அயல்நாட்டு வாணிகம்
544
அயல்நாட்டு வாணிகம்
றுமதிப் பட்டியலில் இரண்டு படிவங்களையும், ஏற்றுமதி உரிமம், அரசு ஆணைப்படிவம் ஆகியவற்றையும் ஏற்றுமதியாளர்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். அவர் இவற்றை இறக்குமதிக் கட்டண அலுவலகத்தில் தந்து, அங்குச் செலுத்த வேண்டிய கட்டணம் செலுத்திச் சுங்க ஏற்றுமதி அனுமதிச் சீட்டுப் (Custom Export Pass) பெறவேண்டும். அவர் பொருள்களைத் துறைமுக நிறுவனத்தாரிடமோ கப்பலிலோ சேர்க்க வேண்டும். பொருளுடன் கப்பலின் ஆணையையும் கப்பல் அலுவலரிடம் தர வேண்டும். அவர் பொருளையும் எண்ணிக்கையையும் ஒப்பு நோக்கிச் சீட்டுத் தருவார். பிறகு ஏற்றுமதியாளர் கப்பல் சரக்குச் சீட்டுப் படிவங்கள் மூன்று அல்லது ஐந்து பெற்று, அவற்றை நிறைவு செய்து தர வேண்டும். துறைமுகச் சீட்டு ஆகியவற்றை இணைத்துக் கப்பல் நிறுவன அலுவலகத்தில் தரவேண்டும், தீர்வு சம்பந்தமான குறிப்பு ஒன்றை எழுதி அவர் செலுத்த வேண்டிய தீர்வுகளையும் இதர கட்டணங்களையும் செலுத்த வேண்டும். பின்னர் ஏற்றுமதியாளர் அதில் குறிப்பிட்டுள்ள தொகையைச் செலுத்திக் கப்பல் சரக்குச் சீட்டு (Bill of Lading) பெறலாம். அவ்வாறு செலுத்தப்படாமல் இருந்தால், அதாவது, இறக்குமதியாளர் செலுத்துவார் என அறிவித்தால், ‘தீர்வு செலுத்தப்பட வேண்டும்’ (Freight Forward) என்று எழுதப்பட்ட கப்பல் சீட்டைப் பெறுவார். ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் பலவித இடையூறுகளுக்கு உட்படுவதால் அவற்றுக்கெதிராகக் காப்பீடு செய்வது மிகவும் தேவை. இலாயிட்சு ஒப்புறுதியாளரிடமோ (Lloyds Underwriter) கடற்காப்பீடு நிறுவனத்திடமோ காப்பீடு செய்ய வேண்டும். அக்காப்பீட்டுத் திட்ட ஆவணத்தை இறக்குமதியானருக்கு அனுப்ப வேண்டும். ஏற்றுமதியாளர் வாணிகப் பட்டியல் சீட்டு (Commercial Invoice), அயல்நாட்டு விலைப் பட்டியல் (Consular Invoice), தோற்றுவாய்ச் சான்றிதழ் (Certificate of Origin) ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.
