அரசிறைக் கொள்கை
690
அரசிறைக் கொள்கை
பொருளாதாரத்தை (Aggregate Economy) எவ்விதம் நன்மை தரத்தக்க வகையில் அமைத்திட முடியும் என்பதை இது விளக்குவது.
தேவைகளை அளவீடு செய்வதிலும் அவற்றை ஆய்வு செய்வதிலும் ஏற்பட்ட முன்னேற்றம், பலவித நிதிக் கொள்கை அணுகுமுறைகளுக்கு வழிவகுத்தது. கினீசியப் (Keynesian) பொருளியல் கோட்பாடு இதற்குந் தூண்டுகோலாக அமைந்தது. பொருளாதாரத்தில் மொத்தத் தேவையின் மிகுதியையும் அதன் நிலைப்பாட்டையும் இவ்வணுகுமுறைகள் நோக்கங்களாகக் கொண்டன. மொத்தத் தேவை மிகும்போது, பொருளாதாரம் அதற்கு இணங்கும்; பயன்படுத்தப்படாத பொருளாதார மூலங்கள் பயன்படுத்தப்படும்; உற்பத்தி, வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவை பெருகும் என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டவை இந்நோக்கங்கள். இக்கோட்பாட்டின்படி விலை நிலைப்பு ஒரு சிக்கலன்று. ஏனெனில், மிகுந்த தேவையை மிகுந்த அளிப்பு ஈடு கட்டுகிறது. இன்றேல், பண வீக்கம் தோன்றும். இக்கருத்துகள் யாவும் அரசிறைக் கொள்கையில் (Fiscal Policy) சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. இக்கொள்கையுடன் பொருளாதார, ஒழுங்கியல் அடிப்படையில் வருமான மறு பங்கீட்டு முறை அமைய வேண்டுமென்ற தேவையும் உணரப்பட்டது. இவ்வணுகுமுறைகளினால் எழுந்த கோட்பாடுகள், மக்களின் நுகர்வு, சேமிப்பு நடவடிக்கைகளையும், உபரி அல்லது பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் ஆகியவை எவ்வாறு நடவடிக்கைகளைப் பாதிக்கின்றன என்பதையும் ஆய்வு செய்ய வழிகோலின.
பொருளாதாரத்தில் செலவுகளைப் பற்றிய ஆய்வு, பணத்தின் பங்கு பற்றி அறிய வழிகாட்டியது. செலவுகள் வருவாயினை உருவாக்குவதுடன், மொத்தச் செலவுகள் மொத்த வருவாய்க்குச் சமமாகின்றன. மொத்தச் செலவும் பணத்தின் அளிப்பும் நிலையான விகிதத்தில் இருக்கும்போது, அரசின் நிதிக் கொள்கையைவிடப் பணத்தின் அளிப்பு மொத்த வருவாய் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா? என்ற வினா எழுகிறது. வரி இல்லாமலும், பணத்தின் அளிப்பை மிகுதிப்படுத்தாமலும் செயலின் அளவை உயர்த்திட முடியும். (இங்குப் பணத்தின் அளிப்பு என்பது அனைத்து மக்களின் மொத்தப் பண இருப்பு ஆகும்). அது பொது வருவாய் அல்லது செலவுக்குள்ள பண அளிப்பு விகிதத்தை மாற்றுகிறது. பொதுவாக, மக்கள் பணத்தை நீர்மை (Liquidity) நிலையில் வைத்திருக்க விரும்புவர். கூடுதலான நீர்மை விருப்பம் வரி வீதத்தை உயர்த்துகிறது. சொத்துகளையும் பிணைய வைப்புகளையும் (Securities) கூடப் பணமாக மாற்றிட விரும்புவர். பண அளிப்பிலும் அரசின் நிதிக் கொள்கையிலும் ஏற்படும் மாற்றங்கள் வட்டி வீதத்தைப் பாதிக்கின்றன. வட்டி வீதம் முதலீட்டைப் பாதிக்கிறது. செலவு, வருமானம், பணத்தின் அளிப்பு ஆகியவை குறித்த ஆய்வு, பணவாக்கக் கொள்கையும் (Monetary Policy), அரசாங்க நிதிக் கொள்கையும் ஒருங்கிணைந்து செயற்பட வலியுறுத்துகிறது. சமூக வருவாயை உயர்த்த இக்கொள்கைகள் துணைபுரிகின்றன.
அரசிறைக் கொள்கையை வகைப்படுத்த நடைமுறையில் பல வழிகள் தோன்றியுள்ளன. பற்றாக்குறை நிதி நிலையில், அரசின் செலவில் ஏற்படும் மிகுதி, மொத்த வருவாயை உயர்த்துகிறது. இம்மிகுதி தொடக்கக் காலத்தில் பெருக்கியின் (Multiplier) விளைவுகள் மூலம் நிகழ்கிறது. அதே நேரத்தில் அரசின் செலவால் உண்டான வருவாய், மக்களால் பல்வேறு நிலைகளில் எவ்விதத்தில் செலவழிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அமைகிறது. செலவுகள் மிகுதியாவதால் வருமானமும் மிகுதியாகிறது. மேற்கொண்டு செலவிற்குப் பணமில்லை என்ற நிலைவரை இந்நிகழ்ச்சி தொடர்கிறது. செலவில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமல்லாமல் பொதுச் செலவு நிலையாக இருக்கும் வகையில் வரியில் ஏற்படும் மாற்றம் பெருக்கியின் போக்கினைத் தூண்டுமென இன்று அறியப்படுகிறது. வரிக் குறைப்பினால் தனியார் செலவு மிகும். இவ்வாறு தனியார் செலவுகள் மாறுகிற போது பெருக்கியின் விளைவாக மாற்றங்கள் தோன்றும். பொதுச் செலவுக்கான பெருக்கிகளோடு, வரிப் பெருக்கிகளும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அரசின் செலவுகளும் வருவாய்களும் சமமாகும் நிலையில் கூடப் பெருக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கலாம். இதுவே சமநிலை வரவு செலவுத் திட்டப் பெருக்கியின் செயல்முறை ஆகும்.
அரசாங்கத்தைப் பொதுப் பொருள்கள் அல்லது அரசு சார்பான பொதுப் பொருள்களின் (Quasi Public Goods) உற்பத்தியாளராகவோ வருவாயை மறுபங்கீடு செய்யும் அமைப்பாகலோ அங்காடிப் பொருளாதார அமைப்பைச் சீர்செய்யும் கருவியாகவோ கருதலாம். அரசைப் பற்றிய இக்கருத்து தொன்மைக்காலக் கருத்தினின்றும் மாறுபட்டது. பொருளாதாரத்தின் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வல்லாட்சிக் கருத்தினின்றும் இப்புதிய கருத்து மாறுபடுகிறது. மனித சமூகப் பொருளாதார வளர்ச்சியின் உடனடித் தேவை உணரப்பட்ட காலத்தில் தத்துவக் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், பொதுவாகவே அரசின் பங்கு பெருகி வந்தது. இதன் காரணமாக வளர்ச்சி அல்லது முன்னேற்ற வழி முறைகளில் முழுமைப்