உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பர்

359

அப்பர்

(4.1.1) என்று பாடியுள்ளார். இவர் பாடல்களில் இது போன்ற இவர்தம் வாழ்க்கை பற்றிய அகச் சான்றுகள் பல உள்ளன.

அப்பர்

சைவத்திரு முறைகள் பன்னிரண்டில், சம்பந்தர் பாடியவை முதல் மூன்று திருமுறைகளாகவும், இவர் தம் பாடல்கள் 4,5,6–ஆம் திருமுறைகளாகவும் அமையினும், இவர்தம் ‘கூற்றாயினவாறு’ என்ற பாடலே திருமுறைகளுள்– தேவாரங்களுள்– முதற்பாடலாகும். பதினாறு ஆண்டுகளே வாழ்ந்த ஞானசம்பந்தர் இவர் தம் பிற்காலத்தே (பல்லவ நரசிம்மன் காலத்தில்) தோன்றிப் பாட்டிசைத்தவர். இவர், தந்தையான மகேந்திரப் பல்லவன் காலத்திலும், மகன் நரசிம்மன் காலத்திலும் வாழ்ந்தவர்.

சமணம் விட்டு மீண்டும் சைவ சமயம் சார்ந்த காரணத்தால் இவர் பல இன்னல்களுக்கு மன்னனாலும் மற்றவராலும் உட்பட்டாலும், ஒவ்வொன்றிலும் இறை நம்பிக்கையின் காரணத்தால் வெற்றி பெற்றார் வெப்பம் மிகுந்த நீற்றறை இனிய குளிர்ப் பொய்கையாயிற்று; விடம் அமுதமாயிற்று; வெஞ்சினத்தோடு கொல்ல வந்த யானை வலம் வந்து வணங்கிற்று; கல்லே தெப்பமாயிற்று, தெப்பம் கரை சேர்ந்த இடம் இன்றும் ‘கரையேற விட்ட குப்பம்’ என்று (சடலூர் அருகில்) வழங்கப்பெறுகிறது.

பின் இவர் பலப்பல இடங்களுக்குச் சென்று இறைவனைப்பாடிப் பரவினார். இவர் பிற்காலத்தில் வாழ்ந்த ஞானசம்பந்தரோடு சிலகாலம் ஒன்றி வாழ்ந்தார்; அப்பூதி அடிகளார், முருகநாயனார் போன்றாரோடும் கலந்திருந்தார். பிற்காலத்தில் இவர் பல அற்புதங்களைச் செய்தார், இறைவன் திருவடியினை நல்லூரில் சூட்டப் பெற்றார். அப்பூதி அடிகளார்தம், விடத்தால் இறந்த மகனை உயிர்ப்பித்தார். திருமறைக் காட்டில் பலகாலம் மூடிக்கிடந்த கதவினைப் பாடித் திறப்பித்தார். திருவீழிமிழலையில் வாசியில்லாக் காசு பெற்றார்.

இவர் கயிலைவரையும் சென்று இறைவனைக் காண முயன்றார்; பின் திருவையாற்றில் கயிலைக் கோலத்தைக் கண்டார். இவர் கண்ட கயிலைக் காட்சியை இவரே பாடுகின்றார். ‘சராசரமெல்லாம் காதல் துணையொடும் கூடக்’ கண்டதே (பெ.தி. 384) கயிலைக் காட்சி என்கின்றார். எல்லா உயிர்களும்–காதல் வயப்பட்டுக் கலந்து வாழும் தெய்வ வாழ்வே கயிலைக் காட்சி என்கின்றார். காதல் மடப்பிடியோடும் களிறு வருவது, கோழிபெடையொடு கூடிக் குளிர்ந்து வருவது, வரிக்குயில் பெடையொடு ஆடி வைகி வருவது (4,3.1,2,3) கயிலைக் காட்சி என்று அவரே கூறுகின்றார்.

தமிழ்நாட்டில் பல தலங்களையும் வட நாட்டுத் திருப்பருப்பதம், காசி முதலிய தலங்களையும் (இன்றைய மரபில் காசி முதல் இராமேச்சுரம் வரையில்) நடந்தே சென்று கண்டு இறையருள் பெற்ற அப்பர், சோழநாட்டில் திருப்புகலூரில் தம் எண்பத்தொன்றாம் வயதில் இறைநிலை உற்றார். ‘புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே’ என அவரே பாடித் தாம் இறைநிலை உற்ற தன்மையினைச் சுட்டுகிறார்.

இவ்வாறு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரன், நரசிங்கன் போன்ற பல்லவப் பெருமன்னர்கள் ஆண்ட காலத்தில் வாழ்ந்த அப்பருக்கு ‘மருள் நீக்கியார்’ என்ற முதற் பெயரும், ‘நாவுக்கரசர்’ என்ற, சிறந்த பாட்டிசைத்த காரணத்தால் இறைவன் இட்ட பெயரும், அதே பொருள் பொதிந்த ‘வாகீசர்’ என்ற பெயரும் உள்ளன. ‘அப்பர்’ என்னும் பெயர் இவருக்கு ஞானசம்பந்தர் இட்டதாகும். இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் சம்பந்தர் இவரை அழைக்கும் போதும், சுட்டும்போதும் ‘அப்பர்’ என்றே குறிப்பார் (பெ.தி. 234,396). அடுத்த தலைமுறையினரான சம்பந்தருக்கு இவர் அப்பர் ஆனதோடு, வரும் தலைமுறைகளுக்கெல்லாம் அப்பராகவே என்றும் வாழ்ந்து வருகிறார்.

இவர் வெறும் சமயத் தலைவராக மட்டும் இருந்திருப்பராயின் இன்றளவும் போற்றப்பெறுவரா என்பது ஐயமே. இவர் சிறந்த சமுதாயச் சீர்திருத்தக்காரராக ஏழாம் நூற்றாண்டில் விளங்கினார். அவ்வாறு சிறந்த சீர்திருத்தவாதியாக இவர் விளங்கினதால் இவரைச் சேக்கிழார் ‘பெரியார்’ (பெரியவர்)