ஆங்கில இலக்கிய வரலாறு
219
ஆங்கில இலக்கிய வரலாறு
களைத் தாக்கினாலும், சமுதாயச் சீர்குலைவைச் சுட்டிக் காட்டினார். முடி பற்றி (The Rape of the Lock), தான்சியடு (The Dunciad) என்ற கவிதைகளில் இணையடிக் குறளை யாவரும் வியக்கும் வண்ணம் கையாண்டார். அர்பூத்நாட்டுக்குக் கடிதம் (Edpistle to Dr. Arbuthnot) என்னும் நூல் சுயசரிதக் குறிப்புகள் கொண்ட சொல்லோவியமாகும்.
உரைநடை அங்கதத்தை உயர் நிலைக்குக் கொண்டு சென்றவர் சுவிப்ட்டு (Swift, கி.பி. 1667-1754) ஆவர். இவர் எழுதிய ‘நூல்களின் போர்’ (The Battle of the Books) பழைய தலைமுறை ஆசிரியர்க்கும் புதிய தலைமுறையினர்க்கும் நடக்கிற கற்பனைப் போர் வாயிலாக அவர்களின் நிறைகுறைகளை எடையிடுகிறது. ஒரு தொட்டியின் கதை (A Tale of a Tub) சமய வாதிகளைச் சாடுகிறது. கலிவரின் பயணங்கள் (Gulliver's Travels) நான்கு பாகங்களில் மனிதக் குலத்தின் சிறுமையை விவரிக்கிறது. இவர்தம் கவிதைகள் அத்துணைச் சிறப்புடையனவல்ல.
ஆங்கிலப் புதினங்கள் கி. பி. 18-ஆம் நூற்றாண்டில் தலைதூக்கின. இரிச்சர்டுசன் (Richardson) (கி. பி. 1689-1754) தம் பமீலா (Pamela), கிளாரிசா என்னும் புதினங்கள் வாயிலாக, இதற்கு வலுமிக்க அடிக்கல் நாட்டினார். பீல்டிங்கு (Henry Fielding) (கி. பி. 1707-1754) தம் சோசப்பு ஆண்டரூசு, தாம் சோன்சின் வரலாது, அமீலியா ஆகியவற்றின் வாயிலாகப் புதின வளர்ச்சிக்கு மேலும் வழி செய்தார். இசுமாலட்டு (கி.பி. 1721-1771) எழுதிய அம்பிரி கிளிங்கர் (Humphrey Glinker) இதற்குத் துணை செய்தது. இசுடெர்ன் (Sterne, கி. பி. 1713-68) தம் திரிசுடிசம்சாண்டி, ஓர் உணர்ச்சிப் பயணம் (A Sentimental Journey) என்னும் புதினங்களில், புதிய உத்திகளைக் கையாண்டார்.
கிரே (Grey, கி. பி. 1716-71) குறைந்த அளவில் எழுதினராயினும் சிறந்த கவிஞராக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். இவரும் காலின்சு, கோல்டு சுமித்து, கூப்பர், பிளேக்கு (Blake) ஆகியோரும் புனைவியல் இயக்கத்திற்கு முன்னோடிகளாக அமைந்தனர். சான்சனின் (கி. பி. 1709-84) படைப்புகள், திறனாய்வுக் கட்டுரைகளிலும் செவ்வியல் நோக்கிலிருந்து புனைவியல் நோக்கிற்குச் செல்லுதலைச் காணலாம். இவர் பல புலவர்களின் வாழ்க்கைச் சாதனைகள் பற்றிய ‘புலவர்களின் வரலாறுகள்’ (The Lives of the Poets) என்னும் நூலை எழுதினார். சேக்சுபியரின் நிறைகுறைகளைத் தமக்கே உரிய நுண்மாண் நுழைபுலன் கொண்டு முன்னுரை யொன்றில் ஆராய்ந்தார், இராசலசு (Rasselas) என்ற கதையில் பல நீதிகளைப் புகட்டினார். தனியொருவராக அரிதின் முயன்று ஆங்கில அகராதி ஒன்று தொகுத்தார், இவர்தம் இலண்டன், மனித விருப்பங்களின் வியர்த்தம் (The Vanity of Human Wishes) ஆகிய கவிதைகளும் நீதி புகட்டுவதையே தலைமை நோக்காகக் கொண்டவை. இவர் மாணவரான பாசுவெல் எழுதிய சான்சனின் வாழ்க்கை (The life of Samuel Johnson), வாழ்க்கை வரலாற்று நூல்களுள் ஒப்புயர்வற்றது.
