அரசாங்கப் ... ... ஒழுங்குகளும்
608
அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்
அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அரசு உற்பத்தியையும் பகிர்வையும் கட்டுப்படுத்த மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் இணைப் பொருளாதார இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் தங்கள் ஆதாயத்திற்காகவும் செல்லக் குவிப்புக்காகவும் திசை திருப்ப முடித்திருக்கிறது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது
திரு. வாதிலால் தாக்லி (Mr. Vadilal Dakli) தலைமையில் 1978 பிப்பிரவரியில் அமைக்கப்பட்ட “கட்டுப்பாடுகள், உதவித்தொகைக் குழு” (The Committee on Controls and Subsidies) அதன் அறிக்கையை 1979–மே மாதம் அளித்தது. தேவையற்ற பல கட்டுப்பாடுகள் அரசின் சட்டங்களாக இருக்கின்றனவென்றும், ஒரு சில கட்டுப்பாடுகள் இருப்பினும் அவை ஒன்று திரட்டப்பட்டு வெளியிடப்படாமையால் மேலதிகாரிகள் கூட அவை பற்றி முழுமையாக அறிந்திருக்க வில்லையென்றும், தேவையற்ற கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டுமென்றும், ஆண்டுதோறும் பாராளுமன்றத்திற்கு நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் பற்றி அறிக்கைகள் தர வேண்டுமென்றும், ஒரே பொருளைப் பற்றிப் பல கட்டுப்பாடுகள் இருந்தால் அவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டுமென்றும், கட்டுப்பாடுகள் எளிமையாக்கப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவின் கலப்புப் பொருளாதாரத்தில் ஒழுங்கான வருவாய்ப் பகிர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு மத்திய, மாநில அரசுகள், அங்காடி நடவடிக்கைகளின் மீது கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் விதித்து வழி நடத்த முயல்கின்றன. உச்ச வரம்புச் சட்டங்களும் உரிமம் வழங்கும் முறைகளும் இன்றியமையாப் பொருள்கள் பற்றிய சட்டங்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் நோக்கத்தோடுதான் கொண்டு வரப்பட்டன. ஆனால், இவை போன்ற கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் அரசுகளின் பல்வேறு துறைகளால் செயற்படுத்தப்படுகின்றன. ஒரு துறை, மற்றொரு துறைக்கு எதிர்மறையாகச் செயற்படுகிறது. இதனைச் சாதகமாக்கிக் கொண்டு, பொருளாதார வலுவுள்ளவர்கள், இந்தக் கட்டுப்பாடுகள், ஒழுங்கு முறைகளின் நோக்கங்களைத் தோல்வியடையச் செய்யக் கூடிய வழிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இதனைத் தவிர்ப்பதற்காக அரசுகள் மேலும் மேலும் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகின்றன. அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் முற்றிலும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதற்குப் பதிலாகக் கட்டுப்பாடுகள், அவை மிகுமாறு செய்ய வழி வகுக்கின்றன. கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் முழுவதும் கைவிடுவதனால் பொருளாதார வலுவற்றவர்கள் ஒரேயடியாகக் கைவிடப்படுவார்கள். சக்தி உள்ளவர்கள், சக்தி இல்லாதவர்களை நசுக்குவதால் பொருளாதார உரிமை பாழ்படுகிறது. எனவே, கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் வேண்டும். ஆனால், அந்தக் கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் நடைமுறையில் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றனவா என்று தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். கட்டுப்பாடுகளிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அவற்றை நிறைவேற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். இவையனைத்தையும் தொடர்ந்து செய்து கொண்டேயிராவிடில், அவை எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கக் கூடும்; கொடுக்கின்றன. எஸ்.நீ.
துணை நூல்கள்:
Keynes, J.M., “General Theory of Employment Interest & Money”, Mc. Millan, London, 1936.
Pigou, A.C., “Economics of Welfare”, Mc. Millan, London, 1932.
Hayek, F.A., “The Road To Serfdom”, The Chicago University Press, Chicago, 1969.
Milton Androse Frieudman, “Free To Choose”, Harcount, Brace, Jahonavich, New York, 1980.
Galbraith, J.K., “Affluent Society”, Houghton, Mifflin Boston, 1958.
Marx, K., “Capital”, Foreign Publishing House, Vol–I, Moscow. 1961.
அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்: புதிய அரசியல் அமைப்பில் ஆட்சி செய்யும் பொறுப்போடு ஏனைய துறைகளின் முன்னேற்றத்திற்கும் அவற்றின் வளர்ச்சிக்குமுரிய திட்டங்களில் ஈடுபடுவது அரசிற்கு, ஓர் இன்றியமையாத் தேவையாக மாறியுள்ளது. இத்திட்டங்களின் சீரான செயல் முறைக்கும் அவற்றின் வெற்றிக்கும் அரசாங்கம் கையாளும் பொருளாதாரக் கோட்பாடுகளே (Economic Principles) காரணமாகின்றன.
உற்பத்திக் காரணி இட ஒதுக்கீடு: ஒருவர் ஒரு பேனாவைப் பயன்படுத்தும்போது, மற்றவர்களுக்கு அந்தப் பேனா அதே நேரத்தில் பயன்படுவதில்லை. அதாவது, தனியார் பொருள்கள் ஒன்றுக்கொன்று போட்டித் தொடர்பு கொண்டவை (Rival Relationship). ஆனால், பொதுப் பொருள்கள் (Public Utilities) ஒருவர் பயன்படுத்தும்போது மற்றவர்களும்