அரசாங்கப் ... ... ஒழுங்குகளும்
607
அரசாங்கப் ... ... ஒழுங்குகளும்
இவற்றை நோக்கமாகக் கொண்டு தொழிற் கொள்கை 1948–இல் வெளியிடப்பட்டது. இதன்படி ஒரு சில துறைகள் அரசுக்கு மாத்திரம் முற்றுரிமையாகவும், வேறு சில துறைகள் தனியாருக்கும் அரசுக்கும் பொதுவாகவும், மற்றவை தனியாருக்கு மாத்திரம் உரியவாகவும் வரையறுக்கப்பட்டன. ஆனால், எல்லாத் துறைகளிலுமே அரசு தலையிட உரிமை பெற்றிருக்கிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு திட்டங்களை அமைத்து, அரசியல் அமைப்புச் சட்டத்தின் இலக்குகளை அடைய முயல்கிறது. அதற்கு உறுதுணையாக 1951–இல் தொழில் முன்னேற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் (The Industries Development and Regulation Act), 1956 இல் கம்பெனிச் சட்டத் திருத்தம், 1948–இல் தொழிலாளர் அரசு பாதுகாப்புச் சட்டம் (Employees State Insurance Act), குறைந்த அளவுக் கூலிச் சட்டம் (Minimum Wages Act, 1948), 1956–இல் இன்றியமையாப் பொருள்கள் சட்டம் (Essential Commodities Act, 1956), முற்றுரிமை, வாணிகத்தடைச் சட்டம் (MRTP), வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் (FERA), மற்றும் 1949-ஆம் ஆண்டு முதல் அரசுகள் வேளாண்மையைக் கட்டுப்படுத்திய ‘சமீன்’ (Zamin) ஒழிப்புச் சட்டங்கள், உச்சவரம்புச் சட்டங்கள், குத்தகைப் பாதுகாப்புச் சட்டங்கள், போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் மாநிலப் போக்குவரத்துச் சட்டங்கள், வணிகத்தைக் கட்டுப்படுத்தும் கடைச்சட்டங்கள் (Shop Acts), எடைகளையும் தரத்தையும் கட்டுப்படுத்தும் ‘எடைகள், அளவு கருவிகள் சட்டங்கள்’, உணவுப் பொருள் கலப்படத் தடுப்புச் சட்டங்கள், மருந்து வகைத்தரக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் போன்ற எண்ணற்ற கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. இவை உற்பத்தியைப் பெருக்கவும் தரங்களைக் காப்பாற்றவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள். நம் நாட்டுக் கட்டுப்பாடுகளின் பட்டியல் மிக நீண்டது. வேளாண்மை, தொழில்கள், உழைப்பாளர் அளிப்பு – நலம், போக்குவரத்து, மின் சக்தி, பொருள் விற்பனை, தரக்கட்டுப்பாடு, கல்வித் துறையில் மாணவர் அனுமதி, கல்வித்தரம், மருத்துவ வசதிகள் போன்ற எல்லாப் பகுதிகளுக்குமே பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய அரசாலும் மாநில அரசுகளாலும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு (Fundamental Rights) உட்பட்டவையாகவே இருக்க வேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கக்கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் வழக்குமன்றம் சென்று அக்கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெறும் உரிமை பெற்றிருக்கிறார்கள். இந்திய அரசுகளின் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் அனைத்துமே மாநில உயர்நீதி மன்றங்களாலும், இந்திய உச்சநீதி மன்றத்தினாலும் பல்வேறு காலங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் பற்றிய ஆய்வுக் குழுவின் கருத்துகள்: இந்திய அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளின் ஒழுங்குமுறைகளின் நடைமுறை விளைவுகளைக் குறித்துப் பல ஆய்வுக் குழுக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளன. 1965–இல் முற்றுரிமை ஆய்வுக் குழுவின் அறிக்கை (Monopolies Inquiry Committee Report – 1965) வெளிவந்தது. முற்றுரிமை நிறுவனங்கள், அரசுகளின் கட்டுப்பாடுகளிலும் ஒழுங்கு முறைகளிலும் இருக்கும் இடைவெளிகளை நன்கு தெரிந்து கொண்டு, அவற்றைத் தங்களுக்கு உதவியாகப் பயன்படுத்துகின்றன என்று தெரிவித்தது. பி.கே. ஆச்சாரியாவின் (P.K. Acharya) “தொழில் திட்டங்களும் உரிமம் வழங்கும் கொள்கைகளும் பற்றிய இறுதி அறிக்கை” (Industrial Planning and Licensing Policy–Final Report) 1967–இல் வெளிவந்தது. மாறுபடும் தேவைக்கேற்பவும் உற்பத்தித் திறனுக்கும் வெளியீட்டிற்கும் உள்ள தொடர்புக்கேற்பவும் உரிமம் வழங்குவதில் ஒருங்கிணைப்பு ஏற்படவில்லையென்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரே பொருளின் உற்பத்திக்குப் பெரிய நிறுவனங்கள் பல்வேறு பெயர்களில் விண்ணப்பங்கள் செய்து தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உரிமங்களைப் பெற்று விடுவதால், சிறிய நிறுவனங்கள் அவற்றுடன் போட்டியிட முடியாமல் போய்விடுகிறது என்பதையும் அவர் விளக்கியிருக்கிறார்.
தொழில் உரிமக் கொள்கை விசாரணை அறிக்கை (Industrial Licensing Policy Inquiry Report) 1969–இல் வெளிவந்தது. தொழில் உரிமங்களைப் பெறுவதன் மூலம், பெரிய முற்றுரிமை நிறுவனங்கள், தொழில் வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் போன்றவற்றிடமிருந்து குறைந்த வட்டியில் கடனுதவி பெற்றுத் தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை இந்த அறிக்கை தெளிவாக்குகிறது.
‘நேர்முக வரிகள் ஆய்வுக் குழு அறிக்கை’ (Direct Taxes Enquiry Committee Report) 1971–இல் வெளி வந்தது. ‘வாஞ்சுக் குழு’ (Wanchoo–Commitee) எனப் பெயர் பெற்ற இந்தக் குழு, இந்தியாவில் ஓர் இணைப் பொருளாதாரம் (Parallel Economy), சட்ட முறையிலமைந்த பொருளாதாரத்திற்கு இணையாகச் சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் இயங்குகிறது என்றும், கறுப்புப் பண நடமாட்டம் இந்த இணைப் பொருளாதாரத்தில் மிகுதியாக இருக்கிறது என்றும்