உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயர்லாந்து

514

அயர்லாந்து

அயர்லாந்து

நிலவியல், மொழி, சமயம், கொடி: இந்நாட்டின் தட்பவெப்பநிலை இனிமை தருவது, ஆட்சி மொழியாக ‘ஐரிசு’ மொழி விளங்கியபோதிலும் பொதுவாகப் பேசப்பெறும் மொழி ஆங்கிலமாகும். அரசு ஆவணங்கள் ஆங்கிலம் ஐரிசு ஆகிய இருமொழிகளிலும் அச்சிடப்பெறுகின்றன. இம்மக்களின் சமய நிலையினைப் பொறுத்தவரையில் 95 விழுக்காட்டினர் உரோமானியக் கத்தோலிக்கர்; 5 விழுக்காட்டினர் புராட்டசுடண்டு கிறித்தவச் சமயப் பிரிவினர். இந்நாட்டின் தேசியக்கொடி, இரண்டுக்கு ஒன்று என்ற அளவில், மேலும் கீழுமாகச் சமமான பச்சை, வெள்ளை, ஆரஞ்சு நிறப் பட்டைகளைக் கொண்டது. இதன் தலைநகர் தப்ளின் (Dublin) ஆகும்.

வரலாற்றுப் பின்னணி: பன்னெடுங்காலமாக அருகருகே அமைந்த இரு தீவுகளான இங்கிலாந்தும் அயர்லாந்தும் இயற்கையாகவே நெருங்கிய தொடர்புடையன. ஆங்கிலேயர், ஐரிசு நாட்டவர்களைக் காட்டுமிராண்டிகளாகக் கருதி, அவர்கள் உணர்வுகளை மதித்து நடக்கவில்லை. மூர்க்கத் தனமான படையெடுப்புகளை நடத்தி அவர்களை அடிமை கொண்டனர். அயர்லாந்தினருள் பெரும்பாலோர் கத்தோலிக்கர். ஆங்கிலேயர் புராட்டசுடண்டுப் பிரிவினர். அயர்லாந்தினர் அயல் சமயத்தையும், அயல்மொழியையும் எதிர்த்துக் குரல் கொடுத்தனர்; விடுதலைப் போரினைத் தொடங்கினர். முதலில் அயர்லாந்தை ஒன்றுபடுத்திப் பின்னர் விடுதலைப் போரில் ஈடுபட்-