அமைப்பு
491
அமைப்பு
சொல்லில் மெய்யெழுத்தான ‘ப்’க்குப் பதிலாக‘க்’ சேர்த்தால் அது ‘கடி’ என மாறுகிறது. இதிலிருந்து ஒலியன்கள் (Phonemes) பொருளை மாற்றும் ஆற்றலுடையவை எனத் தெளியலாம். மேற்சொன்ன வாக்கியத்தின் ஒலியன்களை /அ+வ்+அ+ன்/, /ம்+அ+ர்+அ+த்+த்+ஐ/, /வ்+எ+ட்+ட்+இ+ன்+ஆ+ன்/ எனக் குறிக்கலாம். வாக்கியத்தின் குரலிசையும் (Intonation) வினா, ஏவல் என வாக்கிய அமைப்பிற்கேற்றவாறு மாறும்.
பொருளியல் நிலை: வாக்கியம் பகு சொற்களையும் பகாச் சொற்களையும் கொண்டு அமையும். மேற்கண்ட வாக்கியத்தில் மூன்று சொற்கள் அமைந்துள்ளன. ‘அவன்’, ‘மரத்தை’, ‘வெட்டினான்’ எனும் இம்மூன்று சொற்களுக்கும் இடையிலுள்ள உறவைத் ‘தொடரியல் உறவு’ (Syntagmatic Relations) எனலாம். ‘அவன்’ எனும் சொல்லை, ‘நான், நீ, அவள்’ போன்றவற்றாலும் ‘மரத்தை’ என்பதைப் ‘பழத்தை காயை’ போன்றவற்றாலும், ‘வெட்டினான்’ என்பதை ‘அடித்தான்’, ‘வெட்டுகிறான்’, போன்றவற்றாலும் பதிலீடு செய்யலாம். இவ்வுறவு அடுக்கியல் உறவு (Paradigmatic Relation) எனப்படும்.
ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஓர் அக அமைப்பும் (Deep Structure) ஒரு புற அமைப்பும் (Surface Structure) இருக்கின்றன என மாற்றிலக்கணம் கூறுகிறது.
அணுகுமுறை: ஒரு மொழியின் ஒலிகள், இலக்கணக் கூறுகள், சொற்கள் முதலியவற்றின் அமைப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அணுகுமுறை. ‘அமைப்பியல் அணுகுமுறை’ (Structural Approach). மொழியை விளக்க அதன் அமைப்பையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்னும் அணுகுமுறைக்கு வித்திட்டவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்டினன்ட்டு டி சசூர் ஆவர் (Fertinant de Saussure). இவர் தம் ஆய்வில் மொழிப்புறவியல்பு (Extrinsic Approach), மொழி அகவியல்பு (Intrinsic Approach) என்னும் இரு அணுகுமுறைகளைக் கையாண்டார். இவற்றுள், மொழி அகவியல்பே மொழியமைப்பை விளக்க அடிப்படையானது.
மொழியமைப்பியல் அணுகுமுறை ஒரு மொழியின் அமைப்பை விளக்கும்போது அம்மொழியின் வரலாற்றைத் தன் ஆய்வில் சேர்ப்பதில்லை, அதனால் வரலாற்றுமுறை மொழியியல் (Diachronic Linguistics), நிலைமுறை மொழியியல் (Synchronic Linguistics) என்று இரு பிரிவுகளாகக் கொண்டு ஆராயத் தொடங்கினர்.
சசூரின் அமைப்பியல் அணுகுமுறையிலிருந்து வேறுபட்டு, மொழியியலார் மூன்று குழுக்களாகப் பிரிந்தனர். முதலாவதாக என்.எஸ். துருபட்சுகோய், உரோமன் யாகோப்சன் ஆகியோரின் பிராக் குழு, செயற்பாட்டு மொழியியல் (Prague School–Functional Linguistics) எனும் பெயரில் ஆராயத் தொடங்கியது.
இரண்டாவதாக இலூயிசு எம்சுலேவின், கோபன் கேகன் குழு (Louis Hjelmslev), மொழிக்கணிதம் (Glosse matics) என்னும் பெயரில் ஆராயத் தொடங்கியது.
மூன்றாவதாக இலியனார்டு புளூம் பீல்டு, ஏரிசு ஆகியோரின் அமெரிக்கக் குழு, விளக்க மொழியியல் (Descriptive Linguistics) எனும் பெயரில் ஆராயத் தொடங்கியது.
இம்மூன்று குழுக்களிலும் அமெரிக்கக் குழுவே அமைப்பு மொழியியலைச் சிறப்பாக வளர்த்தது. எல்லா மொழிகளுக்கும் பொருந்துமாறு ஒரு பொதுவான அமைப்பு விளக்கச் செய்முறையையும், விதிமுறைகளையும் உருவாக்கியவர் புளூம் பீல்டு ஆவார். ஒலிகள் சேர்ந்து சொற்பொருளை உருவாக்கும் முறைகளை ஆராய்வதையே மொழியியல் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. அமைப்பியல் அணுகுமுறையில் மொழியமைப்பு ஒன்றுதான் சிறப்புத் தன்மை பெறுகிறது. சொற்பொருளாய்வைத் தன் ஆய்வில் சேர்ப்பதில்லை. எனவே, மொழி விளக்கத்திற்கான செய்முறைகளையே அமைப்பியல் அணுகுமுறை எனக் கூறலாம். இச்செய்முறைகளே மொழியமைப்பை ஆராய்வதற்கும், தரவுகளிலிருந்து (Data) ஓர் இலக்கணத்தை உருவாக்குவதற்கும் உதவுகின்றன.
அமைப்பு மொழியியலின் முதன்மையான குறிக்கோள்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில், இனத்தின் மொழியை விளக்குதல்; பேச்சு வழக்கை விளக்குதல்; சொற்களின் பொருளைவிட எளிதில் உணர்ந்து, நிறுவக்கூடிய மொழியின் அமைப்பை விளக்குதல்; முறையான புறவயம் சார்ந்த செய்முறைகளைக் கையாண்டு ஆராய்ந்து ஓர் இலக்கணத்தை உருவாக்குதல், வருமுறைக் கூறுகளால் (Distributions) விளக்குதல்; மொழியை ஒலியனியல், உருபனியல், தொடரியல் எனப் பல நிலைகளாகப் பிரித்து ஆராய்தல் ஆகியனவாகும்.
இக்குறிக்கோள்களைத் தெளிவுறுத்த ஒவ்வொரு நிலையிலும் வரும் மிகச் சிறிய கூறுகளையும் விளக்க வேண்டும். மேலும் அக்கூறுகளைப் பாகுபாடு செய்ய வெண்டும். ஒவ்வொரு பிரிவிலும் வருகிற கூறுகளை