அரசாங்கக் கொடையும் உதவிகளும்
591
அரசாங்கக் கொடையும் உதவிகளும்
மைய அரசு, பின்வரும் நோக்கங்களுடன் மாநிலங்களுக்குக் கொடைகளும் உதவிகளும் அளிக்கிறது. (1) மாநில அரசுகளின் நிதி நெருக்கடியைக் குறைத்து, வரவுக்கும் செலவுக்கும் சமநிலையை ஏற்படுத்தல். (2) மாநில அரசுகளின் பணியில் அளவு, தரம் ஆகியவற்றில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து, மண்டலங்களுக்கிடையிலான வளர்ச்சியைச் சமப்படுத்தல் (Balanced Regional Development). (3) பொதுநலப் பணிகளான கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சீரான முன்னேற்றத்தைக் கொணர்தல். (4) தேசிய முதன்மை வாய்ந்த பணிகளை மாநிலங்களிடையே மேம்படுத்தல் அல்லது அப்பணிகளில் ஈடுபட மாநில அரசுகளை ஊக்குவித்தல். (5) மாநில அரசுகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்தல். (6) மைய, மாநில உறவுகளைச் சீராக்குதல். மைய அரசு அளிக்கும் கொடையின் அளவு பல காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் பொதுத் தேவை, சிறப்புத் தேவை, மாநிலத்தின் நிதித் திறமை ஆகியவற்றை வரவு செலவு அறிக்கையிலிருந்து ஆராய்ந்து, அதன் அடிப்படையில் கொடையின் அளவு முடிவு செய்யப்படுகிறது. நிதி வசதியைப் பெருக்குவதற்கு ஒவ்வொரு மாநில அரசும் எவ்வளவு முயற்சிகன் மேற்கொள்கின்றனவோ, அவற்றைப் பொறுத்தும் கொடையின் அளவு முடிவு செய்யப்படும். எடுத்துக்காட்டாக, எந்த மாநில அரசு தன் வரிகளின் மூலம் உச்ச வருவாய் பெறுகிறதோ, அந்த மாநிலம் மிகுந்த கொடையைப் பெறும். செலவினைக் கட்டுப்படுத்தித் தனது வருவாயைத் திறமையாகப் பயன்படுத்தி, மக்களின் நலனை உச்சப்படுத்துகிற மாநில அரசு மிகுந்த கொடையைப் பெறும். மேலும் சமூகப் பணிகளின் நிலையைப் பொறுத்து, அவை குறைந்த நிலையில் உள்ள மாநிலங்களுக்கு மிகுந்த கொடை வழங்கப்படும்.
கட்டுப்பாடற்ற கொடைகள்: இந்தக் கொடைகளை ஒரு மாநில அரசு தனது விருப்பம்போல் செலவு செய்து கொள்ளலாம். கொடைகளின் நோக்கங்கள் பற்றி அல்லது அவை எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்ற முறையைப் பற்றி மைய அரசு, மாநில அரசுகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்காது. அரசியலமைப்புச் சட்டமும் எவ்வளவு தொகை வழங்கலாம் என்று வரையறுக்காது. பெரும்பாலும், இக்கொடைகள் மாநில அரசுகளின் தேவைக்கேற்ப மாநிலங்களுக்கிடையே சமநிலை ஏற்படுத்த அளிக்கப்படும். இவை மொத்தக் கொடையாகவோ (Block Grant), பொதுக் கொடையாகவோ (General Grant), தனிப்பட்டவர் அடிப்படையிலோ, எல்லா மாநிலங்களுக்கும் சம அளவிலோ மாறுபட்ட அளவிலோ அளிக்கப்படும். மற்றக் கொடைகளுக்கு இல்லாத நெகிழ்ச்சி அல்லது மாறும் தன்மை இதற்கு உண்டு. மாநிலத் தனியாட்சி (State Autonomy)க்கு ஊறு செய்யாமல், மாநிலங்களின் நிதி நிலையையும் பொருளாதார நிலையையும் இவை நிலைப்படுத்தும். எனவே, இந்தக் கொடைகள் கூட்டாட்சி அமைப்பின் நோக்கத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. ஆயினும், இந்தக் கொடைகளின் அளவு போதுமானதன்று.
கட்டுப்பாடுற்ற கொடைகள்: மைய அரசு மாநிலங்களுக்குச் சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் வழங்கும் கொடைகளைக் கட்டுப்பாடுற்ற கொடைகள் எனலாம். எடுத்துக்காட்டாக, மாநில அரசுகள், தங்களது திட்டம், மற்றும் வரவு–செலவு அறிக்கையைச் செயற்படுத்து முன், மைய அரசின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு கட்டுப்பாடு விதிக்கலாம். வேலைவாய்ப்பினை உருவாக்குவது, பணிகளின் தகுதியைப் பேணுவது, மாநில நடவடிக்கைகளைப் பற்றிய அறிக்கை கொடுப்பது, கொடைகளைத் திரும்பிப் பெற்றுக் கொள்வது ஆகியவை குறித்துச் சில வரையறைகள் விதிக்கப்படலாம். அவற்றிற்கு உட்பட்டுத்தான் ஒரு மாநில அரசு, கொடைகளைச் செலவிடல் வேண்டும். ஒரு மாநில அரசு பெறும் கொடைகளில், கட்டுப்பாடுற்ற கொடைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. கட்டுப்பாடுற்ற கொடைகள், சட்ட முறையில் அமைந்த கொடைகள் (Statutory Grants), சட்ட முறையில் அமையாக்கொடைகள் (Non–Statutory Grants), மைய அரசின் திட்டங்களுக்கான கொடைகள் (Central Schemes Grants), மைய அரசின் உதவி பெற்ற மாநிலத் திட்டங்களுக்கான கொடைகள் (Centrally Aided State Schemes Grants), திட்டம், மற்றும் திட்டம் சார்பற்ற கொடைகள் (Plan and Non-plan Grants), இணைக் கொடைகள் (Matching Grants) என ஆறு வகைப்படும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 275–ஆம் பிரிவின்படி நாடாளுமன்றம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அளிக்க வேண்டிய கொடைகளை முடிவு செய்கிறது. இச்சட்டத்தின்படி அரசு, மாநில மைய அரசுகளுக்குக் கட்டாயமாக வழங்கக்கூடிய கொடைகள் சட்ட முறையிலமைந்த கொடைகள் எனப்படும். இவை மாநில வருவாய்க் கணக்கில் ஏற்படும் திட்டத்திற்கு அப்பாற்பட்ட செலவினங்களை ஏற்று நடத்துவதற்கும் நிருவாகத்தின் திறமையை உயர்த்துவதற்கும், மது விலக்கை அமுல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கும் அளிக்கப்படும். மைய அரசின் வரவு செலவு அறிக்கையில் இந்தக் கொடைகள் திட்டச் சார்பற்ற கொடைகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சட்ட முறையில்லாக் கொடைகளின் அளவை மைய, மாநில அரசுகள்,