அரசியல் கருத்துகள்
651
அரசியல் கலை
அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டபோதிலும், தேசிய இயக்கத்தை ஒடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர். கோகலே போன்றவர்கள் மிதவாதிகளாகவும் திலகர் போன்றவர்கள் தீவிரவாதிகளாகவும் அரவிந்தர் போன்றோர் புரட்சிக்காரர்களாகவும் விளங்கினர். “சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை நான் பெற்றே தீருவேன்” என முழங்கினார் திலகர். அன்னி பெசன்ட் (Annie Besant) அம்மையார் 1916-இல் தன்னாட்சி இயக்கத்தைத் துவக்கினார். காந்தியடிகள் 1919–ஆம் ஆண்டு முதல் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தன்னிகரில்லாத் தலைவராக விளங்கினார். சத்தியாக்கிரகம் என்ற புதியதோர் அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் நாட்டு விடுதலையைப் பெற்றுத் தந்தார். தென்னாட்டில் சமத்துவச் சீர்திருத்தக் கொள்கையைப் பார்ப்பனரல்லாத இயக்கம் பரப்பியது. அத்தகைய பகுத்தறிவுத் தந்தையாக விளங்கியவர் ஈ.வே. இராமசாமிப் பெரியார் ஆவார். 1947–ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்ற பின்னர் மக்களாட்சிக் கருத்துகளைக் கொண்ட குடியரசு அரசியலமைப்புச் சட்டம், 1950 சனவரி 26–இல் நிறைவேற்றப்பட்டது. சமதரும, சமயச் சார்பற்ற கொள்கையையும் அச்சட்டம் வகுத்துள்ளது.
பண்டைச் சீனாலில் இலாவோசு (Lao–tsu, பிறப்பு, கி.மு. 604), கன்பூசியசு (Confucius, கி.மு. 551–479) முதலியவர்கள் சட்டம், அரசாங்கம் என்பவற்றைப் பற்றிக் கூறியுள்ளவைகளையே சீன அரசியல் கருத்துகள் எனக் கூறலாம். அவர்கள் கொள்கையினைத் தாவோக் (Taoism) கொள்கை என்பர். அரசு, குடிகளுடைய நடவடிக்கைகளில் தலையிடக் கூடாதென்பதும், வல்லந்தத்திற்கு அடிப்படையான போர்ப்படைகளை அமைக்கக்கூடாதென்பதும் அவர்களுடைய தலைசிறந்த கருத்துகளாகும். சட்டங்களால் ஆட்சி புரிவதைக் காட்டிலும் ஒழுக்கத்தால் சீர்திருத்துவதே சிறந்தது என்பது கன்பூசியின் கோட்பாடாகும். சீனர்கள் தனித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்களாதலால் தேசிய அரசாங்கம் என்னும் கோட்பாட்டை அவர்கள் முற்றிலும் புறக்கணித்தனர். 1911-ஆம் ஆண்டுச் சீனப் புரட்சி நடைபெற்றவரை பொது மக்களின் கருத்து (Public Opinion) என்பது, சீனா அதுவரை கேட்டிராத ஒன்றாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் புரட்சிகரமான அரசியற் கருத்துகள் பரப்பப்பட்டன. காங்க்-யூ-வே (Kang–Yu–Wei, கி.பி. 1858–1927) என்பவர், சட்டங்கள் தேவையில்லை என்னும் பண்டைய கருத்துக்கு மாறாக, இலவசக் கட்டாயக் கல்வி, 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கெல்லாம் வேலை தருதல், நிலம், இருப்புப் பாதை (Railway), தொழிற்சாலை முதலியவற்றைத் தேசிய மயமாக்குதல் முதலிய சோசியலிசக் கருத்துகளைக் கூறினார். சன்யாட்சென் (Sun Yat-sen, கி.பி. 1866–1925) மக்களாட்சி (Democracy), தேசியம் (Nationalism), மக்கள் வாழ்வு (People's Living) என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தேசியக் (Kuomin–tang) கட்சியைத் தொடங்கினார். பின்னர் மா சே துங் ( Mao Tse–tung, கி.பி. 1893–1976) பொதுவுடைமைக் கொள்கைகளைப் பரப்பி 1949–ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினார்.
இசுலாமிய நெறி, சமய, அரசியல், சமூக, குடும்ப நிலைகளையெல்லாம் ஒருவழிப்படுத்துவதற்கான விதிகளைக் கூறியுள்ளது. அந்நெறிக்குச் ‘சரியத்’ (Shariat) என்று பெயர். அச்சொல் இசுலாமிய வேதநூலான குர்ஆனிலேயே இடம் பெற்றுள்ளது. இசுலாமிய அரசியற் கொள்கைப்படி அரசாளும் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவரைக் கலிபா (Caliph) என்பர். ஒவ்வொரு முசுலிம் குடிமகனும் கலிபா ஆவதற்கு உரியவர். கலிபா சட்டப்படியும் நீதி வழுவாமலும் ஆட்சிபுரிகின்றவரை மக்கள் கீழ்ப்படிந்து நடப்பர். அவர் கொடுங்கோலராய் மாறிவிட்டால் அவரைப் பதவியில் இருந்து நீக்கிவிடும் உரிமை பொது மக்களுக்கு உண்டு.
இசுலாமிய அமைப்பு ஒரு குடியரசு அமைப்பாகும். அதில், சாதி, மதம், இனம், இடம், மொழி முதலிய வேறுபாடுகள் இல்லை, நீதியையும் அறநிலையையும் ஒழுக்க நெறியையும் இசுலாம் கற்பிக்கிறது. ந.கு.நா.
துணை நூல்:
Appadorai, A., “The Substance of Politics”, Oxford University Press, London, 1972.
அரசியல் கலை சமுதாய அமைப்பின் பொதுத் தன்மைகளைப் பற்றிய செய்தித் திரள் ஆகும். அரசு என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் அடங்கிய ஒரு வகைச் சமுதாய அமைப்பு. மனிதன் தன் இனத்தவரான மனிதரோடு கூடி ஒரு கூட்டமாக அல்லது ஒரு சமுதாயமாக வாழும் இயல்புடையவன்; இத்தகைய சமுதாய அமைப்புக்கு இன்றியமையாத தேவைகளை நிறைவு செய்வதற்காக அதிலுள்ள மக்களால் பின்பற்றப்படும் சட்ட விதிகள், செயல்கள், அதிகாரங்கள் ஆகியவையெல்லாம் அரசியலில் சேரும். ஆகையால், ஒருவகைப்பட்ட மக்கட் சமுதாயமாகிய அரசு என்ற சமுதாய அமைப்பின் பொதுத் தன்மைகளைப் பற்றிய செய்தித் திரளே அரசியல் (Politics) ஆகும். குடும்பம், சமய நிறுவனம் அல்லது திருச்சபை (Church), தொழிலாளர்கள் அமைந்துள்ள தொழிற் சங்கங்கள் (Trade Unions) போன்றவையும், சமுதாய அமைப்புகள் தாம் என்றாலும், இவைகளுக்கு இல்லாத ஒரு தனிப்பட்ட இயல்பு (Special Characteri-