உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிதி

750

அரிமா சங்கம்‌

களுக்கு 500 குழந்தைகள் பிறந்தன. அபிரதி தனது கடைசிக் குழந்தையான பிரயங்கரன் என்பவனை மிகவும் நேசித்தாள்.

இவளுக்குக் குழந்தைகளைப் பிடித்து உண்ணும் பழக்கம் இருந்தது. இதனால், இவள் அரிதி என அழைக்கப்பட்டாள். அரிதி என்பதற்குக் குழந்தைகளைக் திருடுகிறவள் என்பது பொருள். இதன் விளைவாக இராசகிருக மக்களிடம் அச்சம் ஏற்பட்டு எங்கும் அழுகுரல்கள் எழுந்தன. மக்கள் புத்தரிடம் சென்று தம் குறையினை முறையிட்டனர். புத்தர் அரிதியின் செல்லப் பிள்ளையான பிரியங்கரனைத் தூக்கிச் சென்று அரிதிக்குப் பாடம் புகட்டினார். தன் குழந்தைக்காக வேதனைப்பட்ட அரிதியிடம் புத்தர், தம் குழந்தைகளின் பிரிவால் வாடும் பிற பெற்றோர்களின் துயரங்களை எடுத்துக்கூறினார். அரிதி மனம்திருந்தி மனித இறைச்சி உண்ணுவதை விட்டொழித்தாள். அன்று முதல் இராசகிருகத்தைச் சார்ந்த மக்களும் புத்தரின் ஆணைப்படி அரிதிக்கும் அவள் குழந்தைகளுக்கும் நல்ல உணவை அளித்து வந்தனர். இன்றும் வட இந்திய, புத்த மடாலயங்களிலும் நேபாள மடாலயங்களிலும் அரிதிக்கும் அவள் குழந்தைகளுக்கும் உணவு படைக்கின்றனர். வட இந்திய, புத்த மடாலயங்களில் அரிதிக்கெனப் படையல் மேடைகள் இருந்ததாகச் சீனப் பயணி யுவான்சுவாங் என்பவரும் இட்சிங் என்பவரும் தம் குறிப்புகளில் சுட்டியுள்ளனர்.

அரிதி

சிற்பங்களில் அரிதி அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டிருப்பாள். அவளது மடியில் குழந்தை ஒன்று இருக்கும். அவளைச் சுற்றிலும் 5 குழந்தைகள் இருப்பர். இவ்வைந்து குழந்தைகளும் இவளுக்கு 500 குழந்தைகள் உண்டு என்பதைக் காட்டுகின்றன. அரிதியின் ஒரு கையில் மாதுளங்கனி காணப்படும். இது இனப் பெருக்கத்தைக் குறிக்கும் அடையாளமாகும்.

சாவகத்தில் சண்டி மெந்துத்து (Chandi Mendut) என்னும் இடத்தில் காணப்படும் அரிதியின் சிற்பம் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தவண்ணம் தென்படுகிறது. திபெத்தில் காணப்படும் உருவச் சிலையில் அரிதி தாமரையில் அமர்ந்தவாறு உள்ளாள். அரிதி தன் கணவர் பான்சிகாவுடன் இருப்பது போன்றும் சிற்பங்கள் உள்ளன. இவன் குபேரப் படைத் தலைவனாவான். அசந்தா, எல்லோராக் குகைகளில் அரிதி, பான்சிகா சிற்பங்கள் பெருமளவில் காணப்படுகின்றன.

அரிமர்த்தன பாண்டியன் தமிழ்ப் புராணங்களில் இடம்பெற்ற பாண்டிய மன்னர்களுள் ஒருவன். இவனைப் பற்றிய செய்திகள் திருவிடையாடற் புராணத்திலும் திருவாதவூரர் புராணத்திலும் காணப்படுகின்றன. இவனிடத்தில் மாணிக்கவாசகர் அமைச்சராய் இருந்தார் என்று புராணங் கூறுகிறது. ஏ.சி.பா.

அரிமளம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓர் ஊர். புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் புகையிலைக்குப் பெயர் பெற்றது. கந்தசாமிக் கவிராயர் என்பார் இவ்வூரில் தங்கி அரிமளத் தலபுராணத்தைப் பாடியிருக்கிறார். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழும் ஊர்களுள் அரிமளமும் ஒன்று.

அரிமா சங்கம் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் 1917–ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. மெல்வின் சோன்சு (Melvin Jones) என்பவர் இதைத் தோற்றுவித்தார்.

அக்காலத்தில் சிகாகோ நகரில் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த செல்வாக்குடையோர் பலர் ஒன்று கூடிப் பல சிறு சங்கங்களை அமைத்திருந்தனர். அத்தகைய சங்கம் ஒன்றில் மெல்வின் சோன்சும் உறுப்பினராக இருந்தார். குறிப்பிட்ட நாள்களில் உறுப்பினர்கள் கூடி நல்ல விருந்து உண்டு கலந்து உரையாடுதல் வழக்கம். அவ்வுரையாடல்கள் தன்னலத்தையே மையமாகக் கொண்டிருந்தன. அவரவர் பொருளாதார நிலையை உயர்த்த எவ்வெவ்வகையில் எவரிடம் எத்தகைய உதவியை நாடலாம் என்பதை ஆராய்வதே அக்கூட்டங்களின் இன்றியமையாத நோக்கமாக இருந்தது. அதுபோன்ற பல சங்கங்கள் அமெரிக்க நாட்டின் பல நகரங்களில் இயங்கி வந்தன. மெல்வின் சோன்சுக்கு அச்சங்கங்களின் நடைமுறை மனநிறைவு கொடுக்கவில்லை. அவர் தன்னலத்திலும் சிறந்தது பொது நலமே என்பதை உறுதியாக நம்பினார். அச்சீரிய கருத்தைத் தம் சங்க உறுப்பி-