அயல்நாட்டு வாணிகம்
545
அயல்நாட்டு வாணிகம்
விற்பனையாளரையும் ஒருங்கிணைக்கிறது. தகராறுகளை நன்முறையில் தீர்த்து வைக்கிறது.
இந்தியாவின் அயல்நாட்டு வாணிகம்: கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் அயல்நாட்டு வாணிகத்தில் மாபெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்னர் ஏற்றுமதியைவிட இறக்குமதி மிகுதியாக இருந்தாலும் அயல்நாட்டு வாணிக இடைவெளி ஏற்று நடத்தத்தக்க அளவில் இருந்தது. எண்ணெய் விலை ஏற்றத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியையும் தாங்கிச் செயற்பட்டது. கீழ்வரும் அட்டவணை இந்தியாவின் அயல்நாட்டு வாணிக வளர்ச்சியைக் குறிக்கிறது.
(உரூபாய் கோடியில்) ஆண்டு ஏற்றுமதி இறக்குமதி அயல்நாட்டு வாணிக
இருப்பு நிலை1971—72 1608 1825 — 217 1972—73 1971 1867 104 1973—74 2523 2955 — 432 1974—75 3329 4519 — 1190 1975—76 4043 5265 — 1222 1976—77 5146 5074 72 1977—78 5404 6025 — 621 1978—79 5726 6814 — 1088 1979—80 6459 8908 — 2449 1980—81 6711 12524 — 5813 1981—82 7803 13671 — 5868 1982—83 8814 14261 — 5447 1983—84 2014 3123 — 1109
- (நன்றி: ‘தி எகனாமிக் டைம்சு’ — 30–11–83, பக். 6)
அட்டவணை, இறக்குமதி ஏற்றுமதியை விட மிக்க அளவிலேயே இருப்பதைக் காட்டுகிறது. 1972-73-லும், 1976-77-லும் ஏற்றுமதி, இறக்குமதியைவிட மிகுதியாக உள்ளது. 1970-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்றுமதி உயர்ந்து இருந்தாலும் அதைவிட இறக்குமதி மதிப்பு மிகுந்து விட்டது. 1981–ஆம் ஆண்டில் பன்னாட்டுப் பண நிதி (International Monetary Fund) இந்தியாவிற்கு 58 மிலியன் தாலரைக் கடனாக வழங்கியது. அதன் நோக்கம், ஏற்றுமதியைப் பெருக்கவும் இறக்குமதிக் கோட்பாட்டைக் கட்டுப்பாடின்றி வைத்திருக்கவும் வேண்டும் என்பதாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்றுமதி பெருகினாலும் இறக்குமதி குறையவில்லை. வழக்கமாக ஏற்றுமதி செய்யும் இந்தியப் பொருள்களுக்கு உலக அங்காடியில் தேவை குறைந்துவிட்டது. புதிய பொருள்களான பொறியியல் பொருள்களுக்கும் இரசாயனப் பொருள்களுக்கும் அவ்வாறே தேவை குறைந்துவிட்டது. மாறாக, இந்தியாவின் இறக்குமதிப் பொருள்களான பெட்ரோலியம், சிமிண்டு, இரசாயன உரங்கள் ஆகியவை இறக்குமதி செய்யும் அளவு குறைந்தும் இறக்குமதியின் மதிப்புக் குறையவில்லை. இறக்குமதி விகிதம் 1981–82, 1982–83-இல் குறைந்தாலும் இறக்குமதி மதிப்புக் குறையவில்லை.
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் மதிப்பீட்டைச் செய்த திட்டக் குழுவும் ஏற்றுமதி இறக்குமதி மதிப்-