உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க உளவியல் சங்கம்

432

அமெரிக்க உளவியல் சங்கம்

“Cambridge History of American Literature”, 3Vs in one, Macmillan, ‘54.

Canliffe, Marcus, “The Literature of the united States”, 3rd ed., Penguin, 1976.

Gohdes, Clarence, “Bibliographical guide to the Study of the Literature of the United States of America”, 2nd ed., Durham, Duke Univ. Press, 1963.

Hart, J.D., “Oxford Companion to American Literature”, 4th ed., Oxford, 1965.

Jones, Howard, M: “Guide to American Literature and its Background Since 1890”, 3rd ed., Harvard Univ. Press, 1964.

Meserole, Harrison, T., et al, eds, “American Literature: Tradition and Innovation”, 4Vs Health, 1974.

Parrington, Veroon, L., “Main Currents in American Thought”, Harcout, 1958.

Scherman, D. E, & Redlich, Rosemary., “America: the Land & its Writers”, Dodd, 1956.

Spiller, R. E., et al, “Literary History of the United States”, 4th ed., 2 Vs., Macmillan, 1974.

Wilson, Edmund, ‘ed’, “The shock of Recognition: The Development of Literature in the United States recorded by The Men who made it”, Octagon, 1974, (reprint of 1943 ed.)

“Parriotic gore: studies in the Literature of American Civil war”, 1962.

Benet, W.R & Pearson, N H eds, “Oxford Anthollogy of American Literature”, 2 Vs, Oxford, 1938.

Fadiman, Clifton., ed. “American Treasury, Harper, 1955”.

Foerster, Norman, ed., “American Poetry and Prose”, Houghton, 1960.

Untermeyer, Louls., ed. “The Britannica Library of Great American writing”, 2Vs., Lippincott, 1960.

அமெரிக்க உளவியல் சங்கம் அமெரிக்காவிலுள்ள வாசிங்டன் நகரத்தில் (Washington D.C.) 1892–ஆம் ஆண்டு இச்சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கம் பின்வரும் பன்னிரண்டு குறிக்கோள்களை மையமாகக் கொண்டு, உளவியலார்கள் ஒருங்கிணைந்து செயற்பட உதவுகிறது: அக்குறிக்கோள்களாவன 1. பொதுப்பணி செய்வதன் வாயிலாகச் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவது, 2. உளவியலார் தங்கள் ஆற்றலைப் பொதுமக்கலின் நலனுக்கு ஈடுபடுத்துவது, 3. இதன் வாயிலாகத் தங்கள் செயற்றிறனைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவது, 4. தங்கள் துயர்களைப் பெரிதாகக் கருதாமல் உள நோயாளிகளைக் காப்பதே முதற்கடமையாகக் கொள்வது, 5. தங்களின் தனித்திறமைகளை வளர்த்து அத்துறைகளில் சிறந்து விளங்குவது, 6. தங்களுடன் தொடர்புள்ள மற்றத் தொழில் துறைகளுடன் இணைந்து செயலாற்றுவது, 7. உணவியல் துறையில் ஆய்வு, கற்பித்தல், செயல் நிறைவேற்றல் போன்ற முயற்சிகளை மேற்கொள்வது, 8. இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது, 9. நடைமுறைக்கு இயலாதவற்றை உளவியல் தொழிலில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, 10. தங்கள் பயிற்சியினை எதிர்காலச் செயல்திட்டங்களுக்குப் பயனுடையதாக ஆக்குவது, 11. ஆய்ந்து முடிவு செய்யாத நுண்முறைகளைக் கையாள்வதைத் தவிர்ப்பது, 12. சமூகப் பொருளாதாரப் பாகுபாடின்றித் தேவைப்படுபவர்களுக்குத் தங்கள் பணியினைக் கிடைக்கச் செய்வது ஆகியனவாம்.

அமெரிக்க உளவியல் சங்கம் (American Psychological Association) 47,000–த்திற்கும் மேற்பட்ட உளவியலார்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. மேலும் இச்சங்கம், சோதனை உளவியல், ஒப்புமை உளவியல், வளர்ச்சி உளவியல், உளநோய் நீக்கு உளவியல் (Clinical Psychology), தொழிலக உளவியல், கல்வி உளவியல் போன்ற 38 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவ்வத்துறைகளில் திறமை வாய்ந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கிறது.

உளவியல் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டு அவைகளைச் செயற்படுத்திப் பார்ப்பதன் வாயிலாக உளவியலில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி, அவற்றைச் சமூகத்திற்குப் பயனுள்ளனவாக ஆக்குவதே இச்சங்கத்தின் தலையாய குறிக்கோளாகும். இக்குறிக்கோளை அமெரிக்க உளவியல் சங்கத்தின் நிருவாகக் குழு, துறைப்பகுதிகளின் பிரதிநிதிகள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர் முனைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

இச்சங்கம் பதினெட்டு ஆய்வு இதழ்கள், செய்தித் தாள்கள், நூல்கள், அறிக்கைகள், கால இதழ்கள், மாதச் செய்தித் தாள்கள் (APA Monitor) ஆகியவற்றை வெளியிடுகிறது. இவ்வெளியீடுகள், உளவியல் துறையில் ஏற்படுகிற முன்னேற்றத்தைப் பற்றிய