உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியார்‌ பேரறிக்கை

688

அரசியார்‌ பேரறிக்கை

திருச்சபையின் உதவியும் ஒத்துழைப்பும் இன்றிச் செவ்வனே ஆட்சி செய்ய இயலாதென்றார். ஆனால் இவருக்குப் பின் கி.பி. 14,15,16–ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தாந்தே (இத்தாலி), சான் விக்ளிப் (பிரிட்டன்), மாக்கிய வெல்லி (இத்தாலி) ஆகிய அரசியல் அறிஞர்கள், சமயம் அரசியலில் தலையிடுதல் கூடாது எனும் கருத்துடையவர்களாகவே இருந்தனர். சமயச் சீர்திருத்தத்திற்குப் பின் சமயத்தினின்றும் அரசியல் வேறாகப் பிரிக்கப்பட்ட நிலையை வரலாற்றுச் சான்றுகள் கொண்டு அறியலாம். இவ்வாறு இருவேறு கோட்பாடுகள் இருந்தாலும், சமயச் சார்பற்ற அரசே பிற்காலத்தில் பல அரசியல் சிந்தனையாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஆகையால் அத்தகைய அரசே முறையானதென மக்களால் விரும்பப்படுவது, அவ்வறிஞர்கள் வாயிலாக வெளிப்படுகிறது.

கோ.க.

துணை நூல்கள்:

நடராசன், பெ., “அரசியல் கோட்பாடுகள்”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973.

பரதன், ம., “பழங்கால இந்தியாவில் அரசியல் சிந்தனையும் ஆட்சி முறையும்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1977.

Appadorai, A., “The Substance of Politics”, Oxford University Press, Madras, 1978.

Subramanian, N., “Sangam Polity”, Asia Publishing House, Bombay, 1966.

அரசியார் பேரறிக்கை என்பது விக்டோரியா அரசியாரால் கி.பி. 1858–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையைக் குறிக்கும். இது அரை நூற்றாண்டுக் காலத்திற்கு இந்திய மக்களின் உரிமைச் சாசனமாக விளங்கியது. பேரரசியார் விக்டோரியாவின் பேரறிக்கை படைவீரர் கலகத்திற்குப் பின் கி.பி. 1858–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 1–ஆம் நாள் இந்திய அரசர்கள், சிற்றரசர்கள், மக்கள் ஆகிய அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் அரசப் பிரதிநிதியும் தலைமை ஆளுநருமான கானிங் பிரபு அலகாபாத்தில் நடைபெற்ற அரசவை விழாவில் இதனை வெளியிட்டார். அரசியாரின் விருப்பத்திற்கேற்பத் திருத்தியமைக்கப்பட்ட இப்பேரறிக்கையில் அவருடைய பெருந்தன்மை, அறச்செயல், சமயப் பொறை ஆகியவற்றை உணர்த்தும் கீழ்க்காணும் கூறுகள் அடங்கியிருந்தன.

“கிரேட் பிரிட்டன், அயர்லாந்து ஆகியவற்றின் அரசியான விக்டோரியா எனப்படும் யாம், பல இன்றியமையாத காரணங்களை முன்னிட்டு, பிரபுக்கள் மக்கள் சபையாரின் இசைவினைப் பெற்று, இதுவரையில் கிழக்கிந்திய வாணிகக் குழுவால் நிருவகிக்கப்பட்டு வந்த இந்திய ஆட்சியை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். ஆதலால் அப்பகுதிகளில் உள்ள குடிமக்கள் நம்மிடம் அன்புள்ளவர்களாக இருக்குமாறு பணிக்கிறோம்; நமக்கும் நம் சந்ததியார்க்கும் நம்மால் இந்தியாவை ஆளுவதற்கு நியமிக்கப்படுவோர்க்கும் அவர்கள் பற்றுறுதியுடன் இருக்க வேண்டும்.

“நாமும், திறமைசான்ற ஊழியமும் விசுவாசமும் கொண்டுள்ள சார்லசு சான் கானிங் பிரபுவை நம் முதல் அரசப் பிரதிநிதியாக அல்லது தலைமை ஆளுநராக நியமிக்கின்றோம். அவர் அப்பகுதிகளை தம் சார்பில், நம் பெயரால் ஆட்சியை நிருவகிப்பார். அவர் இந்திய விவகாரங்களைக் கவனிக்க இங்கிலாந்து நாட்டு அமைச்சரவையிலுள்ள செயலாளர்களுள் ஒருவர் வழியாக நாம் பிறப்பிக்கும் ஆணைகள் விதிகள் ஆகியவற்றிற்கு உட்பட்டுச் செயற்படுவர்”.

“இப்போது கிழக்கிந்திய வாணிகக் குழுவின் பணியில் உள்ள படைத்துறை சாராத அரசு அலுவலர்கள் யாவரையும் நாம் அவரவர்கள் பணியிலேயே அமர்த்திக் கொள்கிறோம். அவர்கள் நம் விருப்பக் காலத்திற்கு ஊழியம் செய்யக்கடவர்”.

“அன்றியும், சுதேச மன்னர்களுக்கு (Native Princess) இதன்வாயிலாகத் தெரிவிப்பது யாதெனில், கிழக்கு இந்திய வாணிகக் குழு அவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும். அவர்களும் அங்ஙனமே அவற்றை மதித்து நடப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்”.

“இப்பொழுது நம்மிடம் உள்ள பகுதிகளை விரிவுபடுத்த நாம் விரும்பவில்லை; நேரடிப் பகுதியில் அயலார் படையெடுப்பதையும் அனுமதியோம்; அண்டை நாடுகள்மீது அத்துமீறுதலையும் அனுமதியோம்”.

“சுதேச மன்னர்களின் உரிமைகள், பெருமை மரியாதை ஆகியவற்றை எங்களுடையதாகக் கருதி மதிப்போம்; நம் குடிமக்களைப்போன்று அவர்களுடைய வாழ்வும் வளம்பெறச் சமுதாயம் முன்னேற விரும்புகிறோம்; இவை உள்நாட்டு அமைதியாலும் நல்லாட்சியாலுமே பெறப்படுவனவாம்”.

“எங்களுடைய மற்றக் குடிமக்களுடன் கடமையுணர்ச்சியால் நாங்கள் பிணைக்கப்பட்டுள்ளது போன்று இந்திய மக்களுடனும் பிணைக்கப்பட்டுள்ளோம். எல்லாம் வல்ல இறைவன் அருளால் எங்களிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ள அக்கடமைகளை உண்மையுடன், மனச்சான்றுக்குக் கட்டுப்பட்டு நிறைவேற்றுவோம்”.

“நாம் கிறித்தவ சமயத்தில் ஆறுதல்களைப் பெற்று அமைதி அடைகின்றோம்; நம் குடிமக்களின்