அபிநவகுப்தர்
379
அபிநவபாரத சங்கம்
அபிநவகுப்தர் சைவ சமயப் பிரிவான காசுமீர சைவ சமயத்தை உருவாக்கியவர்; வடமொழிப் புலமை சான்றவர். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில், காசுமீர நாட்டு மன்னனாகத் திகழ்ந்த இலலிதாதித்தனால் இவர்தம் முன்னோர் கானியகுப்சத்திலிருந்து காசுமீரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவர் தந்தையார் நரசிம்ம குப்தர், தாயார் விமலகலை, கி.பி. 11–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர் இளமையில் தம் தந்தையாரிடம் இலக்கணத்தையும், இலட்சுமண குப்தரிடம் திரிக தரிசனத்தையும், சம்புநாதரிடம் குலநெறியையும் கற்றார். திரிகம், குலம் என்பவை அத்துவித சைவமாகிய காசுமீர சைவத்தின் கோட்பாடுகளை விளக்குவன. இவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைச் சமய வளர்ச்சிப் பணியிலேயே கழித்தார். இவர் உருவாக்கிய காசுமீர சைவம், இவர் பெயரால் அபிநவகுப்தாசாரிய மதம் எனவும் கூறப்படும்.
தென்னாட்டுச் சைவ சித்தாந்தத்தில் 28 சைவ ஆகமங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது போல், காசுமீர சைவத்தில் 64 அத்விதுத ஆகமங்கள் அடிப்படை நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சைவ சித்தாந்திகளும் காசுமீர சைவ சமயத்தினரும் ஆணவம், கன்மம், மாயை, 36 தத்துவங்கள், துரியாதீத நிலை, சிவபரம்பொருள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர். அத்துவைதிகள் பிரமம் ஒன்றே உள்பொருள்; உலகம் பொய் (மித்யை) என்று சொல்வர். காசுமீர சைவர் சிவன் ஒருவனே பரம்பொருள் என்பதன்றிச் சிவனின் உருவம் உலகம் என்பதால் உலகமும் உண்மைப் பொருளே, மாயை அன்று என்பர். காசுமீரத்தில் பழமையாக இருந்த துவித சமயம் மாறிக் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் அத்துவித சமயம் தோன்றியது. இதற்குக் காரணம் ஆதி சங்கரர் காசுமீரத்திற்குச் சென்றதேயாகும்.
அபிநவகுப்தர் 38 சாத்திர தோத்திர நூல்களை இயற்றியுள்ளார். ‘உருத்ர யாமள தந்திரம்’ என்னும் நூலிற்கு உரை எழுதியுள்ளார். ‘தந்திராலோகம்’ என்பது இவருடைய பட்டறிவு, சிவாகமங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட மிகவும் விரிவான நூல் ஆகும். மேலும் பகவத் கீதைக்கு அத்துவித சைவ மரபை ஒட்டி எழுதப் பெற்ற பகவத் கீதார்த்த சங்கிரகம், உத்பலாசாரியரின் ‘ஈசுவர பிரத்யபிக்ஞை’ என்னும் நூலின் உரைக்கு எழுதப்பட்ட ‘ஈசுவர பிரத்யபிக்ஞா விவிருதி விமர்சனி’ ஆகியன இவர்தம் உரை நூல்களுள் சிலவாகும்.
மேற்கூறிய தத்துவ நூல்களன்றி, கிரமன் தோத்திரம், பைரவத் தவம் முதலிய தோத்திர நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவற்றை இன்றும் காசுமீரப் பண்டிதர்கள் போற்றுகிறார்கள். அத்துவிதத்திற்குச் சங்கரரைப் போலக் காசுமீர சைவத்திற்கு இவர் ஒரு வடிவைக் கொடுத்தவராவார்.
அபிநவகுப்தருக்குத் தொனிக் கொள்கையைக் கற்பித்தவர் இந்துராசர்; நாட்டிய இயல் கற்பித்தவர் பட்டதோதர். அவர் எழுதிய அலங்கார நூல்கள், பரதரின் நாட்டிய சாத்திர உரையான அபிநவபாரதியும், ஆனந்தவர்த்தனரின் தொனியாலோகத்தின் உரையான உலோசனமும் ஆகும். தம் ஆசிரியர் பட்டதோதர் எழுதிய காவியகௌதுகமும், அந்நூலுக்கு அபிநவகுப்தர் எழுதிய உரையும் கிடைக்கவில்லை.
‘அமைதி’ என்ற ஒன்று ஒப்புக்கொள்ளத்தக்கதன்று என்னும் கருத்தை மறுத்துப் பட்டதோதர் அது உண்டு என எவ்வாறு நிறுவியிருக்கிறார் என்பதை இவர்தம் உரையில் குறிப்பிட்டு, அதற்குத் தம் உடன்பாட்டையும் தெரிவித்துள்ளார். எல்லாச் சுவைகளிலும் முதன்மையானது அமைதி என்றும் அது முத்திப் பேற்றை அளிக்கும் என்றும் இவர் கூறியுள்ளார்.
அபிநவபாரதியில் பரதரின் காவிய இலக்கணங்களைப் பற்றிப் பலருடைய கருத்துகளைக் கூறும் போது உடலுக்கு உடற்கூற்றிலக்கணம் போன்றது. காவியப் பாங்கு என்றும், உடலில் அணியும் அணிகளைப் போன்றன காவியத்திற்கு அலங்காரங்கள் என்றும் கூறியுள்ளார். சுவையே காவியத்தின் உயிர் நாடி என்பது அபிநவகுப்தரின் கருத்தாகும். பி.தி.
அபிநவ பம்பா ஒய்சள மன்னர் முதலாம் வல்லாளரின் அவையைச் சார்ந்த சமண சமய ஒன்பதின்மருள் ஒருவர். அவருடன் அவையில் சிறப்புற விளங்கியவர் காந்தி என்னும் பெண்மணியாவார். அவர் பெண் கவிஞரும் சொல்லாற்றல் மிக்கவருமாவார். அவர்தம் கருத்தைக் கவரும் கவிதைகளும் ஆற்றல் மிகுந்த பேச்சுத்திறனும் அனைவரையும் கவர்ந்தன. காந்தி அம்மையார், அபிநவ பம்பாவினால் முடிக்கப் பெறாத கவிதைகளை அரசரின் அவையிலேயே பாடி முடித்தவர் என்று புகழப்பெற்றவர். முதலாம் வல்லாளர் கி.பி. 1100 முதல் 1106 வரை அரசாண்டார்.
அபிநவபாரத சங்கம்: இந்த அமைப்பை 1906–இல் தோற்றுவித்தவர் புரட்சி வீரர்களின் இளவரசர் எனப் புகழப் பெற்ற விநாயக தாமோதர சாவர்க்கர். இதை உருவாக்குவதில் சாவர்க்கரின் அண்ணன் அவருக்கு உறுதுணையாக இருந்தார். இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதன் கிளைகள் இருந்தன. படைக்கலம் தாங்கிப் போர்புரிந்து