உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அர்சர்‌

565

அர்சர்‌

சகாங்கீர் இவரை இலாகூர்ச் சிறையிலடைத்துத் துன்புறுத்திக் கொன்றார்.

அர்சர் இந்தியாவை ஆண்ட பேரரசர்களுள் ஒருவர். இவர் கி.பி. 606 முதல் 647 வரை வட இந்தியாவை ஆண்டவர். இவருடைய ஆட்சியை அறிந்து கொள்ள உதவும் அடிப்படைச் சான்றுகளாக இரு நூல்கள் உள்ளன. அவை பாணர் என்பார் எழுதிய ‘அர்ச சரிதம்’ என்னும் நூலும், யுவான் சுவாங் என்ற சீனப் பயணி எழுதிய ‘சி–யூ–கி’ என்னும் நூலுமாகும். இலக்கியச் சான்றுகளே சிறப்பாக உள்ளன. கல்வெட்டுகளும், அர்சரின் (Harsha) காலத்தில் வாழ்ந்தவர்கள் எழுதிவைத்தவைகளும் இவருடைய ஆட்சியை அறிந்து கொள்ள ஓரளவு பயன்படுகின்றன. இவர் கால நாணயங்கள் கிடைத்தில. திபெத்தில் உள்ள சீனக் குறிப்புகள் அர்சரின் இறுதிக்காலத்தை அறிய உதவுகின்றன.

அர்சர் பேரரசு

அர்சரின் மரபினை நிலைநாட்டியவர் தானேசுவரத்தையாண்ட புசியபூதி என்பவராவார். அவர் ஒரு சைவர். அவர் மரபில் வந்த பிரபாகர வர்த்தனர் (கி.பி. 583–600) என்பாரே முதன்முதலாகத் தம்மை மகாராசாதிராசர் என்றும், பரம பட்டாரகர் என்றும் கூறிக்கொண்டார். அவர் பெரும் வீரர் என்பதை அர்ச சரிதம் விளக்குகிறது. அவருடைய தாயார் பெயர் மகாசேன குப்தா என்பதாகும். அவர் மனைவி-