உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிசிற்கரைப்புத்‌தூர்‌

744

அரிசுடாட்டில்‌

பாடல்கள் உள்ளன என்னும் செய்தி, தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையினால் தெரிகிறது.

அரிசிற்கரைப்புத்தூர் தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் 5 கல் தொலைவிலுள்ளது. பேருந்தில் சென்று இவ்வூரினை அடையலாம். இவ்வூர் இப்போது அழகார்புத்தூர் என வழங்கப்படுகிறது. இதனைப் பெரிய புராணம் செருவிலிபுத்தூர் எனக் குறிப்பிடுகிறது. காவிரியின் கிளைநதிகளில் ஒன்றாகிய அரிசிலாற்றின் தென்கரையில் இது அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரின் தேவாரப் பாடல்கள் இத்தலத்திற்குள்ளன. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்தையும் இதன்கண் வீற்றிருக்கும் இறைவனையும் சுட்டி. ‘அலைக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை அழகார் திருப்புத்தூர் அழகன்’ என்று குறிப்பிட்டுள்ளார். கடுவாய்க்கரைப் புத்தூர் என்னும் பிறிதொரு சோணாட்டுத் தேவாரத்தலத்தினின்றும் வேறுபட்டுத் தெரிவதற்கு அரிசிற்கரை என்னும் அடைமொழி சேர்த்து அரிசிற்கரைப் புத்தூர் எனப்பட்டது. இத்திருத்தலத்தில் உண்மையானந்த முனிவர் பூசித்தார் என்பது கூறப்படுகிறது. இங்கிருந்து புகழ்த்துணை நாயனார் வழிபாடு செய்து முத்தியடைந்த செய்தியினைச் சுந்தரமூர்த்தி சிவாமிகள் ‘அகத்தடிமை’ எனத் தொடங்கும் தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இத்தலம் கோச்செங்கட் சோழன் திருப்பணி செய்த தலங்களுள் ஒன்றாகும். இறைவன் பெயர் படிக்காசளித்த ஈசுவரர்; இறைவியின் பெயர் அழகாம்பிகை.

அரிசுடாட்டில் (கி.மு. 384–322) பண்டைய கிரேக்கரின் ஒரு பிரிவினரான அயோனிய சமூகத்தைச் சேர்ந்தவர். அரிசுடாட்டிலை (Aristotle) ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம் என்று கூறவேண்டும். இவர் கிரீசின் புகழ்பெற்ற ஆதென்சு நகருக்கு அண்மையில் இசுதாகிரா (Stagira) என்ற ஊரில், கி.மு. 384–ஆம் ஆண்டில் நிகோமகசு (Nicomachus) என்னும் மருத்துவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தந்தை, மகா அலெக்சாந்தரின் பாட்டனாருக்கு அரசாங்க மருத்துவராகப் பணிபுரிந்தவர். அச்சூழ்நிலை காரணமாக அரிசுடாட்டிலுக்கு இளமையிலேயே மருத்துவத் துறையில் ஓரளவு அனுபவம் இருந்தது. இவரும் ஒரு மருத்துவராக வரவேண்டுமென்று இவர்தம் பெற்றோர் விரும்பிய போதிலும், இவர் தத்துவத் துறையிலும் வேறு பல சமூகச் செய்திகளிலும் மிக்க நாட்டம் கொண்டிருந்தார். அதனால் பெற்றோரின் விருப்பம் நிறைவேறவில்லை. மேலும், இவர்

அரிசுடாட்டில்

அயோனிய–கிரேக்கப் பிரிவைச் சேர்ந்தவர். அயோனியர்கள் இவற்கையை விரும்பிப் போற்றி வந்தவர்கள்; அதைப்பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபாடு கொண்டவர்கள். ஆகவே, இவருக்கும் அத்தகைய வேட்கை மேலோங்கியிருந்தது. அக்காலத்தில் கல்வி கேள்விகளில் சிறப்புற்று விளங்கிய ஆதென்சு நகரம் அரிசுடாட்டிலின் கருத்தைக் காந்தம்போல் ஈர்த்தது. கி.மு. 367–இல் இவர் ஆதென்சுக்குச் சென்று, முதலில் ஐசோக்ரேட்டசு என்னும் ஆசிரியரிடத்தும், பின்னர்ப் பிளேட்டோ என்னும் பேரறிஞரிடத்திலும் கல்வி பயின்று, 17 ஆண்டுகள் மாணவராக விளங்கினார். அக்காலத்தில் பல அரசியல் தத்துவங்களை ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து, பிளேட்டோவின் கல்விக் கூடத்திற்குச் சிறந்த பெயரைப் பெற்றுத் தந்தார். மனிதனின் கூடி வாமும் தன்மையை விளக்கிச் சமுதாயத்தைப் பற்றிய அரசியல் நூலை ஓர் அறிவியல் நூலாக வகுத்த முதல் அறிஞர் அரிசுடாட்டில். அக்காலத்திய சூழ்நிலையில் இவர் தம் கட்டுரைகளிலோ நூல்களிலோ குறிப்பிடாத சிறப்பான செய்தி எதுவுமே இல்லை என்று துணிந்து கூறலாம். இவர் பெருமையை உணர்ந்த மாசிடோனிய (Macedonia) மன்னர் இரண்டாம் பிலிப்பு, இவரை அழைத்துத் தம் மகன் அலெக்சாந்தருக்குக் கல்வி பயிற்றுவிக்கத் தனி ஆசிரியராக அமர்த்தினார்.

இச்சேவையை அரிசுடாட்டில் 12 ஆண்டுகள் புரிந்த பின் கி.மு. 334–இல் ஆதென்சுக்குத் திரும்பிச்