அநுராதபுரம்
350
அநுராதபுரம்
கொணர்ந்தான். அநுராதபுர சிங்களவ மன்னர்களுள் இறுதியானவன் கி.பி. 982–இல் அரியணையேறிய ஐந்தாம்மகிந்தன், அவன் கி.பி. 1017–இல் சோழரால் பிடிக்கப்பட்டுக் கைதியாகித் தென்னிந்தியாலில் மாண்டான். இராசராசனின் மகன் இராசேந்திர சோழன் (1012–1044) ஆட்சியில் இலங்கைத் தீவு முழுவதும் சோழப் பேரரசுக்கு உட்பட்டது. பண்டைய காலம் முதல் ஈழமண்டலத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் சோழரால் அழிக்கப்பெற்றது. இதற்கு முன் ஈழத்தின்மீது படையெடுத்துச் சென்ற தமிழரசர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதைத் தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராசராசனோ அம்மண்டலம் முழுவதையுமே கைப்பற்றித் தன் ஆட்சிக்கு உட்படுத்த விரும்பியதால், பழைய தலைநகரை விடுத்து, நாட்டின் நடுவில் உள்ள (அநுராதபுரத்தின் தென்கிழக்கில் உள்ள) பொலன்னருவா என்னும் நகரைச் சனநாதமங்கலம் என்ற புதிய பெயருடன் தலைநகராக்கிக் கொண்டான்.
அநுராதபுரம் ஒரு தலைநகராக இருந்ததுடன், ஒரு வாணிக மையமாகவும் (கி.பி. 10–ஆம் நூற்றாண்டு வரை) திகழ்ந்தது. மிகப் பழங்காலத்திலேயே யவனர் அங்கே குடியேற்றங்கள் அமைத்திருந்தனர். உரோமானிய நாணயங்கள் கி.பி. 4–ஆம் நூற்றாண்டிற்குரியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவாதலின், உரோமானியருடன் வாணிக உறவு இருந்தமை புலனாகிறது. பாரசீக வணிகரும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் அங்கே குடியேறினர். தமிழர் குடியேற்றங்களும் இருந்தன. அநுராதபுரத்தைத் தமிழரசர்கள் தாக்கியதன் நோக்கம், அதன் வாணிகத்தைத் தம் வசப்படுத்திக் கொள்ளலே. முத்து, மாணிக்கம், விலை உயர்ந்த நிறக் கற்கள், தந்தம், மணப்பொருள்கள் முதலியன சிறப்பான வாணிகப் பொருள்களாகும். தமிழ் மன்னர்களிடமிருந்து பல உரிமைப் பட்டயங்களைப் பெற்றுச் சிறப்பு வாணிகத்தில் அவர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். உள்நாட்டு வாணிகம் சிறந்த முறையில் அமைந்திருந்தது. பெரும்பான்மையும் பண்டமாற்று முறை நிலவியது. ஓரளவு நாணய முறையும் வழக்கிலிருந்தது. அநுராதபுரத்துக்கு மிக்க புகழ் தந்தது அதன் பண்டைக்கால நீர்ப்பாசன முறை. அதை அவர்கள் அமைத்துக் கண்காணித்த முறையை இக்காலத்திய பொறியியல் வல்லுநர்களும் வியந்து பாராட்டுகிறார்கள். இதனாலும், கிராமங்களில் நல்லமுறையில் செயற்பட்டு வந்த பொருளாதார அமைப்பினாலுமே, அந்நகரம் கடுமையான அரசியல் குழப்பங்களை நீண்ட காலம் தாங்க முடிந்தது. இராசரதம் (அரசரின் தேசம்) எனப்பெறும் இலங்கையின் வடபகுதியில் தான், நாகரிகம் மிகுதியாகச் சிறப்புற்றிருந்தது. கி.பி. 7–ஆம் நூற்றாண்டு வரை பாரசீகர், அநுராதபுரத்துடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பாரசீகக் கிறித்தவரில் நெசுத்தோரியப் பிரிவினர் தம் குடியேற்றத்தையே அங்கு அமைத்திருந்தனர். அநுராதபுர-சீன வாணிகத் தொடர்பு கி.பி. 9–ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது. அநுராதபுரம் ஒரு வறட்சிப் பகுதியாக இருந்ததோடு, நீர்ப்பாசன வசதிகளும் படையெழுச்சிகளின் விளைவாக அழிவுற்றதால், அந்நகர் தலைநகராகத் தொடர்ந்து இருக்க முடியவில்லை.
