அய்கொளே
509
அய்கொளே
கள், வேடிக்கைத் தோத்றங்களுடன் காட்சியளிக்கின்றன. தூண்களின் தலைப்புப் பகுதிகளிலும் சிற்பங்கள் உள்ளன. கோயிலின் பழைய மேற்கட்டு அழிந்து போய் அவ்விடத்தில் சற்றும் பொருத்தமில்லாத நாகரம் என்னும் ஒருவகைக் கலைப்பாணியிலமைந்த சிறிய சதுரச் சிகரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் வட இந்தியக் கலைப்பாணியான நாகரமும், தென்னிந்தியக் கலைப்பாணியான திராவிடமும் ஒருங்கே இணைத்துக்கட்டப்பட்ட கோயிலாகக் காட்சி அளிக்கிறது. கோயிலின் நுழைவு வாயில் உத்திரத்தில் கருடனின் உருவமுள்ளது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள திருச்சுற்றில், கருவறையின் வெளிச் சுவர்களில் நரசிம்மர், மகிடாசுரமர்த்தினி, வராகர், திருமால், அர்த்தநாரி, சிவன் ஆகியோவின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது.
உச்சிமல்லிகுடி கோயில்: இக்கோயில் கருவறையும் சிகரமும் வட இந்தியப் பாணியைச் சார்ந்து காட்சியளிக்கிறது. இக்கோயிலின் முகப்பிலுள்ள அரைவட்டக் கூட்டில் நடனமாடும் நடராசர் உள்ளார். முகமண்டபத் தூண்கள் சிற்பங்களெவையுமின்றி உள்ளன. முக மண்டபத்தை அடுத்துத் தூண்களுடன் கூடிய மற்றொரு மண்டபம் சுற்றுச் சுவர்களுடன் உள்ளது. இது கருவறையைச் சுற்றிச் செல்கிறது. முகமண்டபக் கூரையில் கார்த்திகேயனின் சிற்பம் உள்ளது. அவர் மயில்வாகனத்தில் அமர்ந்துள்ளார்.
உச்சகப்பய்யாக் கோயில்: அய்கொளேயிலிருந்து தென்மேற்காகச் சற்றுத் தூரத்தில் உச்சகப்பய்யாக் கோயிலமைந்துள்ளது. இது மிகப் பெரிய கோயிலாகும். கோயில் கலைப் பாணி முறையில் அமைக்கப்பட்டது. இதன் சிகரம் வடஇந்தியக் கருவறையின் வெளிப்பக்கமுள்ள மூன்று மாடக் குழிகளில் இரண்டில் மட்டும் நரசிம்மரின் சிற்பமும் பைரவரின் சிற்பமும் உள்ளன. மற்றொரு மாடக்குழியில் எந்தச் சிற்பமும் இல்லை. இக்கோயிலின் மண்டபக்கூரை சமதளங்களுடன் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூரையினைப் பெரிய தூண்கள் தாங்குகின்றன. தூண்களில் கணங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சுவருடன் ஒட்டிய தூண்களில் சிவனுடைய சூலமும் பாம்பும் இருக்கின்றன. கூரையில் சிவன், பார்வதி, பாம்புப் படுக்கையில் திருமால், பிரமன் அவர்களைச் சுற்றி வழிபடும் மக்கள் ஆகியோரின் உருவங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுது இச்சிற்பங்கள் அமைந்த தொகுதி (Panel) பம்பாய் வேல்சு இளவரசர் அருங்காட்சியகத்தில் உள்ளது. இச்சிற்பங்கள் சாளுக்கியரின் சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாம்.
இக்கற்றளிகளை யடுத்து மேலும் இரண்டு சிறப்பு மிக்க குடைதளிகள் உள்ளன. இக்குடைதளிகள் வாதாபியிலுள்ள குடைதளிகளைவிட அளவில் சிறியனவாகவும் வேலைப்பாடு குறைந்தும் காணப்படுகின்றன. இவ்விரண்டு குடைதளிகளுள் சிவனுக்குரிய இராவுலகுடி அல்லது இராவுல்பாடி குடைதளி, மற்றொரு குடைதளியைக் காட்டிலும் மேம்பட்டது. இராவுலகுடி குடைதளி, இரண்டு தூண்களுடன்கூடிய பெரிய அறைகளையும், குகையின் இறுதியிலும் இரு பக்கங்களிலும் தெய்வங்கள் உள்ள சிறு அறைகளையும் கொண்டுள்ளது. குடைதளியின் மூலைகளிலுள்ள சுவர்களில் அர்த்தநாரீசுவரர், கங்காதரர், பகீரதர் சிற்பங்கள் உள்ளன. குடைதளியின் உட்கூரையில் அமைந்துள்ள தாமரைப் பூவின் அமைப்பு, காண்பவரின் கருத்தைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. குடைதளியிலுள்ள கருவறை இடைக் கூடத்துடன் அமைந்துள்ளது. இவ்விடைக் கூடத்தின் நுழைவு வாயில் அழிந்துபட்டிருக்கிறது. இக்கோயில் சுவரின் இடப் பக்கத்தில் பத்துக் கைகளுடைய நடனமாடும் சிவனும் தேவி பார்வதியும் கணபதியும் ஏழு பெண் தெய்வங்களும் சிற்ப வடிவிலுள்ளன. இச்சிற்பங்கள் அணிந்துள்ள ஆடைகளும் அணிகளும் உயர்ந்த தலையணிகளும் மிக நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்டுள்ளன.
சமணர் குகைக்கோயில்: இக்குகைக்கோயில் அய்கொளேயின் தென்மேற்கே அமைந்துள்ளது; தாழ்வாரமும் அதையடுத்து மண்டபமும் கொண்டமைந்துள்ளது. கூரைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் பல உள்ளன. குடைதளியின் உள்ளே உள்ள கருவறையில் அமர்ந்த நிலையிலுள்ள தீர்த்தங்கரரின் உருவம் உள்ளது. காவல் தெய்வங்களும் குள்ளமான உருவமுடைய பணியாளர் சிற்பங்களும் நுழைவு வாயிலின் இரு பக்கங்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. தாழ்வாரத்தின் சுவர்களில் பார்சுவநாதர் உள்ளார். பாம்புத் தலை அவரது தலைக்கு மேலே உள்ளது. தவத்துடன் இருக்கும் கோமதீசுவரர் தம் சகோதர்களுக்கிடையே நின்ற வண்ணம் காட்சியளிக்கின்றார்.
அய்கொளேயில் உள்ள கோயில்கள் யாவும், தென்னகத்தின் கோயிற் கட்டடக் கலையான திராவிடப் பாணியைக் கொண்டுள்ளன. விமானங்கள் உண்ணாழிகையின் மேற்கட்டுகளாக மேலே போகப் போகக் குறுகி அமைந்துள்ளன. பிரத்தரம் என்று கூறப்படும் கூடங்களைச் சுற்றிலும் சாலை, பஞ்சரம் ஆகியவை கொண்ட ஆரங்களைக் கொண்ட தளங்களையும் மேல் உச்சியில் கிரிவம், சிகரம், தூபி அமைப்புகளையும் பெற்று விளங்குகின்றன. உண்ணாழிகையின் பிரத்தரத்தின்மேல் சிறு விமான வடிவங்களைக்