அரிக்கமேடு
734
அரிக்கமேடு
வகழாய்வில் ஓரளவு கிடைத்துள்ளன. இவை தவிரச் சிவப்பு நிறமுடைய மட்கலங்கள், எல்லாப் பண்பாட்டுக் காலப் படிவங்களிலும் கிடைக்கின்றன. எனினும் பழங்கால மண் படிவங்களில் இவ்வகை மட்கலங்கள் குறைவாகக் கிடைக்கின்றன. தென்பகுதியிலும் வடபகுதியிலும் மேல்மட்ட மண் படிவங்களிலும் இச்சிவப்பு நிற மட்கலங்களைப் பயன்படுத்துதல் மிகுதியாயுள்ளது. பெரும்பாலும் இம்மட்கலங்களை மணல், களிமண், மைக்கா, உமி ஆகியவற்றைக் கொண்டு பிசைந்து செய்திருக்கின்றனர். இம்மட்கலங்கள் பெரும்பாலும் சக்கரத்தைச் சுழல விட்டு வடிவமைத்திருக்கின்றனர். ஆயினும் குமிட்டி அடுப்பு, கிணற்றுக்கான உறைகள், மற்றும் பெரிய தொட்டிகள், சாடிகள் ஆகியவற்றைச் சக்கரத்தின் உதவியின்றிக் கைகளாலேயே வனைந்தனர். இம்மட்கலங்களை ஒரு சிறிதே அக்கால மக்கள் அழகு செய்துள்ளனர். விரல் நுனிகளைப் போன்ற வளைந்த வரிக்கோடுகள் இட்டும் பானைகளை அழகு செய்துள்ளனர். இம்மட்கலங்கள் பல வடிவினை உடையவை. இவற்றை வட்டில்களாகவும் அகல வாயுள்ள பாத்திரங்களாகவும், சிறு குவளைகளாகவும், சட்டிகளாகவும் செய்துள்ளனர். பானைகள், மூடிகள், கூர் முனையுடைய சாடிகள் ஆகியன செய்யப்பட்டிருக்கின்றன. இக்காலத்தில் மிகுதியாகப் பயன்படுத்திய மட்கலம் வாயகன்று அடி சிறுத்த கோப்பை போன்ற பாத்திரமாகும்.
சுடுமண் பொம்மைகள்
அகழாய்வின்போது ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட மணிகள் (Beads) கிடைத்தன. இவை சங்கு, எலும்பு, தங்கம், கண்ணாடி, ஆகிய பொருள்களில் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் நவரத்தினக் கற்களால் ஆன மணிகளையும் தங்கத்தால் ஆன மூன்று மணிகளையும், சுடுமண்ணால் ஆன பல மணிகளையும் கண்டெடுத்துள்ளனர். பெரும்பாலான மணிகள் கண்ணாடியால் ஆனவை. இம்மணிகளில் நீலம், பச்சை ஆகிய நிறமணிகளே மிகுதி. ஊடுருவிப் பார்க்க இயலாத மங்கிய கண்ணாடி மணிகளும் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இவை கோளம் (Spherical), உருளை (Round), நீள்உருளை, கூம்பு, இரட்டைக்கூம்பு, எண்கோண வடிவங்கள் ஆகியவற்றைக் கொண்டன. மேலும், சில மணிகளின் வெளிப்புறத்தில் நீளவாட்டத்திலும் சிலவற்றில் குறுக்கு வாட்டத்திலும் வரிக்கோடுகள் போடப்பட்டுள்ளன. பல்வேறு நிலைகளில் பல சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளன. இவற்றுள் சிறப்பானதாக ஒரு பெண் உருவத்தைக் குறிப்பிடலாம். இது கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். இவ்வுருவம், ஒரு கையைத் தாழ விட்டுக் கொண்டும், மற்றொரு கையால் கூடையொன்றை இடையில் அணைத்துக் கொண்டும் உள்ளது. முழுமையாகச் சீலையணிந்த இவ்வுருவத்தின் தலைப்பகுதி கிடைத்திலது. சீலையின் மடிப்புகள் நன்கு காட்டப்பட்டுள்ளன. கோவணம் மட்டும் அணிந்த தலையற்ற ஆண் உருவம் ஒன்றும் அகழாய்வில் கிடைத்துள்ளது. அதன் ஒரு கை பக்கவாட்டில் தொங்கவிடப்பட்டுள்ளது; மற்றொரு கை இடையைத் தொட்டுக் கொண்டுள்ளது; மிக அழகான கழுத்தணி, இடை அணி ஆகியவற்றை அணிந்துள்ளது. இவை தவிர மற்றுமொரு பெண் உருவம் அகழாய்வில் கிடைத்துள்ளது. சிவபெருமானின் தலைப்பகுதியும் கிடைத்துள்ளது. உயர்ந்த சடை முடியில் சுருண்ட பாம்பு அமைந்திருக்க, ஒரு பக்கம் சந்திரனின் பிறை அமைக்கப்பட்டுள்ளது. கண் பாதி மூடிய தியான நிலையைச் சிவபெருமானின் உருவம் காட்டுகிறது. இவை தவிர இன்னும் சில சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளன. சதுரங்கக் காய்கள், வட்டமான விளையாட்டு வில்லைகள், காதணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. மாதுளை வடிவிலான பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது. அது பம்பரமாக இருக்கலாம்.
இரும்புப் பொருள்களில் ஒரு மோதிரம், கத்தி, ஆணிகள் ஆகியவையும் தாமிரத்தால் ஆன ஒரு கிலுகிலுப்பையும் அம்மிக் கற்களும் குழவிக் கற்களும் கிடைத்துள்ளன. இங்குக் கிடைத்த கற்பொருள்களில் வட்ட வடிவமான பொருள் பெரும்பாலும் எடைக் கல்லாக இருக்கலாம். மரத்தாலான பொருள்களில், உட்புறம் குடையப்பட்ட ஒரு மரத்துண்டு கிடைத்துள்ளது. இத்துண்டு பெரும்பாலும் சிறுவர் விளையாட்டுப் பொருளாக இருக்கலாம். இவை தவிர, மரத்தாலான கொட்டாப்புளி ஒன்றும் அறுக்கப்பட்ட சங்குகள் பலவும் முற்றுப்பெறாத சங்கு வளையல்களும் கிடைத்துள்ளன. இங்குக் கிடைக்கப் பெற்ற