புனைவியற் கவிஞர்களுள் மூத்தவர் வோர்ட்சு வொர்த்து (கி. பி. 1770-1850) ஆவர். இவர்தம் டின்டொன் ஆபி (Tintern Abbey), ‘பிரெல்யூடு’ (The Prelude), அமரநிலை அலைகள் பற்றிய இசைப்பாடல் (Ode on the Intimation of Immortality) முதலியவற்றை, இயற்கை அன்னையே இவர் மூலம் எழுதினாள் என்பது தகும், இவர் தம் கவிதைகளுக்கெழுதிய முன்னுரையொன்றில் எச்சொல்லையும் கவிதையில் முறையாகக் கையாள முடியுமென்றும், எளிய நடையே சிறப்புடையதென்றும், சிற்றூர்களில் வாழும் பாமர மக்களே கவிதைக்குரிய சிறப்பான பாத்திரங்களென்றும் வாதிடுகிறார். புனைவியல் இயக்கத்தின் பெரும் சிந்தனையாளர் கோலரிட்சு (கி.பி. 1772-1834) ஆவார். இவர் தம் பயோ கிரேபியா லிடரேரியா (Biographia Literaria) என்னும் நூலில் கற்பனாசக்தி, கவிதை பற்றிய கொள்கைகளைத் தத்துவம், மனோதத்துவம், இலக்கியம் ஆகியவற்றின் துணைக்கொண்டு விளக்குகிறார். இவர்தம் “கிறிசுடபெல்” (Christabel), குப்லாகான் (Kubla Khan), பழைய கப்பலோட்டி (The Ancinet Mariner) என்ற கவிதைகளில் இயற்கை இகந்த நிகழ்ச்சிகளை, நடந்தவை போலத் தம் கவித்திறன் வாயிலாகப் படைத்துள்ளார். பிளேக்கின் அநுபவம் பற்றிய பாடல்கள் (Songs of Experience). சுவர்க்க நரகக் கூட்டு (The Marriage of Heaven and Hell) ஆகிய இரண்டு தொகுப்பும், கள்ளமின்மை பற்றிய பாடல்கள் (Songs of Innocence) என்ற உரைநடை நூலும், இவரது தனித்தன்மையைப் பறை சாற்றுவன. பர்னசு (Burns) என்ற இசுகாட்லாந்துக் கவிஞர் கிராமியப் பின்னணி கொண்ட உழவர்கள் பற்றிய கவிதைகளில் சிறந்து விளங்குகிறார்.
வால்டர் இசுகாட்டு (Sir Walter Scott. கி.பி. 1771-1832) எழுதிய கவிதைகளை விட அவர் தம் வரலாற்றுப் புதினங்கள் புகழ்மிக்கன. அவர் பதினெட்டே ஆண்டுகளில் பல புதினங்கள் எழுதினாராயினும் மிட்லோதியனின் இதயம் (The Heart of Midlothian), இலாமர்மூரின் மணப்பெண் (The Bride of Lammermoor), ஐவன்கோ, கெனில்வோர்த்து. குவெண்டின் தர்வர்டு ஆகியவை பின்னால் வந்த புதின ஆசிரியர்களுக்கு வழிகாட்டிகளாய் அமைந்தன. அவர் எடுத்துக்கொண்ட காலத்து மக்களின்