உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அநுருத்தர்1

351

அப்சரசுகள்

யெல்லாம் இன்று சிதைந்து 1600 கற்றூண்கள், அழிவுற்ற நிலையில் பழங்காலப் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. கட்டிடக் கலையைப் போலவே சிற்பத் துறையிலும் அக்கால அநுராதபுரம் சிறப்புற்றிருந்தது. அதிலும் இந்தியப் பண்பைக் காணலாம். அநுராதபுரத்து இசுருமுனிவர் கோயிலுக்கு மாமல்லபுரத் தேர்களை ஒத்த பெருஞ்சிறப்பு உண்டு. அரசர்களின் குளியலறைகளில் எழில் மிக்க சிற்பங்கள் திகழ்ந்தன. அபயகிரி விகார வழிபாட்டில் கல்லாலாகிய ஒரு புத்த உருவமும், அநுராதபுர வெண்கல உருவங்களுள் சிலவும், பல்லவர் கலைப் பண்புகளைப் பெற்றுள்ளன. மகா மேக வனம் எனப்படும் அரசர் பூங்காவில், தெற்கில் இயற்கையாக இருந்த கற்பாறையை உளியால் செதுக்கித் தரையிலும் சுவரிலும் அதை இணைத்திருக்கும் அற்புதத்தை அநுராதபுரத்தில் இன்றும் காணலாம்.

டி.பா.

துணை நூல்கள்:

சபாநாதன் முதலியார், க., “யாழ்ப்பாண வைபவ மாலை”, கொழும்பு, 1953.

Arunachalam, P., “Sketches of Ceylon History”, Colombo, 1956.

Ariyapala, M.B., “Society in Mediaeval Ceylon”, Colombo, 1956.

Burrows, S.M., “Buried Cities of Ceylon.”

Cane, H.W., “The Book of Ceylon”, London, 1913.

Mendis, G.C., “Early History of Ceylon”, Calcutta, 1940.

Navaratna, C.S., “Tamils and Ceylon”, Jaffna, 1958.

Parker, H., “Ancient Ceylon”, London, 1909.

Pillai, K.K., “South India and Srilanka”, Madras, 1975.

Srinivasa Ayyaugar, P.T., “History of the Tamils from the Earliest Times to 600 AD.”, Madras, 1929.

Wijesekere, N.D., “The People of Ceylon”, Colombo, 1951.

அநுருத்தர்1 புத்தரின் முதன்மையான சீடர்களுள் ஒருவர். பழங்காலத்திலேயே பெருஞ்சிறப்புடன் விளங்கிய காஞ்சிபுரத்தில் இவர் பிறந்தார். அக்காலத்தில் காஞ்சிபுரத்தில் புத்த சமயச் செல்வாக்கு மிக்கிருந்தது. அநுருத்தர் காஞ்சிபுரத்தில் விளங்கிய பல்வேறு புத்த விகாரங்களுன் ஒன்றாகிய ‘மூல சோம்விகாரை’ என்னும் புத்தப் பள்ளிக்குத் தலைவராக விளங்கினார். காஞ்சியில் விளங்கிய இவரைப் பாண்டிய நாட்டவர் என்றும் கூறுகின்றனர். இவர் அபிதம்மாத்த சங்கிரகம், பரமார்த்த வினிச்சயம், நாமரூபப் பரிச்சேதம் ஆகிய புத்த சமய நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் அபிதம்மாந்த சங்கிரகம், சிரீலங்கா, பர்மா ஆகிய தேசங்களில் உள்ள புத்த சமயத்தவர்களால் நெடுங்காலமாகப் போற்றிக் கற்கப்படுகிறது. இவரைத் தலைவராகக் கொண்டொழுகிய பிக்குகள், சூத்திர பிடகத்தைச் சார்ந்த அங்குத்தர நிகாயப் பகுதிகளைப் பாராயணம் செய்து வந்தார்கள்.

அநுருத்தர்2 ஒரு தமிழ்ப் புலவர், கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் இப்பெயரில் வாழ்ந்துள்ளார். இவர் பெரும்பிடுகு முத்தரையன் என்னும் ஒரு சிற்றரசனைப் பாடியுள்ளார். கட்டளைக் கலித்துறைச் செய்யுளில் அமைந்த இவரது பாடல், திருச்சிக்கு அருகில் செந்தலை என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிற் சாசனத்தில் சிதைவுற்றுக் காணப்படுவதாக மு. இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். மேலுமவர் தம் நூலில் இவரைப் பற்றிக் குறிப்பிடுங்கால், ஆசாரியர் அநிருத்தர் என்பதனால் முத்தரையற்கு ஆசிரியராகவோ சமண சமய முனிவர்களுள் ஒருவராகவோ இவர் இருந்திருக்கலாம் என்னும் கருத்தினையும் தெரிவித்துள்ளார்.

அநேகதா கால்வாய் மேற்கு இந்தியக் தீவுக் கூட்டத்தில் உள்ள இலீவார்டு தீவுகளின் வடகோடியில் உள்ளது. மேற்கிலுள்ள வர்சின் தீவுகளுக்கும் கிழக்கிலுள்ள அங்குலா, செயின்ட்டு மார்ட்டின் ஆகிய தீவுகளுக்கும் இடையில் உள்ள நீர்வழி, பனாமா கால்வாய்க்குச் செல்லும் கப்பல்கள் இந்நீர்வழியாகச் செல்கின்றன. பிரிட்டிசு வர்சின் தீவுகளுள் ஒன்றான அநேகதா தீவின் பெயரிலிருந்தே இக்கால்வாயின் பெயரும் அமைந்துள்ளது.

அப்சரசுகள் அழகு மிகு தேவ அணங்குகள் எழுவர். இவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது வெளிப்பட்டவர்கள். இரம்பை, விபுலா, ஊர்வசி, திலோத்தமை முதலானோர் அப்சரசுகளுள் (Apsaras) சிலர். ஊர்வசியின் அழகினை மட்டும் வேதம் கூறுகிறது. இதிகாசங்களுள் அப்சரசுகள் அனைவரைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. அனைவரையும் கவரக் கூடிய வகையில் சிரித்த முகத்துடனும் மெல்லிய