அயற் செலாவணி
552
அயற் செலாவணி
யின் மூலமாகத் தீர்க்கப்படுகின்றன. ஏற்றுமதியும் இறக்குமதியும் மதிப்பில் சமமாக இருக்க நேரிட்டால், இரு தரப்பினரும் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை எதுவுமின்றி, செலுத்துரிமைகளும் முழுமையாகத் தீர்க்கப்பட்டிருக்கும். அதாவது, அமெரிக்காவில், இறக்குமதியாளர் ஏற்றுமதியாளருக்குச் செலுத்துரிமைகளைக் கொடுப்பதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட பரிமாற்றம் முழுமை பெறுகிறது. அமெரிக்காவில், ஓர் இறக்குமதியாளர் தாம் கொடுக்க வேண்டிய பணத்தை ஏற்றுமதியாளருக்குக் (ஆங்கிலேயர்) கொடுத்துவிடுகிறார். அவ்வாறே, இங்கிலாந்தின் இறக்குமதியாளர் தாம் அனுப்பவேண்டிய பணத்தை இங்கிலாந்தின் ஏற்றுமதியாளருக்கு (அமெரிக்கர்) கொடுத்து விடுகிறார்.
ஆனால், இரு நாடுகளின் ஏற்றுமதியும் இறக்குமதியும் மதிப்பில் சமமாக இல்லையெனில், அந்த மதிப்பு மாறுபாட்டுக்கு உரிய பணத்தை இறக்குமதியாளர் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பிரிட்டனின் இறக்குமதியாளர் அமெரிக்க ஏற்றுமதியாளருக்குத் தாம் கொடுக்கவேண்டிய தாலரைப் பிரிட்டனில் உள்ள அயற் செலாவணி அங்காடியில் பிரிட்டனின் பவுண்டு இசுடெர்லிங்கைக் கொடுத்து வாங்கக் கூடும். ஏற்றுமதி வருவாய் மூலமாக அமெரிக்காவின் தாலர் இங்கிலாந்தின் அயற் செலாவணி அங்காடிக்கு வருகிறது. இவ்வாறு வரக்கூடிய தாலரைப் பிரிட்டனின் இறக்குமதியாளர் பவுண்டு இசுடெர்லிங்கைக் கொடுத்து வாங்கி அமெரிக்க ஏற்றுமதியாளருக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு, அயற் செலாவணிப்பேரமானது இலண்டன் அயற் செலாவணி அங்காடி மூலமாக நடைபெறுகின்றது.
பொதுவாக, இன்றைய வாணிக உலகில் (உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வாணிகம் இரண்டிலும்) கடன் முறை வாணிகம் மிகுதியாக வழக்கில் உள்ளது. இது பன்னாட்டு வாணிகத்தில் மிகுந்து காணப்படுகிறது. பன்னாட்டு வாணிகத்தில் பொருள்கள் ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டுக்கு அனுப்பப்படுவதற்கு நீண்டகாலம் பிடிக்கும். ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு பொருள், வேறொரு நாட்டில் திரும்ப விற்கப்படுவதற்குள், வாரங்கள் பல கடந்து விடும். இக்காலத்தில், யாரேனும் ஒருவர் அப்பொருள்களுக்குரிய மதிப்புக்குச் சமமான நிதிச் சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
எடுத்துக்காட்டாக, £. 10,000 மதிப்புள்ள பிரிட்டனின் கார்கள் கனடாவைச் சேர்ந்த ஒரு வணிகரால் வாங்கப்படுகின்றன. கார்கள் இங்கிலாந்திலிருந்து கனடாவை அடைய ஆறு வாரங்கள் அல்லது அதற்கு மேலும் ஆகக்கூடும். எனவே, கனடாவில் இறக்குமதியாளர் அதுவரை காத்திருக்க வேண்டும். இந்த வாணிகம் பல முறைகளில் செயற்படக் கூடும். ஆனால், அடிப்படையில் அவை அனைத்தும் ஒரே கொள்கை உடையன. இம்முறைகளின் மூலமாக, ஏற்றுமதி செய்வோர் உடனுக்குடன் தமது பொருளுக்குரிய பணத்தைப் பெறவும், பொருளை வாங்குவோர் அல்லது இறக்குமதி செய்வோர் பொருளுக்குரிய பணம் செலுத்துவதை ஒத்திப் போடவும் ஏதுவாகிறது.
இவற்றில் எளிய முறை, கனடாவின் இறக்குமதியாளர், ஒரு கனடா வங்கியில் இறக்குமதிப் பொருளின் மதிப்பைக் கடனாகப் பெற்று, பிரிட்டன் ஏற்றுமதியாளருக்குப் பவுண்டு இசுடெர்லிங்காகவோ, தாலராகவோ செலுத்துதலாகும். பின்னர், தாம் இறக்குமதி செய்த பொருள்களை விற்று, வங்கிக்குத் தர வேண்டிய கடனைத் தீர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு, வங்கியிடம் வங்கியிடம் கடன் பெறுவதற்கு அவர் தாம் பெற்ற இறக்குமதி ஒப்பந்தச் சீட்டை அல்லது அனுமதிச் சீட்டை ஆதாரமாகப் பயன்படுத்தலாம். வங்கியும் இதற்கு மிக எளிய முறையில் ஒரு கடன் ஏற்பாடு செய்கிறது.
அயற் செலாவணி அங்காடியின் மற்றொரு பணி, அங்காடியில் தோன்றக் கூடிய இடர்ப்பாடுகளுக்கு எதிராகப் பாதுகாப்பு அளிப்பதாகும். குறிப்பாக, ஒரு செலாவணியில் கடன்முறைப் பேரம் மேற்கொள்ளப்படும் போது, அக்கடன் தீர்க்கப்படுவதற்குள்ளாக, அதன் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களினின்று பாதுகாப்பு அளிப்பதாகும்.
ஒரு பொருளின் விலை, அதன் தேவை, அளிப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்படுவது போன்று, ஒரு செலாவணியின் மதிப்பும் அதன் தேவை, அளிப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, தேவை மாறாதிருக்க ஒரு செலாவணியில் அளிப்பு மிகுந்தால் அதன் மதிப்புக் மதிப்புக் குறையும்; அவ்வாறே அதன் அளிப்புக் குறைந்தால் அதன் மதிப்புக் கூடும். மற்றவை மாறாதிருக்க, ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்கும் போது, அதன் மதிப்பும் கூடுகிறது. தேவை குறையும்போது அதன் மதிப்புக் குறைகிறது. அவ்வாறே, ஓர் அயற் செலாவணி அங்காடியில், ஒரு செலாவணிக்கான தேவை திடீரென அதிகரித்தால், அதன் மாற்று மதிப்புக் கூடும்; தேவை குறைந்தால் அதன் மதிப்பும் குறையும். ஒரு செலாவணியின் தேவை, அளிப்புகளைப் பல்வேறு காரணிகள் வரையறுக்கின்றன. ஒரு நாட்டின் செலுத்துநிலை அந்நாட்டுச் செலாவணியின் மதிப்பை வரையறுக்கும் ஒரு முக்கியமான கூறாகும். ஒரு நாடு சாதகமான செலுத்து நிலையைப் பெற்றிருப்பின் அந்நாட்டுச் செலாவணியின் மாற்று மதிப்பு உயரும். குறிப்பிட்ட ஒரு நாட்டுக்குப் பணம் தர வேண்டிய பிற நாடுகள், தம் செலாவணிகளை