அமைப்புமுறைவழிக் கற்பித்தல்
497
அமைப்புமுறைவழிக் கற்பித்தல்
பதனிடப்படாமல் முதலில் அளிக்கப்படும் பொருள்கள் உள்ளீடு என்றும், அம்மூலப் பொருள்களைப் பதனிடப்படுத்தும் முறை செயற்பாங்கு என்றும், பதனிடப்பட்ட பின் எண்ணிய விளைவுகளைப் பெற்ற பொருள்கள் வெளீயீடு என்றும் வழங்கப் பெறும். இயற்கையான திறன்களோடு (உள்ளீடு) வரும் மாணவர், பள்ளியில் நிகழும் கற்பித்தல் (செயற் பாங்கு) மூலம் புதிய திறன்களோடு (வெளியீடு) வெளி வருவதும் ஓர் அமைப்பு ஆகும். பாடம் கற்பித்தபின், மாணவர் திறன்கள் அளந்தறியப்படுகின்றன. அத்திறன்கள், கற்பித்தலின் நோக்கங்களை எட்டியுள்ளனவா என்று ஒப்பீடு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் மறுபடியும் மாணவர்களுக்குக் கற்பித்தல் என்ற பின்னூட்டல் (Feed back) நடைபெறுகிறது. கல்வி கற்பித்தலில், ஆசிரியரே தம் கற்பித்தலை நேர்படுத்திக்கொள்ளக் கூடிய அமைப்பின் மாதிரியைப் பின்வரும் படம் விளக்குகிறது.
┌────────────┐
பின்னூட்டல் (Feed back)
(Input)
(Process)
(Comparator)
(output)
┴────────────┴
கல்வி நிலையம் ஓர் அமைப்பு: சமூக அமைப்பு என்பதை ஓர் அமைப்பாகக் கொண்டால் கல்வி என்பதை அதன் துணை அமைப்பாகக் கொள்ளலாம். கல்வியையே ஓர் அமைப்பாகக் கொண்டால் மேலும் அதைப் பல்வேறு துணை அமைப்புகளாகப் பிரிக்கலாம். பள்ளிக்கல்வி என்ற அமைப்பானது கல்வி என்ற அமைப்பின் துணை அமைப்பாகும்.
எடுத்துக்காட்டாக, கல்வி நிலையத்தை அமைப்பு எனக்கொண்டால், திட்ட இலக்குகள், திட்டங்கள் கட்டுப்பாடுகள் (Controls), விதிகள், விதிமுறைகள், அமைப்பின் கூறுகள், கற்பித்தலின் தொழில் நுணுக்கம், நிலையச் சூழல், மனிதச் செயற்பாடுகள் போன்றவை பள்ளி அமைப்பின் உள்ளீடு ஆகும். இவ்வுள்ளீடுகளின் ஒன்றிணைந்த உறவுகளின் செயற்பாட்டில் விளையும் பள்ளிச் சூழ்நிலை, வெளியீடு எனப்படும். இதனைப் பின்வரும் கருத்தியல் மாதிரி மூலம் அறியலாம்.
வா.க. 1 - 37