அரசாங்கச் செலவு
599
அரசாங்கப் ... ... ஒழுங்குகளும்
பாதுகாப்பான நன்மைகளோ சாக்கடையைத் துப்புரவு செய்வதன் பலனோ தனி ஒருவனுக்கு மாத்திரம் பயன் அளிப்பதன்று. சமுதாயத்தில் வாழும் அனைவரும் ஒரே அளவில் பயன் பெறுகின்றனர். தனியார் எந்த அளவு பயன் பெறுவார்கள் என்பதைக் கணித்து அதற்கேற்ப வரி பெறல் வேண்டும். இலிண்டால் என்னும் பொது நிதியியல் வல்லுநர், தனியார் தங்கள் தேவைக்கேற்பச் சமுதாய விருப்பப் பொருள்களையும் தொண்டுகளையும் துய்த்து அதற்கேற்ப விலையையும், அதாவது, வரியையும் செலுத்த முன்வருவர் என்கிறார். போவன் (Bowen) என்பவர் தம் 1948–ஆம் ஆண்டு ஆய்வுப்படி, தனியார் தேவையை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கும்போது உற்பத்தி அளவு, மொத்தத் தேவை, மொத்த அளிப்பு ஆகியவை சந்திக்கும் இடத்தில் தீர்மானிக்கப்படுகின்றன என்கிறார். ஆகவே, அரசாங்கச் செலவும், அதற்கேற்ப வரி பெறுவதும், அங்காடியில் நடைபெறும் கொடுக்கல்–வாங்கல் போல அமைகிறது. இதையே சாமுவேல்சன் (P.A. Samuvelson) பொதுநலக் கொள்கைப்படி (Welfare) ஆராய்ந்து, சமூகப் பொருள் என்பது, ‘அ’யின் நுகர்ச்சியில் ‘கி’யின் நுகர்ச்சி பாதிக்கப்படாமல் இருப்பதே என்றார்.
சமுதாயப் பணியும் பொருளும் யாவர்க்கும் கிடைக்க வேண்டும். சிலர் அதற்குரிய விலையை வரி மூலம் கொடுக்கவில்லை என்பதற்காக ஒதுக்கப்படக் கூடாது. ஏனெனில், ஏழைகள் துய்ப்பதை வரி கொடுப்போர் தவிர்க்க முயற்சி செய்யலாம். சமூக விருப்பங்கள், அரசின் வரவு–செலவுத் திட்டம் மூலம் செயல்படுத்தப்படல் வேண்டும். சமூக விருப்பத்தை நிறைவு செய்யும் பொருளையும் பணியையும் அரசாங்கமே உற்பத்தி செய்து, சமத்துவச் சமுதாயம் அமைக்கப் பங்கீடு செய்தால் சமுதாயப் பணிகள் நிறைவு பெறும்.
பங்கீட்டு முறை: நலம் சார் பொருளாதாரச் சமுதாயத்தில் வெவ்வேறு திட்டங்கள் அரசாங்க வரவு–செலவுத் திட்டத்தின்கீழ்க் கையாளப்படும்போது அதன் நன்மை தீமைகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. பங்கீடு என்று வரும்போது சமுதாயத்தில் செயற்படும் அரசியல் முறையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சமத்துவ முறை நாடுகளில் மூலதனத்திற்குக் கிடைக்கும் வருவாய் நேரடியாக அரசாங்கத்தைச் சாரும். மேலும், தொழிலாளர்களின் ஊதியம் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது அன்று. முதலாளித்துவ அரசியல் அமைப்பு நாடுகளிலும் கூட வவியமையற்றோருக்கும் ஏழைகளுக்கும் அரசாங்கம் பொருளாதாரப் பங்கீட்டில் தலையிட வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே தான் முதியோர்கள், விதவைகள், திக்கற்றோர் போன்றோருக்கு அரசாங்கம் நேரடியாக உதவி செய்கிறது. சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் ஏழைக் குழந்தைகளின் வாழ்வு வளம் பெற இலவசக் கல்வித் திட்டங்கள் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. வரி விதித்து அதன் மூலம் மக்களிடையே நிதியுதவி பெற்று, ஏற்றத் தாழ்வுகளைச் குறைத்துச் சமுதாய நிலையை உயர்த்துவதும் அரசாங்கச் செலவின் ஒரு பகுதியே.
பொருளாதார உறுதிப்பாடு வளர்ச்சி முதலியவற்றைப் பேணவும் அரசாங்கச் செலவு பயன்படுகிறது. மொத்தத் தேவை (Aggregate Demand) ஒரு அங்காடிப் பொருளாதாரத்தில் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். பணவீக்கம் அல்லது வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்கலாம். இதனை ஈடுகட்ட அரசிறைக் கொள்கை தக்கதொரு அரசாங்கச் செலவு முறையை அல்லது பணக்கொள்கையைக் கண்டு பிடித்துச் செயலாற்ற வேண்டும். பொதுநிதித் துறையில் அரசாங்கச் செலவை மிகுதிப்படுத்தியோ வரியைக் குறைத்தோ சமநிதித்திட்ட வளர்ச்சியைப் பெற வழிகோலமுடியும். அரசாங்கச் செலவுக் கொள்கை, ஒதுக்கீடு, பகிர்ந்தளிப்பு முறைகளில் குறுக்கிடக் கூடாது. அரசின் செலவினங்கள் சமுதாயத்தில் செயற்படும் ஒதுக்கீடு முறையைக் கெடுக்காமலும், பகிர்ந்தளிப்பு முறையை மாற்றாமலும் செயற்பட வேண்டும். எல்.கா.ந.
துணை நூல்கள்:
Taylor, P.F., “The Economics of Public Finance”, Oxford & IBH Publishing Company, 3rd Edition, 1968.
Groves, H.M., “Financing Government”, Henry Holt & Company, New York, 1950.
Prest, A.R., “Public Finance in Theory and Practice”, ELBS & Weidenfeld and Nicolson, 1974.
Carl, S. Shoup, “Public Finance”, Wiedenfeld and Nicholson, 1969.
Musgrave & Shoup, “Readings in Economics of Taxation”, AFA, 1959.
அரசரங்கப் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்குகளும்: பன்னெடுங் காலமாகவே அரசு எந்தக் காலத்தில் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தலையிட வேண்டும். எந்தக் காலத்தில் தலையிடக் கூடாது என்று உறுதி செய்வது மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. அரசின் கட்டுப்பாடுகள் தேவையா, இல்லையா என்ற முடிவுக்குப் பிறகுதான், எந்த அளவுக்குக்