு செய்ய இத்தகைய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்பு அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள்: சட்ட விதிகளால் தீர்க்க இயலாத தவறுகளைத் தீர்க்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு. இத்தகைய வழக்குகள் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியாலோ முக்கிய வழக்காக இருக்குமானால் இரு நீதிபதிகளாலோ விசாரிக்கப்படும்.
ஒரு நீதிபதியில் தீர்ப்பின் பேரில் இரு நீதிபதிகள் கொண்ட குழுவிற்கு மேல் முறையீடு உண்டு.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்பேரில் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடும் உண்டு.
இவை தவிர உயர் நீதிமன்றத்திற்குக் கப்பல் போக்குவரத்தைப் பற்றிய வழக்குகனை விசாரிக்க அதிகாரம் உண்டு.
நீதிமன்றங்களின் அதிகார வரம்பின் அமைப்பைக் காட்டும் அட்டவணை:
உரிமையியல்
உச்ச நீதிமன்றம்
↓
உயர்நீதிமன்றம்
↓
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்
↓
உரிமையியல் சார்பு நீதிமன்றம்
↓
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்
(சொத்து மதிப்பு உரூ. 15,000/– வரை)