அரசாங்கச் செலவு
597
அரசாங்கச் செலவு
பது ஒரு சாரார் எண்ணம். இக்காலத்தில் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் பொருளாதார முன்னேற்றத்தை வளர்க்கும் எனக் கருதப்படுகிறது.
பொது நிதியியலில் அரசாங்கச் செலவுகளை வகைப்படுத்துவது பற்றிப் பல்வேறு பொருளியல் வல்லுநர்கள் பன்னெடுங்காலமாகப் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். சே.எசு. மில் என்பார் அரசாங்கச் செலவைக் கட்டாய அலுவல், கட்டாயமற்ற அலுவல் என இரு பிரிவாகப் பிரிக்கிறார். உரோசர் என்பார் தனியார் செலவினங்களின் பாகுபாட்டை ஒட்டியே அரசாங்கச் செலவையும் வகைப்படுத்துகிறார். இவர் செலவைக் கட்டாயச் செலவுகள் பயனுள்ள செலவுகள், ஆடம்பரச் செலவுகள் என மூன்றாகப் பிரிக்கிறார்.
பின்னர், 19–ஆம் நூற்றாண்டின் பொருளியல் வல்லுநர்கள் செலவினங்கள் அளிக்கும் நன்மைகளின் அடிப்படையில் செலவைப் பிரிக்க முற்பட்டனர். கோகன் (Cohen), பிளன் (Flehen) என்ற அறிஞர்களின் பகுத்தாய்வின் முடிவுகளின்படி, மக்களுக்குப் பொதுவாக நன்மை பயக்கும் பாதுகாப்புப் போன்ற செலவினங்கள், சிலருக்கு மட்டுமே குறிப்பாக, ஏழைகளுக்கு உதவி வழங்கல் தொடர்பான செலவினங்கள் தனிப்பட்ட சிலருக்கு நன்மை தரும் செலவினங்கள், அனைவருக்கும் பயன்தரும் நிதி நிருவாகம் போன்ற செலவினங்கள் ஆகியவை ஆராயப்பட்டன.
நிக்கல்சன் என்பவர் அரசாங்கச் செலவைப் பொதுச் சேவைகளுக்குக் கிடைக்கக் கூடிய வருவாய்க்கு ஏற்றாற்போல் பின்வருமாறு பாகுபாடு செய்கிறார்: (1) எவ்வித வருவாயும் தேடித்தராத செலவினங்கள் (2) மறைமுகமாக வருவாய் தேடித் தரக்கூடிய செலவினங்கள் (3) ஓரளவு வருவாய் தரக்கூடிய செலவினங்கள் (4) செய்யப்பட்ட செலவுகள் அல்லது அதற்கு மிகுதியாக வருவாய் தேடித் தரக்கூடிய செலவினங்கள். முதற் பாகுபாட்டில் ஏழைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையும் போரில் உண்டான இழப்புகளும் அடங்கும். இரண்டாம் பாகுபாட்டில் கல்வி, சுகாதாரம் போன்ற மறைமுக வருமானம் தரக்கூடிய செலவினங்கள் குறிக்கப் பெறும். மூன்றாம் பாகுபாடு கட்டணம் பெறும் கல்வியைக் குறிக்கும்.
எச்.சி. ஆதம்சு (H.C. Adams) அரசாங்கச் செலவுகளைப் பணிகள் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கிறார். அவை பாதுகாப்புப் பணிகள், வாணிகப் பணிகள், வளர்ச்சிக்கான பணிகள் எனப்படும். பாதுகாப்புச் செலவினங்கள் சமுதாய முன்னேற்றம் மிகும்போது குறையும் என்கிறார்.
பேராசிரியர் பிகு என்பவர் அரசாங்கச் செலவைச் சமுதாயத்தில் மக்களிடையே வருவாயை மீண்டும் பங்கீடு செய்யத் தக்க மாற்றம் காணும் செலவினங்களாகவும் (Transfer–expenditure), சமுதாயத்தின் உற்பத்திச் சாதனங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கத்தக்க மாற்றங் காணும் செலவினங்களாகவும் பாகுபாடு செய்கிறார்.
அரசாங்கச் செலவைப் பற்றித் திட்டவட்டமான விதிகள் இல்லாதது பெரிய குறையாகும். சே.பி.சே என்பார் எல்லா நிதித் திட்டங்களிலும் மிகச் சிறந்த நிதித்திட்டம் மிகக் குறைவாகச் செலவிடுதல் எனக் குறிப்பிட்டார். மேலும், தால்டன் (Dalton) என்பவர் மன நிறைவு தரக்கூடியதும், முழுமையானதும், முறையானதுமான அரசாங்கச் செலவு முறைக் கோட்பாடு இல்லாதது பெருங்குறை என்று வருந்தினார்.
இருப்பினும், காலப் போக்கில் அரசாங்கச் செலவுகள் வளர்ந்து கொண்டு போகின்றனவேயன்றிக் குறைந்தபாடில்லை. காரணம் யாதெனில், நலம் சார் நாடுகளாக (Welfare State) இக்கால நாடுகள் கருதப்படுவதால் செலவினங்கள் வளர்ந்து விட்டன. வெறும் காவல்துறை நாடாக (Police State) இருந்தால் செலவு குறையும். இக்காலப் போர்களும், போர் ஆயத்தங்களும் செலவை மிகுதிப்படுத்துகின்றன. மேலும், மக்கள்தொகை வளர்ச்சியினாலும் நாட்டுப்புற மக்கள் நகர்ப்புறங்களில் வேலை தேடி வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நினைத்துக் குவிவதாலும் அரசாங்கத்தின் செலவு உயர்கிறது. குடியாட்சி முறையில் தேர்தல் நடப்பதும் செலவு மிகுதியாகக் காரணமாகிறது. விலைவாசி உயர்வும் அரசாங்கச் செலவு மிகுதற்குக் காரணமாக உள்ளது. மேலும், ‘குழாய் நிரப்புகைக் கோட்பாட்டின்’படி (Pump – Priming) பொருளாதார மந்தக்காலத்தில் பொருளாதார மீட்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இதுவும் அரசாங்கச் செலவு மிகுதியாகக் காரணமாகிறது. வணிகச் சுழல்களை ஈடு செய்யும் (Counter Cyclical Expenditure) அரசாங்கச் செலவும், நடைமுறை முதலீட்டிற்கும் சேமிப்பிற்கும் இடையில் சமநிலை இன்மையை நெறிப்படுத்துகிறது.
பொதுவாக, முன்னேற்றம் காணும் நாடுகளின் அரசாங்கச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. சான் ஆட்லர் (John Adler) கருத்துப்படி, உற்பத்தியில் உயர்ந்து வரும் விகிதாச்சார அளவை, முதல் ஆக்கத்திற்கும் (Capital Formation) ஒதுக்கினால் வளர்ச்சி குன்றிய நாடு வளர்ச்சி பெறும். இக்காலப் பொருளியல் வல்லுநர்களின் முயற்சியால், அரசாங்கச் செலவு பற்றிய சிக்கல்கள் அறிவியல் அணுகுமுறையில் ஆராயப்படுகின்றன. அதன்படி, நடைமுறையில் ஏற்படும் தேவைக்கேற்ற அரசாங்கச் செலவு இன்றியமையாதது.
இதில், பயன் இப்படித்தான் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. எவ்வாறு அரசாங்க நிதி