இலக்கியம்: பிராகிருத–தமிழ்க் கலப்பே சிங்கள மொழி. இதுவே மக்களின் சிறப்பு மொழியாகும். சிங்கள இலக்கியம் வளரப் பாலிமொழியும் உதவியது. சிங்களரின் பௌத்த சமயம் பாலி மொழித் தொடர்புடையது.
அநுராதபுர மன்னர்களின் காலத்தில் சிறப்பான சிங்கள நூல்கள் பாலி மொழியிலேயே இருந்தன. அநுராதபுரத்தில் 5 சிறப்பு வாய்ந்த தூபிகள் இருந்தன. முதலாம் தூபி, சிறிய, ஆனால் கவர்ச்சிகரமான திருப்பரமா தூபி. மன்னன் துட்டகை மனுவால் நிரிசவேதி, மகாதூபி என இரண்டு தூபிகள் எழுப்பப் பெற்றன. பின்னர் எழுந்த அபயகிரி தூபி, மிகப் பெரிய தூபி. இதனைப் பண்டைக்காலத்தில் புகழ்பெற்ற மற்ற உலக நினைவுச் சின்னங்களுடன் ஒப்பிடலாம். உருவனவலிசயே என்ற மன்னனால் இது கட்டப்பெற்றது. கயவாகு மன்னன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், அபயகிரி தூபியை 93 மீட்டர் உயரத்துக்கு உயர்த்தினான். சதாவனே என்ற தூபி 133 மீட்டர் உயரமுள்ளது. இதனை அக்காலத்தின் அற்புதங்களுள் ஒன்றாகக் கூறலாம். பௌத்த உலகிலேயே இதுதான் மிகப் பெரியது. இவற்றைத் தவிர, பல சிறிய தூபிகளும் அக்காலத்தில் எழுப்பப் பெற்றன. அநுராதபுரத்தைச் சேர்ந்த துப்பராமா என்னுமிடத்தில், தூபியைச் சுற்றி மிக்க வேலைப்பாட்டுடன் நான்கு வட்டங்கள் கல்லினால் கட்டப் பெற்றிருப்பது, அக்காலக் கட்டிடக்கலைச் சிறப்புக்குச் சிறந்த சான்றாகும். மகா விகாரத்தைச் சேர்ந்த துறவிகள் தங்குவதற்காக, துட்டகைமனு மன்னனால் தொடங்கப்பெற்ற, பிரேசன் அல்லது லோவமகாயாய மாளிகைக் கட்டிடம், பிறகு ஒன்பது அடுக்குகளையுடைய மாடிக்கட்டிடமாக வளர்ந்தது. அதன் சிதறுற்ற சின்னங்களை இன்றும் அநுராதபுரத்தில் காணலாம். அங்குத் தாந்திரிய மகாயான பெளத்தர்களின் பொருட்டுக் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் விசயராமாதூபி எழுப்பப்பெற்றது. இதைச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட மடாலயம், தெற்கு வடக்கில் 96 மீட்டர், கிழக்கு மேற்கில் 89 மீட்டர் பரப்பினைக் கொண்டு சிறப்பாகத் திகழ்ந்தது. பௌத்தக் கட்டிடங்களில் இந்துக் கடவுளையும் காணலாம். இவை-