அரசாங்கச் செலவு
598
அரசாங்கச் செலவு
செலவு செய்யப்படவேண்டும் என்றும், நாட்டுப் பொருளாதாரம் நிருவகிக்கப்பட வேண்டுமென்றும் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட சமூக அரசியல் அமைப்பில் எவ்விதச் சக்திகள் எவ்வெவ்வாறு அரசாங்கச் செலவைக் கட்டாயப்படுத்துகின்றன என்பது மட்டுமன்றி அளவையும் வரையறுக்கின்றன. இச்சூழ்நிலையில் அரசாங்கச் செலவு எப்படி இருந்தால் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதை மசுகிரேவ் (Musgrave) என்பார் ஒரு புதுக் கண்ணோட்டத்தில் அணுகுகிறார்.
அரசு நிதி, ஒதுக்கீடு (Allocation), பகிர்வு (Distribution), நிலைநிறுத்தல் (Stabilization) என மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது.
ஒதுக்கீடு (Allocation): அரசாங்கச் செலவின் தலையாய சிக்கல், எவ்வாறு அளவையும் முறையையும் வரையறுப்பது என்பதே. கையிருப்பு நிதியைச் கொண்டு எவ்வாறு தனியார் விருப்பங்களையும் சமூகப் பொது விருப்பங்களையும் நிறைவேற்றுவது என்பது கேள்விக்குறியாகிறது. நாட்டு நிதி, அரசுச் செலவுகளுக்கு ஒதுக்கப்படின் சமூக விருப்பங்கள் நிறைவுறும். ஆனால், தனியார் தேவைகள், விருப்பங்கள் அந்த அளவு நிறைவுறா. எத்தன்மைப்பட்ட தனியார் தேவைகள் ஒத்திப்போடப்படலாம் அல்லது தவிர்க்கப்படலாம் என்பது முடிவு செய்யப்பட வேண்டிய சிக்கல், அரசாங்கச் செலவை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. வாய்ப்புச் செலவு (Opportunity Cost) முறை மூலம்தான், அதன் ஆக்கமும், அதனால் பெறப்படும் நலனும் கணிக்கப்பட்டு உணரப்பெறும். ஆகவே, அரசாங்கச் செலவு அரசாங்க வருவாயைப் பொறுத்து அமையும். இந்த இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே. பொதுமக்கள் யாவரும் தங்களால் இயன்றவரை வரி செலுத்த வேண்டும் என்பது ஆதம் சுமித்தின் கொள்கை.
தகுதிக்கேற்ப வரி (Ability to pay) என்னும் கொள்கை ஆங்கிலநாட்டு நிதி வல்லுநர்களைக் கவர்ந்தது. சே.எசு.மில் (1848) என்பவரால் ‘சம இழப்பு’ (Equal Sacrifice) என்ற முறையில் உருவாக்கப்பட்டு, பின் எட்சுவொர்த்து என்பவரால் ‘மிகக் குறைந்த மொத்த இழப்பு’ (Least Total Sacrifice) என்று திருத்தியமைக்கப்பட்டு, இதுதியில் ஏ.சி.பிகு என்பவரால் மொத்த, நேர்விகித, எல்லை நிலை (Total Direct Proportional Marginal Sacrifice) இழப்பாக மாற்றியமைக்கப்பட்டது. இக்கொள்கை சீர்திருத்தவாதிகளிடம் நல்ல செல்வாக்குப் பெற்றது. பழமை விரும்பிகள் அரசாங்கச் செலவைக் கண்மூடித்தனமாக எதிர்த்தாலும், இக்கருத்தை மட்டும் உவந்து, வியந்து வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாராட்டு ஒரு பக்கம் இருக்க, இக்கொள்கையில் (தகுதிக்கேற்ப வரி) பல்வேறு கடும் குறைபாடுகள் காணப்பட்டன. இயல்புக்கு ஏற்ப வரி விதிக்கும். கொள்கைக்கு இது பயன்பட்டதே தவிர, அரசாங்கச் செலவு எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறை செய்யவில்லை. உயர் அளவில் ஒரு குறிப்பிட்ட வரி எவ்வாறு விதிக்கப்படவேண்டும் என்று மட்டுமே இது முடிவு செய்கிறது. வரவு–செலவுத் திட்டத்தைப் பற்றி (Budget) இது கவலைப்படவில்லை. ‘வாய்ப்புச் செலவு’ முறை பற்றியும் இது செயல்படவில்லை. ஆகவே, இக்கொள்கையின் நேர்மை, செயல்திறன் முதலியன ஐயப்பாட்டிற்கு இடமளிக்கின்றன. சம இழப்பு (Equal Sacrifice) என்பது, மக்களிடையே பயன்பாட்டு ஒப்பீட்டுத் தேவையை நிலைநிறுத்துகிறது. ஆனால், இது காலப் போக்கில் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. “பாரிடோ உத்தம நிலைக் கொள்கை” (Pareto Optimality)யின் படி, ‘அ’ என்னும் தனி மனிதனின் நிலை முன்னேறும் போது, அதே சமுதாயத்தில் வாழும் ‘கி’யின் பொருளாதார நிலை குறைபடாதிருப்பின் அரசாங்கச் செலவு மூலம் சமுதாயத்தில் பொருளாதார நிலை உயர்கிறது என்று உணரலாம். இருப்பினும், இது செயலாற்றும்போது இக்கருத்தும் குறைபாடுடையதாக இருக்கிறது. குறிப்பாகப் பொருளாதாரத்தில் விளங்கும் அடிப்படைப் பொருட் பங்கீட்டு நிலை பற்றி ஒன்றும் இது கூறவில்லை. மிகுதியான ஏற்றத் தாழ்வு இருப்பினும் அதனை இது கண்டு கொள்ளவில்லை.
“பயன் கொள்கை” (Benefit Theory) தொடக்கத்திலிருந்தே வரவையும் செலவையும் நிதி வரவு–செலவுத் திட்டத்தில் இணைத்தே செயலாற்றி வந்தது. வரவு–செலவு அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட செலவுத் திட்டம் மக்கள் சபையில் நிறைவேற்றப்பட குறிப்பிட்ட வரித்திட்டம் ஒன்று அதனுடன் இணைந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது ஒரே மனத்துடன் வரவேற்கப்படும். அப்போது பெரும்பான்மையோர் தங்கள் வாக்குகளை அளிக்க முன்வருவர். ஆகவே, ஒரு வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு மிக்க நலம் பயக்கும் நிலையில் இருக்க வேண்டும். தனியாரை மையமாகக் கொண்டது இக்கொள்கையின் போக்கு. ஆனால், நடைமுறையில் பொது விருப்பங்களும் தனியார் விருப்பங்களும் ஒன்றுக்கொன்று ஈடுபாடு கொண்டவை. பிரிக்க முடியாதவை. தனிப்பட்ட முறையிலும் கணிக்க இயலாதவை.
பொது விருப்பங்கள் நிறைவு செய்யப்படின், அவை குறிப்பிட்டவருக்கு மாத்திரம் போய்ச் சேருவதில்லை. யாவருக்கும் பொதுவாயிருப்பதால், எவரையும் நுகர்வதிலிருந்து விலக்க முடியாது. தேசப்