உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/792

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரியானா வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌

756

அரியானா வேளாண்மைப்‌ பல்கலைக்‌ கழகம்‌

களைப் பஞ்சாபிலிருந்து பிரித்து, அரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது.

இம்மாநிலத்தின் ஆட்சிமொழியும் பேச்சு மொழியும் இந்தியாகும். சுற்றுலா வளர்ச்சியிலும் அரியானா சிறப்பிடம் பெற்றுள்ளது. சண்டிகர், குருச்சேத்திரம், அம்பாலா, பானிப்பட்டு போன்ற இடங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.

சண்டிகர் புதுமையான நகர். பிரெஞ்சுக் கட்டிடக் கலை வல்லுநரின் கருத்துப்படி கட்டப்பெற்ற இந்நகரம் இந்தியாவின் அழகிய நகரங்களுள் ஒன்றாகும்.

சுராசுகுண்டு (Surajkund) மற்றோர் அழகான சுற்றுலா மையம். இங்குள்ள இராச அன்சு (Raj Hans) என்னும் உணவகம் சிறப்புப் பெற்றது. காசுமீரப்பள்ளத்தாக்கு, சிம்லா, அமிர்தசரசு, பாக்ரா நங்கல் அணை போன்றவற்றைக் காண அரியானா மாநிலத்தின் வழியாகத்தான் பயணம் செய்யவேண்டும்.

அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம் தில்லி நகருக்குத் தெற்கே 1610 கி.மீ. தூரத்தில், அரியானா மாநிலத்திலுள்ள கிசார் (Hisar) என்னும் நகரில் 3300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 1970–ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 2–ஆம் நாள் தோற்றுவிக்கப் பெற்றது. இது முன்னர்ப் பஞ்சாபு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகவே இயங்கி வந்தது.

வேளாண்மை, கால்நடை மருத்துவம், அடிப்படை அறிவியல், விலங்கின அறிவியல், மனையியல், உடற்பயிற்சி ஆகிய துறைகளுக்காக மொத்தம் ஏழு கல்லூரிகள் அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளன. வேளாண்மைக்காக இரு கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஒவ்வொரு துறையிலும் இளமறிவியல் பட்டத்திலிருந்து ஆய்வுப்பட்டம் வரை மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கப் பணி ஆகியவற்றின் வாயிலாக, இப்பல்கலைக்கழகம் வேளாண்மை வளர்ச்சியில் பெரும் பணியாற்றி வருகிறது. உழவர் பெருமக்களின் வேளாண்மைச் சிக்கல்களை இப்பல்கலைக்கழக அறிவியல் வல்லுநர்கள் தீர்த்திட உதவி செய்கின்றனர். இதன் உதவியாலும் கருத்துரையாலும் கிசார் நகரைச் சுற்றியும் வேளாண்மை வளர்ச்சியடைந்து வருகிறது.

அரியானா வேளாண்மைப் பல்கலைக் கழக நிருவாகக் கட்டடத் தோற்றம்.