அய்கொளே
508
அய்கொளே
பிற்பட்ட காலத்தில் கட்டப்பெற்ற மாடிக் கருவறை உள்ளது.
கோண்டுகுடிக் கோயில்: இக்கோயிலின் கூரை, மையப்பகுதி சமதளமாகவும் ஓரங்கள் சரிவாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சமதளக் கூரையின்மீது சிகரம் கட்டப்பட்டுள்ளது. சிகரத்தின் நான்கு பக்கங்களிலும் நடராசர், வராகர், பைரவர், வாமனர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. சிகரத்தின் கீழேயுள்ள எட்டு மூலைகளில் காவல் வீரர்களின் சிற்பங்களும் அவற்றிற்கு நடுவில் பிரம்மாளின் சிற்பமும் உள்ளன. கோயிலின் முகப்பிலுள்ள வாயிற்படியின் உத்தரத்தில் கருடனின் உருவமுள்ளது. இக்கருடனின் உருவத்திலிருந்து இக்கோயில் திருமால் கோயில் என்பது புலனாகும். ஆனால், இப்பொழுது சிவனுடைய கோயிலாகவே இதுவும் காட்சியளிக்கிறது. கருவறையின் அருகில் இருக்கும் கூரைகளில் சிவன், அவரது தேவி, தாமரையின் மேலுள்ள பிரமன், பாம்பணையில் படுத்திருக்கும் பரந்தாமன் ஆகியோருடைய சிற்பங்கள் காணப்படுகின்றன.
துர்க்கை கோயில்
இலாட்கான் கோயில்
துர்க்கை கோயில்-தரைப்படம்
இலாட்கான் கோயில்-தரைப்படம்
துர்க்கை கோயில்: கோயிற் கட்டடக் கலையில், மிகவும் சிறந்து விளங்குவது இந்த ஊரிலுள்ள
துர்க்கை கோயிலாகும். இக்கோயில் தூங்கானை மாட அமைப்பைப் பெற்றுள்ளது. இரு வரிசையாக அமைக்கப்பட்ட தூண்கள் இக்கோயிலின் மையப் பகுதியையும் புறப்பகுதியையும் பிரிக்கின்றன. சதுர வடிவத்தில் அழகுடன் அமைந்த புடைப்புச் சிற்பங்களைக் கொண்டு தூண்கள் திகழ்கின்றன. இக்கோயில் உயர்ந்த பீடத்துடன் கட்டப்பட்டுள்ளது. பீடப்பகுதிகளில் குள்ளமான உருவமுடைய பொதிகைச் சிற்பங்-