அந்தமான்–நிக்கோபார் தீவுகள்
333
அந்தமான்–நிக்கோபார் தீவுகள்
தொடங்கி 1910–இல் கட்டிமுடிக்கப்பட்ட ‘செல்லுலர்’ சிறைச் சாலை என்ற கொடிய சிறைச்சாலையில்தான் விடுதலைப் போராட்ட வீரர்கள் (வாசுதேவ பல்வந்த பட்கே, வீர சாவர்க்கர் போன்றோர்) 1938 வரை அடைக்கப்பட்டுக் கிடந்தனர். 1941–இல் நிலநடுக்கத்தாலும், சப்பானியரின் குண்டு வீச்சினாலும் இச்சிறைக்கூடம் சேதமுற்றது. இன்றும் இச்சிறைக்கூடம் உள்ளது.
சப்பானியர் 1942 மார்ச்சு 23–இல் இத்தீவுகளைக் கைப்பற்றினர். அவர்களின் கொடுமைகள் காரணமாக, அவற்றின் மக்கள் தொகை 34,000 ஆக இருந்தது 18,000 ஆகக் குறைந்தது. சுபாசு சந்திர போசின் இந்தியத்தேசியப் படையின் தளமாகவும் அந்தமான் சிறிது காலம் இருந்தது. 1945 அக்டோபர் 8-இல் அந்தமான் தீவுகளை ஆங்கில ஆட்சிக்குட்பட்ட இந்திய அரசு மீண்டும் பெற்றது. அன்று முதல் குற்றவாளிகள் குடியிருப்புக் கலைக்கப்பட்டுச் சில கைதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
அந்தமான் பழங்குடிகள்: அந்தமான் தீவின் மக்கள், வளர்ச்சியற்ற மேம்படாத பண்பாட்டைக் கொண்ட முதுபழங்குடியாகவும், தென்கிழக்கு ஆசியாவின் நீக்கிரோ இனப் பேராளர்களில் தொன்மையானவர்களாகவும் திகழ்கின்றனர். இத்தனிமைத் தீவினை எவ்வாறு இவர்கள் தாயகமாகக் கொண்டனர் என்பதும் எங்கிருந்து வந்தனர் என்பதும் ஏன் உலகப் பண்பாட்டில் மிகவும் குன்றிய நிலையை ஏற்றுள்ளனர் என்பதும் மானிடவியலாளரால் ஆராயப்பட்டு வருகின்றன.
அந்தமானின் நான்கு பெரும் முதுபழங்குடிகளாகப் பெரிய அந்தமானியர், சாரவா, ஓஞ்சி, சென்டினல்கள் காணப்பட்டாலும் இவர்களிடையே கிளைக் குழுக்களும் காணப்படுகின்றன. பெரிய அந்தமானியர் தாங்கள் பேசும் மொழி அல்லது கிளை மொழியின் அடிப்படையில் வடபகுதிக் குழுவினர், தென்பகுதிக் குழுவினர் எனப் பாகுபடுகின்றனர். வடபகுதிக் குழுவினர் அகா–காரி, அகா–கோரோ, அகா–டோ, அகா–சேரு என நான்கு குழுக்களாகவும், தென்பகுதிக் குழுவினர் அகா–கேடே, அகா–கோல், அகா–பீ, ஓகோ–சீவாசு, அ–புசீக்வார், அகார்–பாலே என ஆறு குழுக்களாகவும் காணப்படுகின்றனர். தென் அந்தமானின் மேற்குப் பகுதியில் சரவாக்களும், வட சென்டினல் தீவில் சென்டினல்களும், சிறிய அந்தமானில் ஓஞ்சி மக்களும் வாழ்கின்றனர். முற்கால இன ஒப்பாய்வியல் வழக்கில் சிறிய அந்தமானியருக்கு (ஓஞ்சி) மின்கோபி என்ற பெயரும் இருந்தது.
நீக்கிரோ இனத்தின் முக்கியமான பேராளராகத் திகழும் அந்தமானியர் கருமை நிறத் தோலும் அடர்ந்து சுருண்ட தலை முடியும் ஏறத்தாழ 145 செ.மீ. உயரமும் உள்ள உடல் அமைப்பைக் கொண்டுள்ளனர். ஓஞ்சி பெண்களின் இடைப்பகுதி மிகுந்த வளர்ச்சி பெற்றிருப்பதால் நெடுந்தூரம் செல்லும்பொழுது குழந்தைகளை இடையின்மேல் நிற்க வைத்தே கொண்டு செல்கின்றனர்.
அந்தமான் ஓஞ்சி இனப் பெண்கள்
இத்தீவின் அனைத்துப் பிரிவுகளின் மொத்த மக்கள்தொகை 1981-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 1,88,254 ஆகும். ஆனால் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நான்கு முதுபழங்குடியினரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை அடுத்த பக்கத்திலுள்ள பட்டியலில் காணலாம்.
பெரிய அந்தமானில் அதிக நிலப்பரப்பும் காட்டுப் பகுதியும் இருப்பதால் பெரும்பாலான சாரவாப் பழங்குடியினர் காட்டுவாசிகளாகவும், கடலோரச் சாரவாக்கள் கரையோரவாசிகளாகவும் வாழ்கின்றனர். சிறிய அந்தமானின் பெரும்பகுதி நிலப்பரப்பு, கடலோரத்தைச் சார்ந்திருப்பதால் ஓஞ்சியினர் கரையோரவாசிகள் என்றழைக்கப்படுகின்றனர்.
கரையோரவாசிகளின் பொருளாதார அமைப்பு மீன்பிடிக்கும் தொழிலைச் சார்ந்ததாகும். பெண்கள் கடலோரத்தில் வலை கொண்டும் ஆண்கள் சிறுபடகில் சென்றும் கடலில் மீன்பிடிப்பது இவர்களிடையே காணப்படும் பொருளாதாரச் செயல்முறைப் பாகுபாடாகும்.
காட்டுவாசிகளின் முதன்மைத் தொழில் வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலுமாகும். இவர்கள் வேட்டை முறையை மூன்று கால நிலைகளாக