ஆங்க்கோ
211
ஆங்காங்கு
டும். தமக்கு நல்லதன்று என்பதைப் பிறர்க்குச் செய்யலாகாது. நெருப்பு ஆகூரா மசுதாவின் சின்னமாகும். தூய்மைப்படுத்தும் நெருப்புக்கு ஈடு இணை கிடையாது. அழியா ஆன்மாவையும் அழியும் உடலையும் பெற்றுள்ள மனிதன் இறந்தபின்னும் இப்போராட்டம் தொடரும். ஆகூரா மசுதாதான் 12,000 ஆண்டுகளுக்குத் தொடரும் இப்போராட்ட இறுதியில் வெல்லும். மசுதாவின் வெற்றி நாளிலிருந்து அமைதி நிலவும். இறந்தோர் உயிர் பெற்றெழுவர். அன்றுதான் கடவுளின் இறுதித் தீர்ப்பு நாள். நல்லோர் விண்ணுலகம் செல்வர். பாவம் செய்தவர்கள் அவரவர் செய்த பாவத்திற்கேற்பத் தண்டனை பெற்றுத் தொல்லை அனுபவித்துப் பாவத்தைக் கழித்து, இறுதியில் விண்ணுலகம் செல்வர்.
சமயத்தலைவர் சொராசுடர், ஆகூரா மசுதாத் தெய்வத்தை மட்டிலும் கொண்ட ‘ஒரு கடவுள் கோட்பாடு’ முறையைப் போதித்தாரா, நல்தெய்வம் ஆகூரா மசுதா, சாத்தான் ஆகிரிமான் இரண்டையும் கொண்ட ‘இருகோட்பாடு’ முறையைப் போதித்தாரா என்பது இன்னும் சிக்கலான பொருளாகவே இருக்கிறது. பாரசீக மன்னராகிய முதலாம் தேரியசு (Darius, கி.மு 521-485), ஆகூரா மசுதாவை வணங்கி, தமது வெற்றிக்கெல்லாம் ஆகூாரா மசுதா தான் துணையென்று கூறி, ஆகூரா மசுதா வழிபாட்டைத் தம் நாட்டுச் சமயமாக்கினார். இச்சமய போதனையெல்லாம் செண்டு அவசுதா என்ற சொராசுடிரிய வேத நூலில் அடங்கியுள்ளன. இன்றும் இந்தியாவில் இச்சமயத்தைத் தழுவுகிறவர்கள் பலர் இருக்கின்றார்கள்.
கி.பி.
ஆங்க்கோ சீன நாட்டு நகரம். இக்காலத்தில் ஊகான் (Wuhan) என்பர். ஆங்கோ (Hankow), ஆன்யாங்கு, ஊசாங்க்கு என்னும் அடுத்தடுத்து அமைந்துள்ள நகரங்களின் கூட்டுப்பெயர் ஊகான் என்பதாகும். இந்நகரங்கள் சீனாவில் ஊப்பே (Hupeh) மாநிலத்தில் உள்ளன. இந்நகரங்கள் அனைத்தையும் அரசியல் வகையிலும் பொருளாதார வகையிலும் ஒரே ஊராகக் கருதுவர். ஊசாங்கு யாங்கிட்சி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. ஆங்க்கோவும் ஆன்யாங்கும் வடகரைப் பட்டணங்கள். ஆன் ஆறு (Han River). ஆங்க்கோவையும் ஆன்யாங்கையும் பிரிக்கிறது. ஆன் ஆற்றில் குறுக்கே கட்டப்பெற்றுள்ள பாலமும் படகுத் துறைகளும் இவ்விரு நகரங்களுக்கிடையேயான போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன. யாங்கிட்சி பாலம், ஊசாங்க்கை ஆன்யாங்குடன் இணைக்கிறது. ஊகான் நகரம் தொழிற்சாலைமையம். சீனப்புரட்சி 1911-ஆம் ஆண்டு இவ்வூரில்தான் பிறந்தது. ஊகாவின் மக்கள்தொகை 42,50,000 ஆகும்.
ஆங்கரேசு நகரம்
ஆங்கரேசு அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான அலாசுகா (Alaska) மாநிலத்தின் மிகப் பெரிய நகரம். அம்மாநிலத்தின் சிறந்த வாணிகப் போக்குவரத்து மையமுமாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைசிறந்த பாதுகாப்பு மையமாகவும் இது விளங்குகிறது. தென் அலாசுகாவில், குக்கு உட்குடாவில், (Cook Inlet) சகாக்கு (Chugach) மலைத் தொடரின் மேற்கில் இந்நகரம் அமைந்துள்ளது. சிப்பு கிரீக்கு என்றும் பின்னர் உட்ரோ என்றும் சொல்லப்பட்ட இவ்வூர் 1915-இல் தான் ஆங்கரேசு என்னும் பெயர் பெற்றது. கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி இங்கு நின்றமையால் நங்கூரம் பாய்ச்சி எனப் பொருள்படும் ஆங்கரேசு (Anchorage) என்னும் பெயர் இதற்குண்டாயிற்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்நகரம் பல்கிப் பெருகியது. ஆங்கரேசு நகரத்திற்குத் தெற்கில் 1957-இல் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டதால் நகரம் மேலும் விரிவாக வளர வாய்ப்பு ஏற்பட்டது. இந்நகரில் 1964-இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் இறந்துபட்டனர். மக்கள் தொகை 1,74,430 (1980).
ஆங்காங்கு சீனாவின் தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஆங்கிலக் குடியேற்றப் பகுதி: உலகின் அழகிய துறைமுகங்களுள் ஒன்று. ஆங்காங்கு (Hongkong) என்னும் சீனமொழிச் சொல்லுக்கு