அரிமா சங்கம்
751
அரிமா சங்கம்
னர்களுக்கு விளக்கி அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்தார். நாட்டிலுள்ள பிற சங்கங்களும் இக்கருத்தை ஏற்றுச் செயற்படவேண்டுமென்று விரும்பினார்; அதற்கான திட்டமும் வகுத்தார். அனைத்துச் சங்கங்களையும் அழைத்து மாநாடு ஒன்று நடத்த ஆவன செய்தார். அமெரிக்க நாட்டில் 9 மாநிலங்களில் இயங்கி வந்த 22 சங்கங்கள், அழைப்பை ஏற்று 36 பேராளர்களை மாநாட்டிற்கு அனுப்பி வைத்தன. 1917–ஆம் ஆண்டு சூன் 7–ஆம் நாள் சிகாகோ நகரில் மாநாடு நடைபெற்றது. பொதுநலத் தொண்டின் மேன்மையையும் இன்றியமையாமையையும் மெல்வின் சோன்சு மாநாட்டில் விளக்கிக் கூறினார். மாநாடு அதனை ஏற்றுக்கொண்டது. மெல்லின் சோன்சின் பெருமுயற்சியால் சங்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அனைத்துலக அரிமாசங்கம், (International Lions Club) நிறுவப்பட்டது. முதல் தலைவராக இந்தியானா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் பி.உட்சு (Dr. William B. Woods) என்பவரும் செயலாளராக மெல்வின் சோன்சும் அமர்த்தப்பட்டனர். இச்சங்கம் இன்று உலகின் பல பகுதிகளில் உள்ள 157 நாடுகளில் 36,359 சங்கங்களை அமைத்து 13,52,854 (அக்டோபர் 1983 இல்) உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரும் இயக்கமாக வளர்ச்சி பெற்றுள்ளது. “பணி செய்வோம்” (We Serve) என்பது அரிமா சங்கத்தின் அடிப்படைக்கொள்கை (Motto) ஆகும்.
அரிமா சங்கத்தின் குறிக்கோள்கள்: 1) அனைத்து நாட்டு நல்லுறவுக்கான கொள்கைகளை ஆய்ந்து, கொடை உள்ளத்துடன் விட்டுக் கொடுத்துப் பழகும் உணர்வை உலக மக்களிடையே உருவாக்கி வளர்த்தல். 2) நல்லரசுக்கும் நற்குடிமைக்கும் ஏற்ற நடைமுறைகளை உருவாக்கிச் செயற்பட உதவுதல். 3) குடிமை, சமுதாயம், பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றைப் பேணி மக்கள் நலமுடன் வாழ ஊக்கத்துடன் செயற்படுதல். 4) சங்கங்களிடையே நட்பையும் நல்லுறவையும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பழகும் பண்பையும் வளர்த்து ஒற்றுமையை ஏற்படுத்தல். 5) கட்சி, மதம் ஆகியவை தவிரப் பொதுச் செய்திகளைக் குறித்து முழுமையாக ஆராய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல். 6) சங்க உறுப்பினர்களின் வருவாயைப் பெருக்கச் செய்வதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது, அவர்களின் வாணிகம், தொழில் ஆகியவற்றில் திறமையை ஊக்குவித்துத் தரத்தையும் நேர்மையையும் வளர்த்தல்.
இந்தக் குறிக்கோள்களின் அடிப்படையில் உறுப்பினர்களின் பணி அமைதல் வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.
அரிமா சங்கங்கள், மக்களுக்குப் பணிபுரிவதில் தனி ஒருவர் செய்யும் தொண்டைக் காட்டிலும், பலர் ஒன்று கூடி ஆற்றும் பணியே மிகவும் பயனுள்ளதாகும் என்ற அடிப்படையில் இயங்கி வருகின்றன. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், சிறுவர் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், சாலைகள், இலவச கண் மருத்துவ முகாம்கள் போன்ற பலநற்பணிகளை அரிமா சங்கங்கள் செய்துவருகின்றன. அதன் ஆட்சிக் குழுவில் தலைவர், துணைத்தலைவர், செயலர், துணைச் செயலர், பொருளாளர் போன்ற வழக்கமான பதவிகளுடன் அரிமா அடக்குநர் (Lion Tamer) அரிமா முடுக்குநர் (Lion Twister) என்ற இருபதவிகளும் உள்ளன. இவர்களுள் அடக்குநர், சங்கச் செயல்முறைகளுக்கு உட்பட்டு உறுப்பினர்கள் நடந்து கொள்வதற்குத் துணை செய்வார்; முடுக்குநர், சங்கக் கூட்டங்களில் கலகலப்பு உண்டாக்க உறுப்பினர்களுக்குத் துணை செய்வார்.
ஒரு வட்டாரத்தில் உள்ள சங்கங்கள் அனைத்தும் இணைந்து ஓர் அரிமா மாவட்டமாகும். அம்மாவட்டங்கள் எண்களினால் குறிப்பிடப்படும். இத்தகைய ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓர் ஆளுநர், மாவட்டத்திலுள்ள சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அனைத்து மாவட்ட ஆளுநர்கள், அனைத்துலக அரிமா சங்கத்தலைவரையும் துணைத்தலைவர்களையும் தேர்ந்தெடுப்பர். இச்சங்கத்தின் தலைமைச் செயலகம், அமெரிக்காவில் இல்லினாய்சு (Illinois) மாநிலத்திலுள்ள ஒக்புரூக்கு (Oakbrooke) என்னும் ஊரில் உள்ளது.
அரிமா சங்கத் தொண்டுகளுக்குத் துணையாகத் தொண்டு மனப்பான்மையினை வளர்க்கும் இரு துணை அமைப்புகள் உள்ளன. இவை இளைஞர்களுக்காக “இலியோ சங்கம்” (Leo Club) என்னும் பெயரிலும், பெண்களுக்காகப் ‘பெண்கள் அரிமா சங்கம்’ (Lioness Club) என்னும் பெயரிலும் செயற்படுகின்றன.
இந்தியாவில் அரிமா சங்கம் தோன்றுவதற்குச் சாரணர் இயக்கம் காரணமாக இருந்தது. 1955–இல் அமெரிக்காவில் நடைபெற்ற உலகச் சாரணர் பெரு விழாவிற்கு இந்தியாவின் பேராளர்களாக மூன்று சாரண ஆணையர்கள் சென்றிருந்தனர். அவர்களில் ஒருவர் நோசீர் பண்டோல் என்பவர். இந்திய ஆணையர்களை விருந்தினராகப் பென்சில்வேனியா மாநிலத்தின் செக்சடன் அரிமா சங்கம் அழைத்திருந்தது. நோசீர் பண்டோல், அவர்கள் செய்து வரும் பணிகளைக் கண்டு வியந்தார். அதுபோன்ற இயக்கம் ஒன்று இந்தியாவிற்குத் தேவை என்பதை உணர்ந்து இந்தியா திரும்பியதும் சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் பயனாக, இந்தியாவில் முதல் அரிமா சங்கம் பம்பாய் நகரில் 3–2–1956–இல் தோன்றி-