ஏற்றுமதியாளர் ஒப்புக்கொள்ளப்பட்ட விலைப் புள்ளியை அடிப்படையாகக் கொண்டு வாணிகப் பட்டியல் சீட்டு மூன்று படிகள் அமைக்க வேண்டும். பொருள் விவரம், அளவு, தன்மை, விலை, செலவுகள் போன்றவற்றோடு இறக்குமதியாளரிடம் இருந்து வர வேண்டிய தொகையையும் இது காட்டும். ஏற்றுமதியாளர் அவர் நாட்டில் உள்ள இறக்குமதியாளர் நாட்டைச் சேர்ந்த வாணிகத் தூதுவர்களிடமிருந்து பெறவேண்டும். இதற்கான தாளினை அத்தூதுவர் அலுவலகத்தில் பெற்று, பொருள் விவரங்கள், விலை போன்றவற்றைக் குறிப்பிட்டு விவரங்கள் அனைத்தும் மெய்யானவை என்ற உறுதிமொழியையும் எழுதி, வாணிகத் தூதுவரின் கையெழுத்துப் பெறவேண்டும். சில நேரங்களில் அவர் அமைத்த வாணிகப் பட்டியலிலேயே மேற்கூறியவரின் கையெழுத்தைப் பெறலாம். அவ்வாறெனின், அது வாணிகப் பட்டியல் சீட்டாகவும் அயல்நாட்டு விலைப் பட்டியலாகவும் செயற்படும். இதனை இறக்குமதியாளருக்கு அனுப்புவதன் நோக்கம், அவருடைய நாட்டில் பொருள்களின் மதிப்புக்கணக்கிடப்படுவதையும், வரி விதிக்கப்படுவதையும் எளிதாக்குவது ஆகும். நாடுகள், தங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொண்டு இறக்குமதியாகும் பொருள்கள் மீது குறைந்த அளவு இறக்குமதி வரி விதிக்கும் கொள்கையைப் பின்பற்றுகின்றன. அந்நாடுகளில் உள்ள இறக்குமதியாளர் இந்தச் சிறப்புரிமை பெற வேண்டுமானால், இறக்குமதி செய்யப்படும் பொருள் இந்த உடன்படிக்கைக்கு உட்பட்ட நாடு ஒன்றில் உருவாக்கப்பட்டது என்ற சான்றிதழைப் பெற வேண்டும். அத்தகைய சான்று தான் தோற்றுவாய்ச் சான்றிதழ். கப்பலின் ஆவணங்கள் மேற்கூறிய மூன்று ஆவணங்களையும் கப்பல் சீட்டையும், காப்பீட்டுத் திட்ட ஆவணத்தையும் குறிப்பதாகும், இவற்றை ஏற்றுமதியாளர் இறக்குமதியாளருக்கு அனுப்ப வேண்டும்.
இந்திய அரசு வாணிகக் கழகம்: மேற் கூறிய அயல்நாட்டு வாணிக முறைகள் தனியார் துறையால் மட்டும் கையாளப்படுவனவாகும். ஆனால், இன்று அயல் நாட்டு வாணிகம் பல்வேறு நாடுகளில் அரசு அளவில் – அதுவும் குறிப்பாகப் பொதுவுடைமைக் கோட்பாடுடைய அரசுகளின் அளவில் நடந்து வருகிறது. இந்தியா தன்னுடைய அரசு வாணிகக் கழகத்தின் மூலம் அந்நாடுகளோடு வாணிகம் செய்கிறது. அரசு வாணிகக் கழகம், பொதுவுடைமைக் கோட்பாடுடைய நாடுகளுடன் வாணிகம் செய்வதற்காகவே தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. அரசாங்கங்களிடையே நடக்கும் அயல்நாட்டு வாணிகத்தில் மேற்கூறிய முறைகள் பின்பற்றத் தேவையில்லை. மேலும், அவற்றிடையே ஏற்படுவது வெறும் வாணிக உடன்பாடுதான். இந்திய அரசு வாணிகக் கழகம் 1958–ஆம் ஆண்டு மே மாதம் வரையறுக்கப்பட்ட தனி நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. இதன் பணி, பொருள்களையும் விளை பொருளையும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதாகும். அரசு கட்டுப்படுத்திய வாணிகத்தை மற்ற நாடுகளுடன் செய்ய இது ஒரு முகவராகப் பணி புரிகிறது. இதனால், அயல்நாட்டு வாணிகத்தில் இந்திய வணிகர்களின் வலிமை கூடுகிறது. ஏற்றுமதியாளருக்கும் இக்கழகம் இடையூறுகளைக் களைந்து ஒப்பந்தங்களைச் செயற்படுத்த உதவி செய்கிறது. தரக்கட்டுப்பாட்டினைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. கொள்முதல் செய்வோரையும்