அமைப்பு மொழியியல்
502
அமைப்பு மொழியியல்
- க்ராமம் → கிராமம்
- புத்ரன் → புத்திரன்
- காவ்ய → காவிய
ஒவ்வொரு மொழியும் அதற்குரிய முறையில் ஒலியன்களின் சேர்க்கையை அனுமதிக்கிறது. இதனால் எல்லா ஒலியன்களும் எல்லா ஒலியன்களோடும் ஒரு மொழியில் இணைந்து வருவதில்லை என்பது தெரிகிறது. ஒலியன்கள் இணைந்து வருவதிலும் ஒரு சில கட்டுப்பாடுகள் (Constraints) உள்ளன.
இப்பொழுது சேர்க்கைநிலைத் தொடர்பைத் தொடரியல் நிலையில் விளக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொடருக்குள் உள்ள சொற்கள், ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் வருகிற கட்டுப்பாடும் இத்தொடர்பைச் சேர்ந்ததுதான். எடுத்துக்காட்டாக, ‘அந்த அழகிய மலர்’ என்னும் தொடரை எடுத்துக் கொள்ளலாம். இதில் அழகிய என்ற சொல் மலர் என்ற பெயருக்கு முன்னால் வருகிறது. மலர் என்ற பெயரை அடுத்து அழகிய என்ற சொல் பெயர்த் தொடரில் (Noun Phrase) வரத் தமிழ் அனுமதிப்பதில்லை. தொடர் வழுவாகக் கருதப்படும். வாக்கிய நிலையிலும், பல்வேறு இடங்களில் வருகின்ற சொற்களுக்கிடையேயும் இத்தகைய சேர்க்கை நிலைத் தொடர்பைக் காணலாம். மேலே சுட்டிய தொடரில் அடுத்தடுத்து வருகிற சொற்களுக்கிடையிலான தொடர்பு சுட்டப்பட்டது. சேர்க்கை நிலைத் தொடர்பை வாக்கியத்தில் அடுத்தடுத்து வருகிற சொற்களுக்கிடையில் மட்டுமன்றி அடுத்தடுத்து வராமல் இடைவிட்டு வருகிற சொற்களுக்கிடையிலும் காணலாம். சொற்களுக்கிடையில் மட்டுமன்றிச் சொற்களுக்கும், விகுதிகளுக்குமிடையில்கூட இத்தொடர்பு காணப்படலாம்.
கண்ணன் நேற்று வந்தான்.
சோம்சுகி நாளை போராட்டத்தில் குதிப்பார்.
மேற்கண்டவற்றுள் முதல் வாக்கியத்தில் உள்ள ‘நேற்று’ என்ற சொல்லுக்கும் வினையில் உள்ள ‘ந்த’ என்ற விகுதிக்கும் சேர்க்கை நிலைத் தொடர்பிருக்கிறது. இதுபோன்றே இரண்டாம் வாக்கியத்தில் உள்ள ‘நாளை’ என்பதும் ‘ப்ப’ என்பதும் சேர்க்கை நிலைத் தொடர்பில் உள்ளன. ஆனால், ‘கண்ணன் நேற்று வருவான்’; ‘சோம்சுகி நாளை போராட்டத்தில் குதித்தார்’ என்னும் வாக்கியங்களில் நேற்று என்பது வ் என்பதுடனும் நாளை என்பது த் த என்பதுடனும் சேர்க்கைநிலைத் தொடர்பில் இயைந்து வருவதில்லை; ஆகையால் இவை வழு வாக்கியங்கள்.
இத்தகைய தொடர்பை வாக்கியத்தில் எழுவாயாகச் செயற்படுகிற பெயருக்கும் வினையில் வருகின்ற விகுதிக்கும் இடையிலும் காணலாம். ‘சித்திரா சிரிக்கிறாள்’ ‘ஆனந்த் படிக்கிறான்’ ‘சித்திரா சிரிப்பான்’ ‘ஆனந்த் படிக்கிறாள்’ மேற்கண்டவற்றுள் முதல் வாக்கியத்தில் வரும் சித்திரா என்பது பெண்ணைக் குறிக்கின்ற பெயர்ச் சொல்; இது எழுவாயாகச் செயற்படுவதால் – ஆள் என்ற விகுதி வினையோடு வருகிறது. இவ்விதி ‘சித்திரா சிரிப்பான்’, ‘ஆனந்த் படிக்கிறாள்’ ஆகிய வாக்கியங்களில் மீறப்படுவதால் அவை வழுவாக்கியங்கள், எழுவாய்க்கும் வினையோடு வருகிற விகுதிக்குமிடையே உள்ள தொடர்பு சேர்க்கை நிலைத் தொடர்பென்று கூறப்படும்.
தொடரியலை விரிவாக ஆராய முற்பட்ட அமைப்பு மொழியியல் மூன்றாவது பரிமாணமாக வேறொரு தொடர்பையும் வலியுறுத்த வேண்டி வந்தது. குறிப்பாக வாக்கிய அமைப்பை விவரிக்கும் பொழுது சொற்களுக்கிடையேவாய்பாட்டுத் தொடர்பும் சேர்க்கை நிலைத் தொடர்பும் மட்டுமன்றி அவற்றிற்கிடையேயுள்ள படிநிலைத் தொடர்பையும் (Hierarchical Relationship) காட்ட வேண்டியிருக்கிறது. சொற்கள் இணைந்து தொடர்களையும் தொடர்கள் இணைந்து வாக்கியத்தையும் தோற்றுவிக்கின்றன. வாக்கியம் மேலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் இரண்டிரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இப்பிரிவு சொல் நிலையை அடையும்வரை தொடர்கிறது. இதேமுறை சொல்லில் தொடங்கி வாக்கியத்தில் முடிக்கப்படுவதும் உண்டு. இதைப் பின்வரும் வாக்கியம் மூலம் விளக்கல் கூடும்.
- ‘உருசியா இந்தியாவை ஆதரிக்கிறது’,
இவ்வாக்கியத்தை,
உருசியாஇந்தியாவைஆதரிக்கிறது
┴───────────────┴
┴─────────────────────┴
எனவும்,
எனவும் காட்டலாம். இத்தகைய வாக்கியப் பகுப்பிற்குப் பதிலிடுமுறை (Substitution Method) அடிப்படையாக உள்ளது.
அமெரிக்க நாட்டில் அமைப்பு மொழியியலுக்கு வித்தூன்றிவயர்கள் புளும்பீல்டு (Bloomfield), சபீர் (Sapir) போன்ற அறிஞர்கள். அமெரிக்க நாட்டிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வளர்ந்த மொழியியலை அமைப்பு மொழியியல் என்று குறிப்பிட்டாலும் இந்-