அப்சல்கான்
352
அப்சல்கான்
புவனேசுவரில் உள்ள அப்சரசுச் சிற்பம்
அணிகலன்களைக்கொண்ட இடையுடனும் நின்றவாறு இவர்கள் சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளனர்.
அப்சல்கான் பீசப்பூர் அரசாங்கத்தின் படைத்தளபதி. கி.பி. 1659–ஆம் ஆண்டில் சிவாசியின் பெருகி வளரும் ஆதிக்கத்தையும் ஆற்றலையும் கட்டுப்படுத்தவும் அடக்கவும், முடியுமானால் சிவாசியைக் கொல்லவும் அனுப்பப்பட்ட படைத்தலைவர். அப்சல்கானின் (Afzalkhan) இயற்பெயர் அப்துல்லா பட்டாரி. இவர் உயர்குடியில் பிறந்த படைவீரர். இவர் தம் சொந்தக் குதிரையைவிட்டு இறங்காமலே சிவாசியைக் கை விலங்கிட்டுச் சிறைப்படுத்திக் கொண்டு வரப்போவதாக அரண்மனை அவையில் தற்புகழ்ச்சியுடன் கூறினார். கி.பி. 1659–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பீசப்பூரை விட்டுப் புறப்பட்டு பண்டரிபுரத்தைச் சென்று அடையுமுன், வழியில் இருந்த கோவில்களை அழித்துப் பண்டரிபுரத்துக் கோவிலில் குடிகொண்டிருந்த விட்டோபாவின் திருவுருவத்தையும் இவர் அழித்தார். சிவாசியின் அமைச்சர்கள், அப்சல்கானிடம் அடிபணிந்து விடுவது நல்லது எனக் கூறிய போதிலும், சிவாசி அவ்வுரையைப் புறக்கணித்து விட்டு, அப்சல்கானுடன் போரிடுவதே சரியென முடிவு செய்து அதற்கான தந்திர முறைகளைக் கையாண்டார். அப்சல்கானின் தூதராகச் சிவாசியைக் காண வந்த கிருட்டினாசி பாசுக்கர் மூலம் கானின் நோக்கத்தைக் குறிப்பால் அறிந்து கொண்ட சிவாசி, கானை நேரில் கண்டு உரையாடிப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்னும் முடிவுக்கு வந்தார். உரையாடலின்போது தமக்குத் தீங்கு நேராது பார்க்கும் பொறுப்பு கானைச் சார்ந்தது என்னும் வாக்குறுதியைப் பெற, சிவாசி பந்தாசி கோபிநாத்து என்பவரைத் தன் தூதுவராக அனுப்பினார். பந்தாசி கோபிநாத்து அப்சல்கானை தேரில் சந்தித்தார்; கானின் நயவஞ்சகத் திட்டத்தையும் அறிந்தார். அப்சல்கான் சிவாசியை நட்பு முறையில் சந்தித்துச் சிவாசியைச் சிறையிடத் திட்டம் தீட்டியுள்ளதைக் கோபிநாத்து சிவாசியிடம் கூறினார்.
இறுதியில் பிரதாப்கட்டுக் கோட்டையிலிருந்து ஒன்றரைக் கி.மீ. தொலைவிலுள்ள பார் என்னும் கிராமத்தில் இரு தலைவர்களும் சந்திப்பதென முடிவாயிற்று. குறித்த நாளான கி.பி. 1659–ஆம் ஆண்டு நவம்பர் 2–ஆம் நாள் இருவரும் சந்தித்தார்கள். கான் பல்லக்கில் புறப்பட்டுச் சென்றார். சிவாசி தம் படைகளை வழிநெடுகிலும் இருந்த காடுகளினூடே மறைந்திருக்க ஏற்பாடு செய்துவிட்டுக் கவசமணிந்து, தலையைக் காக்க உலோகத் தொப்பியணிந்து, இடக் கைவிரல்களில் புலிநகத்தையும், வலச் சட்டைக் கைக்குக் கீழ் கூரிய சிறு பிச்சுவாவையும் அணிந்து புறப்பட்டார். சிவாசிக்கு உறுதுணையாக சிவ்மகலா, சம்பூசி காவ்சி என்னும் இரு வீரர்கள் சென்றனர்.
அப்சல்கான், உரையாடல் நடக்கத் திட்டமிடப் பெற்ற இடத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி வீரர்களுடன் வந்தார். சிவாசியின் தூதரான கோபிநாத்து, கானின் படைகள் அவருடன் இருப்பதால் சிவாசி பேச்சுவார்த்தைக்கு வரத் தயங்கக்கூடும் என்றும், எனவே படைகளைத் தள்ளியிருக்கச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. அப்சல்கானும், சிவாசியைப்போல இரு வீரர்களுடன் கூடாரத்துக்குள் வந்து சேர்ந்தார் சையது பந்தா என்னும் பெயர் கொண்ட உடைவாளேந்திய வீரனை மூன்றாம் பணியாளாகக் கொண்டுவர விரும்பிய கானின் ஆசைக்கு, சிவாசி எதிர்ப்புத் தெரிவித்து அவனையும் அனுப்பிவிட்டார். சிவாசி கூடாரத்தின் எல்லை வந்தடைந்ததும் அப்சல்கானுக்கு வணக்கம் செலுத்தினார். சில அடிகள் முன்னேறி வந்த அப்சல்கான் சிவாசியைக் கட்டித் தழுவிக் கொண்டார். சிவாசி உயரம் குறைந்தவரானபடியால் அவர் கானின் தோளுயரத்தில் நின்றார். கான் சிறிது வளைத்து சிவாசியைத் தம் கைப்பிடியில் மடக்கிக் கழுத்தை